கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ


“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ
விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள மகிந்த ராஜபக்ஸ, ஒக்ரோபர் 26 நியமனத்தை (பிரதம மந்திரியாக) பற்றி கடைசி நிமிடம் வரை தன்னைத்தான் நியமிக்கப் போகிறார் என்று தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். ராஜபக்ஸ மேலும் தெரிவிப்பது பரந்த அளவில் நடத்தப்படும் அரசியல் கருத்துக்கு முரணாக தான் எஸ்எல்.பி.பி (பொஹொட்டுவ) கட்சியின் அங்கத்துவத்தைப் பெறவில்லை என்று.

ஒரு தேசிய சிங்கள வார இதழான “இரிதா லங்காதீப” உடன் பேசுகையில் ராஜபக்ஸ சொன்னது எஸ்எல்.பி.பி அங்கத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக ஊடகங்களில் விநியோகிக்கப் பட்ட புகைப்படம் அங்கத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் படமல்ல, ஆனால் எஸ்எல்.பி.பி யில் இணைவதற்கான விண்ணப்பப் படிவத்தை கையளிக்கும்போது எடுக்கப்பட்டது என்று. “நான் கையில் பிடித்திருந்த ஆவணம் எனது பெயர் அதில் அச்சடித்திருக்காத காரணத்தினால் அது ஒரு அங்கத்துவ அட்டை அல்ல. இப்போது சபாநாயகருக்கு ஒரு முடிவுக்கு வரலாம். இன்னமும் நான் ஸ்ரீ.ல.சு.க வின் ஒரு ஆயுட்கால அங்கத்தவன். நான் அந்தக் கட்சியின் பாதுகாவலன் கூட மற்றும் ஒரு பாதுகாவலன் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஒக்ரோபர் 26 முதல் இன்று வரை நடைபெற்ற முழு அத்தியாயத்தையும் பற்றி ஒரு வினளக்கத்தை தரும்படி அவரிடம் கேட்டபோது, “ எதுவும் விசேசமாக நடைபெறவில்லை. அப்போது இருந்த அதே ராஜபக்ஸதான் இப்போதும் தொடர்ந்து இருக்கிறார்”என்று அவர் சொன்னார்.
ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனுக்கு எதிரான அவருடைய எதிர்க்கட்சித் தலைமைப்பதவி தொடர்பான சமீபத்தைய விவாதம் பற்றிக் கேட்டபோது, “அவருக்கு (சம்பந்தன்) விரும்பிய எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கலாம்” என்று அவர் பதிலளித்தார்.
பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது குறித்துக் கேட்டபோது, “ யார் சொன்னது பெரும்பான்மை இல்லை என்று? பெரும்பான்மை அங்கு உள்ளது ! ஆனால் சில பேர் மீது சில தாக்கங்கள் ஏற்படும் என்கிற காரரணத்தால் அதைச் சமர்ப்பிக்க முடியவில்லை” என்று அவர் சொன்னார்.
கேள்வி: பணம் ஒரு பிரச்சினையாக இருந்ததா?
ராஜபக்ஸ: “ இல்லை, பணம் மட்டுமில்லை, யாரையும் சேரும்படி நான் அழைக்கவில்லை. வெளிநாட்டில் இருந்த சில ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நாடு திரும்பியதும் என்னுடன் வந்து இணைவதாகச் சொல்வதற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பெயர்களை என்னால் வெளியிட முடியாது – ஐதேக வுக்கு உள்ளிருந்த வேறு சிலர் அவர்கள் இணைவதற்கு அவர்களிடம் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள்”.
கேள்வி: பிரதமர் பதவியிலிருந்து நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள்?
ராஜபக்ஸ: “நீதிமன்றம் அதைப்பற்றி ஜனவரி 16 – 17ல் தீர்மானிப்பதாக இருந்தது மற்றும் அதுவரை என்னால் இருந்திருக்க முடியும். ஆனால் நாடு நிச்சயமற்ற ஒரு நிலைக்குச் செல்வதை என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”.
கேள்வி: ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை அவர் பிரதமராக இருப்பதற்கான சட்டத்தன்மை பற்றி தெரிவிக்கும் ஒரு வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
ராஜபக்ஸ: அவருக்கு அது ஒரு பிரச்சினையில்லை. – அவர் தன்னுடைய பிரதமர் பதவியைப் பாதுகாப்பதற்காகவே அலரி மாளிகைக்குச் சென்றார். இது நடந்தபோது அவர் 5ம் ஒழுங்கையில் வசித்திருந்தார் மற்றும் எனது நியமனம் மேற்கொள்ளப்பட்ட உடனேயே அவர் அலரிமாளிகைக்குச் சென்று “நான்தான் பிரதமர்” என்று பிரகடனம் செய்தார் – தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழிகளில் வித்தியாசமானவர்கள்.
