"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி!


“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள் 

தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் 

ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன்

மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழர் தேசிய சபை

ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

பத்திரிகைகளுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார். மாவைக்கு,

அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக்

கூட்டமைப்பு என்றேல்லாம் அமைப்புகள் கைவசம் இருக்கையில்,

மேலுமொரு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கித்தான்

இதுவரையில் செய்ய முடியாததை சாதித்துக்காட்டப் போவதாக

அவர் புலுடா விட்டுள்ளார்.


இலங்கைத்தமிழ் கட்சிகள் இவ்வாறு அதிரடியாக காலத்துக்காலம்

ஏதாவதொன்றைச் சொல்வதும், பின்னர் அதனைக் கடந்து

செல்வதுமாக இருந்து வருகிறார்கள் என்பது எங்களில்

nரரும்பாலானோருக்கு தெரிந்ததே. எனவே மாவை கூறுவதையும்

பொருட்படுத்தாமல் விடலாம். ஆனால் கடந்த ஓகஸ்ட் 5ந ; திகதி

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னர் மாவை

இப்போது வேலையெதுவுமற்ற அரசியல்வாதி. மீண்டும் அரசியலில்

பேசும் பொருளாக இருப்பதற்காக இவர் போன்றவர்கள்

எந்தவிதமான பிற்போக்குத்தனமான கோசங்களையும் கையில்

எடுக்கக் கூடியவர்கள். இது மக்களை அழிவுப்பாதையில் கொண்டு

சென்றுவிடலாம் என்பதுபற்றி மாவை போன்ற தமிழ் தேசியவாத

அரசியல்வாதிகள் எந்த அக்கறையும் கொள்ளமாட்டார்கள்.


தமிழர் தேசிய சபையை உருவாக்கும் முயற்சியொன்று பற்றி ஆறு

ஆண்டுகளுக்கு முன்னரும் செய்திகள் வெளிவந்தது பலருக்கும்

ஞாபகமிருக்கலாம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு

கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுவதற்குரிய யாப்பு ஒன்றைத்

தயாரிப்பது, பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து

ஒரு தேசிய சபையை உருவாக்குவது, வடமாகாண சபையின்

செயற்பாடுகளை கட்டுக்கோப்பான முறையில் முன்னெடுத்துச்

செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது போன்ற தீர்மானங்கள்,

அப்போது த.தே.கூவின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஒன்றில்

நிறைவேற்றப்பட்டிருந்தன.


இந்தத் தமிழர் தேசிய சபை பற்றி பேச்சுகள் எழுந்த

போதெல்லாம், ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இருக்கவில்லை

என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் தேசிய

சபை பற்றி சலசலத்தார்கள். பின்னர் ஐ.தே.க தலைமையிலான

நல்லாட்சியில் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, மீண்டும்

தொடங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு அரசியல் செய்ய வழியேதும்

கிடைக்காத வேளைகளில் இனம், தேசியம், மொழி, மதம்,

பிரதேசம், சாதீயம், பால் போன்றவற்றைக் கையில் எடுத்து,

அரசியல் செய்ய முனைவதில் கைதேர்ந்தவர்கள்

உலகெங்கிலுமுள்ள வலதுசாரிகள்.

1989 ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவராக இருந்த

அ.அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போதே,

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த

அமிர்தலிங்கத்திற்குப் பதிலாக, மாவை முதன்முதலில்

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதேபோலவே 1999 

ஆண்டு நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில்

கொல்லப்பட, அவரது இடத்திற்கு பாராளுமன்றத்தின் தேசியப்பட்டியல்

உறுப்பினராக மாவை அமர்த்தப்பட்டார். அதிலிருந்து அவர்

தொடர்ச்சியாக 21 வருடங்களாக பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண

மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.


பொதுவாக வலதுசாரி அரசியல் கட்சிகளின் தலைமைப்

பீடத்திலுள்ளவர்கள் முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தலில் தோல்வி

கண்டபிறகு, அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில்

இருப்பதில்லை. இதனை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பிடமும் காணலாம். எப்போதுமே தேர்தல்

மோசடிகள் மூலம் தாங்கள் தோல்வியுற்றதாகவே உடனடியாக

அறிக்கைகள் விடுவார்கள். இதற்கு மாவையும் விதிவிலக்கல்ல.

தேர்தலிற்கு முன்னரும், மாவைக்கு சுமந்திரன் தரப்பினருடன் விருப்பு

வாக்குகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக பூசல்கள் இருந்தன.

தேர்தலின் பின்னர், விருப்பு வாக்குகளில் சுமந்திரன் மோசடி

செய்துவிட்டாரென்றும், தேர்தலில் தோற்ற தனக்கு தேசியப்பட்டியல்

வாயிலாகவும் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை

என்றவுடன், தமிழரசுக் கட்சிக்குள்ளும் சதி வேலை நடந்துள்ளதாகவும்

ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர்

தோற்றபோது, பாராளுமன்ற வேலைவெட்டியை இழந்தனர். இருவரும்

தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சியென வெவ்வேறு கட்சிகளாக

இருந்தாலும், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தனர்.

உடனடியாக தோல்வியை கூட்டாக (கூட்டணியாக) எதிர்கொள்ள

முடிவு செய்தனர். அத்தோடு தோல்வியிலிருந்து தாங்கள் மீண்டு

வருவதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சாரந்தான் தனிநாட்டுக்

கோரிக்கை. இந்த ஜனரஞ்சக வெற்றுக் கோசம் வடக்கு, கிழக்கு

தமிழர்களிடையே இலகுவாக எடுபட்டது. அதுவரையிலிருந்த தந்தை

செல்வாவின் அகிம்சைக் கோரிக்கை தோற்றுப் போய்விட்டதாக

மக்களை நம்பப்பண்ணினார்கள். இதன் விளைவு உள்நாட்டு யுத்தம்,

இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் இடப்பெயர்வும் என, பாரிய

அழிவை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கின்றது. அதிலிருந்து மக்கள்

இன்னமும் முற்றாக விடுபடவில்லை.


புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் கணிசமானோர்,

எப்போதுமே பிற்போக்குத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்

கருத்தியலின் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் வாழும்

முதலாளித்துவ ஜனநாயக நாடுகளிலுள்ள பொரும்பாலான தேர்தல் 

கட்சிகளிடையே, இன-மத சார்பற்ற பரப்புரைகளே பிரதான

பங்கை வகித்து வருகின்றன என்பதை இவர்களில் பலர் தெரிந்து

வைத்திருந்தாலும், இலங்கை விவகாரத்தில் அதற்கு எதிரான

நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். அதாவது தீவிர தேசியவாதம்

பேசுவோரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள நாடு கடந்த தமிழீழப்பிரிவினர்,

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில்

தீவிரமாயிருப்போர், முன்னாள் புலிப்போராளிகள் போன்ற சக்திகளே

மாவை கூறும் தமிழர் தேசிய சபையின் பிரதான இலக்கு.

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நீண்டகால

இனப்பிரச்சனைக்கான தீர்வு, தமிழ், தமிழர், தமிழீழம், தேசியம்

போன்ற சொற்களின் கலவையில் புதிய, புதிய அமைப்புகளை

தோற்றுவிப்பதிலிருந்து ஆரம்பிப்பதல்ல. இது வெறுமனே, தமிழ்

பிற்போக்கு அரசியலுக்கு புதிய கலர் அடிக்கும் வேலையேயன்றி,

வேறொன்றுமல்ல.

Source: Vaanavil 119 Editorial 


No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...