Friday, 8 May 2020

வியட்நாம் எவ்வாறு கொரோனா நோயைக் கட்டுப்படுத்தியது? -ஜோஷுவா ஹாங்க்ஸ்


கியூபா, சீனா, கேரள மாரநிலம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழிநடத்தப்படும் நாடுகளில் பொது சுகாதாரத்துக்கும் பொது மக்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிப்பதால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றைவிட குறைவாகவே இருக்கின்றது. சோசலிச வியட்நாம் குடியரசு கூட, உலகின் மற்றைய இடங்களை விட இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளது. ஏறத்தாழ 100
மில்லியன் சனத்தொகை கொண்ட வியட்நாமில் ஏப்ரல் 06ஆம் திகதிய
நிலவரப்படி 245 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன்
யாரும் இறக்கவுமில்லை. (worldometres.info/coronovires) இடதுசாரி குழுவல்லாத உலகப் பொருளாதார அரங்கு (World Economic Forum)  மார்ச் 30ஆம் திகதி வெளியிட்ட கட்டுரையொன்றில் சில விபரங்களை வெளியிட்டுள்ளது.

15 டொலர் மட்டுமேயான செலவில் மிகவும் விரைவாக ஒரு மணித்தியாலத்தில் முடிவுகளைத் தரக்கூடிய சோதனைக் கருவியொன்றை (வுநளவ முவை) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான
வியட்நாமிய பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இந்தக் கருவியை
பல்லாயிரக்கணக்கில் பெறுவதற்கு 20 வரையிலான நாடுகள் வேண்டுகோள்களை அனுப்பியுள்ளன.அதேநேரத்தில் இந்த கொரோனா வைரசை மருத்துவ முறைகள் அல்லாத வழியில் கட்டுப்படுத்தும் முறைகளிலும் வியட்நாம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ருவரி 01ஆம் திகதியிலிருந்து சீனாவுக்கான சகல விமான சேவைகளையும் இரத்துச் செய்துள்ளதுடன், லுனார் புது வருடத்தின்
பின்புவரை பாடசாலைகளை மூடி வைக்கவும் முடிவு செய்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் முதன்முதல் பரவிய சீனாவின் வு+ஹான்
மாகாணத்தில் பணிபுரியும் பலரைக் கொண்ட தலைநகர் ஹனோய்க்கு
வடக்கேயுள்ள வின் பூ மாகாணத்தை 21 நாள் தனிமைப்படுத்தலுக்கும்
உட்படுத்தியது.

வியட்நாமுக்குள் வரும் ஒவ்வொருவரையும் 14 நாட்கள்  தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியதுடன், எல்லா வெளிநாட்டு விமான சேவைகளையும் இரத்துச் செய்தது. தனிமைப்படுத்தும் நிலையங்கள்
நகரங்களின் எல்லைப்புறங்களில் அமைக்கப்பட்டதுடன், வெளிநாட்டு
விருந்தினர் உட்பட அங்கு தங்க வைக்கப்பட்ட சகலருக்கும் 100 வீதம்
மருத்துவ கவனிப்பு, உணவு, தங்குமிட வசதி என்பன அளிக்கப்பட்டன.

சன் ரே என்ற இடத்திலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் தங்கியிருந்த ஒரு பிரித்தானியப் பிரஜை தனது அனுபவத்தை பின்வருமாறு
விபரித்தார்:

“எல்லாமே சடுதியாக மிகவும் மனிதத்தன்மையுள்ளதாக மாறியது. ஒரு
நாடு என்ற வகையில் அவர்கள் சிறந்த முறையில் தம்மைப் பாதுகாத்தது
மட்டுமின்றி, விருந்தாளிகளான எம்மையும் அதே வகையில் பாதுகாத்தார்கள். அதுதான் வியட்நாமின் இயற்கையான நல்ல தன்மை. வெளியில் எல்லாமே அமைதியாக இருந்தன. நாம் தங்கியிருந்த இடமும் அமைதியாக இருந்ததுடன், படையினர் ஓய்வு ஒழிச்சல் இன்றி தினசரி
அறைகளை தொற்று நீக்கம் செய்வதிலும், எமது உடல் வெப்ப நிலையைக்
குறிப்பதிலும், குப்பைகளை அகற்றுவதிலும் ஈடுபட்டனர்.