கேள்வி: சிலர் சொல்கிறார்கள் நீங்கள் பொறுமையாக இருந்திருக்கலாம் மற்றும் மற்றொரு ஒன்றரை வருடங்களுக்கு காத்திருக்கலாம் என்று….
ராஜபக்ஸ: ஆம், சிலர் அதைச் சொல்கிறார்கள்தான். அப்படிச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐதேக வைச் சேர்ந்தவர்கள்.
கேள்வி: அப்படியான காத்திருப்பு சிறந்தது என்று நீங்கள் எண்ணவில்லையா? இது உங்களை கீழே தள்ளிவிடவில்லையா?
ராஜபக்ஸ: இல்லை எப்படியாயினும் அது ஒரு பின்னடைவு மட்டுமே. ஸ்ரீ.ல.சு.க, ஐதேக உடன் மணம் புரிந்து ஒரு பயணத்தை (வித்தியாசமான) ஆரம்பித்ததில் இருந்தே எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் போரை நாங்கள் ஆரம்பித்திருந்தோம். ஆனால் இந்த ஒக்ரோபர் சம்பவத்துடன் ஸ்ரீ.ல.சு.க – ஐதேக விவாகத்தை நாங்கள் உடைத்து விட்டோம். ஸ்ரீ.ல.சு.க வினைத் திரும்பவும் ஒரு ஐதேக விரோத, காலனித்துவ விரோத மற்றும் மக்கள் சார்ந்த ஒரு சக்தியின் அடையாளம் என்ற அது இருந்த வழமையான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
கேள்வி: உங்கள் அடுத்த படி என்ன?
ராஜபக்ஸ: ரி.என்.ஏ மற்றும் ஜேவிபி போல எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தைப் பற்றி போலி விமர்சனங்களைச் செய்து பாசாங்கு காட்டாமல் நாங்கள் உண்மையாகவே எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்தை எதிர்ப்போம். ரி.என்.ஏ மற்றும் ஜேவிபியைப் போல அல்லாமல் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம். நாங்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்க மாட்டோம்.
கேள்வி: நீங்களும் மற்றும் ஜனாதிபதியும் சேர்ந்து சதி செய்ததாகவும் மற்றும் அது தோற்கடிக்கப் பட்டதாகவும் ஜேவிபி சொல்கிறதே ….
ராஜபக்ஸ: என்ன சதி? ஜேவிபிக்கு மக்களின் ஆணை கிடையாது மற்றும் அவர்கள்தான் சதி செய்கிறார்கள். ஐதேக வினைப் பாதுகாக்கவும் மற்றும் அரசாங்கங்களை நிறுவுவதற்கும்தான் ஜேவிபிக்கு மக்கள் ஆணை வழங்கினார்களோ என்று எனக்குத் தெரியாது. ஜேவிபிக்கு வாக்களித்தவர்கள் ஒரு ஐதேக விரோத நிலையையே ஜேவிபியிடம் எதிர்பார்த்தார்களே தவிர ஐதேக வினை நீடிக்கச் செய்யும் ஜேவிபியின் பாத்திரத்துக்கு அல்ல என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: ரி.என்.ஏ மற்றும் ஜேவிபி என்பன எதிர்க்கட்சியில் உள்ளன. ஆகையால் உங்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாதா?
ராஜபக்ஸ: சபாநாயகர் தனது இறுதி முடிவினை குரல் வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்குகிறார். அவர் தவறான குரல்களையே கேட்பார். எங்கள் குரல்களைக் கேட்கமாட்டார்.
கேள்வி: நீங்கள் ஒரு தேர்தலை அறிவிக்கும்போது, தேர்தல் ஆணையக அதிகாரிகள் நீதிமன்றம் சென்று நடவடிக்கை மேற்கொள்கிறார்களே?
ராஜபக்ஸ: ஆம், அவர்களை சுதந்திரமான ஆணைக்குழுக்கள் என்று அழைப்பதில் அர்த்தமில்லை. இந்தக் குழுக்களின் ஒப்பனையை வெறுமே (நெருக்கமாக) பாருங்கள். பிரதமர் விக்கிரமசிங்காவுக்கு முன்பாக ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அந்த உரையில் ஜனாதிபதி அவரை எச்சரிக்கை செய்துள்ளார் மற்றும் சில தீவிரமான குற்றச்சாட்டுகள் அதில் உள்ளன – ஜனாதிபதி தகுதியான நபர்களை ஆணைக்குழு அங்கத்தவர்களாகவும் மற்றும் நீதிபதிகளாகவும் நியமித்தார் ஆனால் அவர்கள் பிரதமர் விக்கிரமசிங்காவினால் அகற்றப்பட்டு விக்கிரமசிங்காவின் சொந்த தெரிவான நபர்களே அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். இது ஒரு தீவிரமான குற்றச்சாட்டு மற்றும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. ஜனாதிபதி மேலும் குற்றம் சாட்டியுள்ளது பிரதமர் விக்கிரமசிங்கா ஜனாதிபதியின் அதிகாரங்களை அபகரித்து அவற்றை பிரதமருடையதாக்கியுள்ளார் என்று. ஜனாதிபதி சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் எதனையும் பிரதமர் விக்கிரமசிங்கா நிராகரிக்கவில்லை.
கேள்வி: இந்தப் பாராளுமன்றத்துக்கு இன்னும் 13 மாதங்களுக்கு வாழ்நாள் உள்ளது. அதன்பின் ஜனாதிபதிக்கு அதைக் கலைக்க இயலுமா?
ராஜபக்ஸ: இந்தப் பாராளுமன்றம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது.
கேள்வி: எவ்வளவு காலம்?
ராஜபக்ஸ: சுமார் ஆறு மாதமோ அல்லது அதற்கு முன்போ அதன் ஆயுள் முடியும் – நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகைளை அவதானிக்கும்போது இதைத்தான் எங்களால் காணமுடியும்.
கேள்வி: பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நீங்கள் பிரேரணை கொண்டு வருவீர்களா?
ராஜபக்ஸ: நாங்கள் எப்படி கொண்டுவருவது? ரிஎன்ஏ மற்றும் ஜேவிபி என்பன எப்படி பிரதிபலிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. அவர்களைத் தவிர பாராளுமன்றில் உள்ள ஏனைய பிரிவுகள் அதைக் கலைப்பதற்கு ஆதரவு தருவார்கள் என்று எங்களால் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி: போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்று வரலாற்றில் உங்களுக்கு ஒரு இடம் உள்ளது. அதே போல 50 நாள் பிரதமர் என்கிற ஒரு பெயரும் வரலாற்றில் உங்களுக்கு கிடைத்துள்ளது…
ராஜபக்ஸ: அது சரி. அதுவும் கூட ஒரு சாதனைதான். இங்கு நான் நிரூபித்துள்ளது எனது தன்னம்பிக்கையை. ஒரு ஜனாதிபதியாகவும் அதேபோல ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் என்னால் இருக்க முடியும். இந்த இரண்டு நிலைகளிலும் நான் இருந்துள்ளேன் மற்றும் அது என்னிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
கேள்வி இந்த 50 நாட்களில் நாட்டிற்கு நீங்கள் ஏதாவது சாதனைகளைப் பதிவு செய்துள்ளீர்களா?
ராஜபக்ஸ: ஆம், நிச்சயமாக – இந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் வழங்கிய வரி நிவாரணங்களின் எண்ணிக்கையை நீங்கள் கவனித்தீர்காளா. நாங்கள் வாழ்க்கைச் செலவைக் குறைத்தோம், எரிபொருள் விலையைக் குறைத்தோம் – ஆனால் மிகவும் முக்கியமான சாதனை என்னவென்றால் இந்த அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைச் சாதனையை எங்களால் முடிவுக்கு கொண்டுவர இயலுமாக இருந்தது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எங்களால் தகர்க்க முடிந்திருக்காவிட்டால் நவம்பர் 7ல் ஒரு பெடரல் அரசியலமைப்பு யதார்த்தமாகியிருக்கும்.
கேள்வி: ஒக்ரோபர் 26 நியமனத்துக்கு எத்தனை நாட்கள் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப் பட்டிருந்தன?
ராஜபக்ஸ: நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நடைபெற்றிருக்கும் – நான் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து எண்ணுவதானால், நான் ஜனாதிபதி சிறிசேனவை நான்கு தடவைகள் மட்டுமே சந்தித்துள்ளேன். மற்றும் அந்தக் குறிப்பிட்ட நாளில் நான் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியாது.
கேள்வி: அந்த நடவடிக்கை எப்படி ஆரம்பமானது?