சொல்லப்போனால் இந்தத் தனிமைப்படுத்தும் நிலையம் ஒரு விடுமுறை முகாமின் தன்மையை எமக்கு ஏற்படுத்தியது எனலாம். எமது அறையில்
நாம் சிற்றுண்டிகளையும், பழங்களையும் பங்கிட்டு உண்டதுடன், வெளியிலுள்ள எமக்கு விருப்பமானவர்களிடமிருந்து அன்பளிப்புகளையும் பெற ஆரம்பித்தோம்” (VNExpress International March 17 இந்த தனிமைப்படுத்தல் முகாம்களில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாதவர்களும் இருந்தனர். அயலில் எங்காவது நோய்த் தொற்று காணப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ள வீதிகள் அனைத்தும் தொற்று நீக்கம் செய்யப்படுவதுடன், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இருவார காலம் தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு இலவசமாக சுத்தமான உணவு மற்றும் மருத்துவக் கவனிப்பு என்பனவும் வழங்கப்படுகிறது.

வியட்நாமுக்கு மார்ச் 5 முதல் 17 வரை பயணம் மேற்கொண்ட உலகத்
தொழிலாளர் கட்சியின் (Workers world Party) உறுப்பினரான Susan Schnur கூறுகையில், வியட்நாமிய விமான நிலையங்களில் பரிசோதனைகள்
அமெரிக்காவை விட கூடுதலாகவும் கண்டிப்பான முறையிலும்
மேற்கொள்ளப்படுவதாகவும், கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி அகற்றும் திரவம் கிராமப்புறங்கள் உட்பட எங்கும் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக மக்கள் “மிகவும் மகிழ்ச்சி;”
அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கப் போரிடுவதில் வியட்நாம் சமூக
ஊடகங்களையும் தகவல் தொழில்நுட்பத்தையும் கூட நன்கு பயன்படுத்துகிறது. வியட்நாமிய மக்கள் தொகையில் 90 வீதமானோர் நவீன
கைத்தொலைபேசி வைத்திருக்கின்றனர். இந்த ஊடகங்கள் மூலம் அரசாங்கம் புதிதாக நோய் பரவியுள்ள பிரதேசங்கள், சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக எப்படி சரியான முறையில்
கைகளைக் கழுவுவது என்பதைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக
இலகுவில் விளங்கக்கூடிய இசை வீடியோ ஒன்றை வியட்நாமிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2002 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 45 மில்லியன் வியட்நாமிய
மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 1990இல் இருந்து
2015 வரையான காலகட்டத்தில் மக்களின் சராசரி ஆயுள் 71 வருடங்களில் இருந்து 76 வருடங்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ளதை விட அதிகரித்த வீதத்திலும் செலவு குறைவாகவும் வியட்நாமின் நோய்த் தடுப்பூசி முறை இருப்பதுடன், பின் தங்கிய பகுதிகளுக்கும் சிறுபான்மை இனங்கள் வாழும் பகுதிகளுக்கும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் வியட்நாம் வளர்ச்சி அடைந்த மற்றும் பணக்கார நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
(இந்தக் கட்டுரை Workers' World  என்ற பத்திரிகையில் Joshua Hanks  என்பவர் ஏப்ரல் 08, 2020இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து
எடுக்கப்பட்ட பகுதிகளாகும்)

Source Vaanavil Journal 112 April 2020

No comments:

Post a comment

Mosque prayer ban in Bradford 'breach of worshippers' human rights'- Telegraph & Argus

A BAN on a mosque opening for Friday prayers due to the Covid-19 pandemic is a breach of worshippers' human rights, the High Court has...