ராஜபக்ஸ: தோழர் வாசுதேவ நாணயக்கார என்னை அழைத்து தகவல் அறிவித்தார். அதன்பின் அந்த நடவடிக்கையில் எஸ்பி, லக்ஷ்மன் வசந்த பெரோ, டிலான் பெரோ மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இணைந்து கொண்டனர். பின்னர் தோழர் வாசுதேவ வந்து பதவி ஏற்றுக்கொள்ளும்படி என்னை அழைத்தார் மற்றும் நான் அதை நிராகரித்து விட்டேன். நான் நேரடியாகவே நிராகரித்து விட்டேன். அதன்பின் அவர்களிடம் நான் சொன்னேன் நான் இதைக் கட்சியின் முன் வைக்கப் போகிறேன் என்று. இத்தகைய முடிவுகளை நான் தனியாக எடுக்க மாட்டேன். நான் மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மூன்று முறை ஜனாதிபதியைச் சந்தித்தேன்.
கேள்வி: ஜனாதிபதியை நீங்கள் எங்கு சந்தித்தீர்கள்?
ராஜபக்ஸ: அந்த விபரங்களைக் கேட்காதீர்கள். அவற்றை வெளிப்படுத்த முடியாது.
கேள்வி: ஜனாதிபதிக்கும் மற்றும் உங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு எப்படி?
ராஜபக்ஸ: எங்களுக்கு இடையில் மிக நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவருடனான எனது பரிச்சயம் 1970ல் ஆரம்பமானது. 2014ல் எங்களுக்கு இடையில் ஒரு பிரச்சினை உருவானது. அவர் என்னை விட்டு பிரிந்து சென்று வெற்றி பெற்றார். என்னுடன் இருந்து பிரிவதற்கு அவர் எடுத்த முடிவு சரியானது – ஒரு சந்தர்ப்பம் வந்தது அவர் அதை எடுத்துக் கொண்டார். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் காணவில்லை. இது மக்களின் ஒரு பிரச்சினை. மக்கள் எனக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக மற்றப் பக்கம் வாக்களித்தார்கள். வெற்றியை போலவே தோல்வியையும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் பின்னர் அது ஒரு பிரச்சினையாக மாறிவிடும்.
கேள்வி: ஜனாதிபதி சிறிசேன திரும்பவும் உங்களை பொறியில் விழுத்திவிட்டார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
ராஜபக்ஸ: இல்லை நான் அப்படி நினைக்கவில்லை – நான் ஒரு பொறியில் அகப்படவில்லை. அது ஒரு பொறியாக இருந்தால் அதில் நான் விழுந்தது என்னுடைய தவறின் காரணமாகவே அன்றி அவரது திறமை காரணமாக அல்ல. குறிப்பாக ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் நான் ஒரு பொறியில் அகப்படவில்லை.
கேள்வி: சட்ட ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ராஜபக்ஸ: எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முடிவுடன் சம்மதம் இல்லை. இருந்தும் அந்த முடிவு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்ததால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எப்படியாயினும் இதன் அர்த்தம் ஜனாதிபதி ஒரு தவறு செய்துள்ளார் என்பதல்ல. ஜனாதிபதி கூட தான் நல்ல நம்பிக்கையில்தான் அதைச் செய்ததாகச் சொல்லியுள்ளார். முடிவை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை தான் மக்களிடம் அளித்ததாக அவர் சொல்லியுள்ளார்.
கேள்வி: ஜனாதிபதி அதை நல்ல நம்பிக்கையின் பேரில்தான் செய்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ராஜபக்ஸ: நிச்சயமாக ஆம். அவரது முடிவு சட்டவாளர்களின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மக்களிடம் அதை வழங்காமல் 127 பாராளுமன்ற அங்கத்தவர்களிடம் வழங்கியுள்ளது. இந்த முடிவுடன் எங்களுக்குச் சம்மதமில்லை ஆனால் இருந்தும் அதை நாங்கள் அதை மதிக்கிறோம்.
கேள்வி: இத்தனை அவசரமாக நீங்கள் பிரதமர் நியமனத்தை ஏற்றுக்கொண்டது உங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளை கடப்பதற்காகவா?
ராஜபக்ஸ: இதில் முற்றிலும் உண்மையில்லை. அவர்கள் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் நிலங்களை வெளிநாட்டுத் தளங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். பின்னர் பெடரல் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இவற்றைக் குறை கூறி வந்தோம். அப்போ எப்படி இந்த முன்னேற்றங்களை கைவிட முடியும்? அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் மட்டுமே இது முடியும். எங்களுக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினோம். உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை அந்தக் கணமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் எதிர்க்கட்சியில் இருப்பதில் பயன் ஏதுமில்லை. நாட்டினைப் பாதுகாப்பதற்கே நாங்கள் இந்த முடிவினை எடுத்தோம். இதே வாய்ப்பு சம்பந்தனுக்கு வழங்கப்பட்டால் அவர்கூட அதைச் செய்யமாட்டாரா?
கேள்வி: இந்தமுறை கூட சர்வதேச சமூகம் உங்களுக்கு எதிராக உள்ளதே – ஏன் அவர்கள் உங்களுடன் இத்தனை எதிர்ப்பாக உள்ளார்கள்?
ராஜபக்ஸ: 2015 தேர்தலில்கூட இதேபோல சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. அதைப்பற்றி நான் வெளிப்படையாகவே கண்டனம் செய்தேன். இந்த முறை இராஜதந்திரிகள் பாராளுமன்றக் கலரியில் அமர்ந்துகொண்டு கைதட்டல் நடத்தினார்கள். கேள்வி என்னவென்றால் இது பொருத்தமான ஒரு நடவடிக்கையா? 2015 தேர்தல்களின்போது அமெரிக்க வெளியுறவுச் செயலாளர், மூன்று நாடுகளில் உள்ள அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு சுமார் அறுநூறு மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டதாகச் சொன்னார், அவற்றில் ஒன்று ஸ்ரீலங்கா. பின்னர் பிரித்தானிய பிரதமர் இந்த பெருமையில் ஐக்கிய இராச்சியம் கூட பங்குகொள்ள வேண்டும் என்று சொன்னார். நீங்கள் சரியாக ஆராய்ந்தால் எங்கள் நாடு 1948க்கு முன்பிருந்த காலத்துக்குப் போயுள்ளது. இன்று மன்னார் புதைகுழிகளைக்கூட வெள்ளைக்காரன் தோண்டுகிறான். ஸ்ரீலங்காவின் தற்போதைய சூழ்நிலை வெறும் ஒரு அரசியல் பார்வையைவிட பரந்த கோணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
கேள்வி: இத்தகைய சூழ்நிலையின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
ராஜபக்ஸ: அரசியல் கண்ணோட்டத்தில் நாங்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிரானவர்கள். ஆனால் வெளிநாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையின் கீழ் எங்களுக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையாக உள்ளது.
கேள்வி: எதை நீங்கள் முதலில் தேடுவீர்கள் – ஒரு பொதுத் தேர்தலையா அல்லது ஜனாதிபதி தேர்தலையா?
ராஜபக்ஸ: பொதுத் தேர்தல் தொடர்பாக முதலில் செல்வதே எல்லாவற்றிற்கும் சிறப்பாக இருக்கும், பின்னர் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லலாம்.
கேள்வி: ஜனாதிபதி சிறிசேன உங்கள் அனைவருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவா?
ராஜபக்ஸ: இல்லை. ஜனாதிபதிக்கும் மற்றும் எனக்கும் இடையிலான தனிப்பட்ட கலந்துரையாடல்களில் அவர் ஒருமுறை கூட தான் போட்டியிட இருப்பதாக என்னிடம் குறிப்பிடவில்லை. அப்படித் தெரிவிக்கும்படி ஜனாதிபதியிடம் சிலர் தெரிவித்தபோது இது பொருத்தமான நேரம் அல்ல என்று அவர்களுக்கு ஜனாதிபதி பதிலளித்தது பற்றி நான் அறிந்துள்ளேன். அதற்கு இன்னமும் நேரம் உள்ளது.
கேள்வி: சில காலத்துக்கு முன்பு கோட்டபாயா ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டதே?
ராஜபக்ஸ: பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பெயர்கள் உச்சரிக்கப் பட்டுள்ளன. கோட்டபாயா ராஜபக்ஸ, வெல்கம, மேர்வின் சில்வா…. பாருங்கள் எத்தனை சக்தி வாய்ந்த பெயர்கள் கூறப்பட்டுள்ளன. நான் ஒருவன் மட்டும்தான் முன்னுக்கு வந்து நான் போட்டியிடப் பொகிறேன் என்று சொல்லாத ஒருவன்.
கேள்வி: எவ்வாறு நீங்கள் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திப்பீர்கள?; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாகவா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகவா?
ராஜபக்ஸ: நாங்கள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுவோம்.
கேள்வி: ஸ்ரீ.ல.சு.க வில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு தாவியுள்ளார்கள் – இன்னும் பலர் தயாராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது?
ராஜபக்ஸ: அரசாங்கத்தின் பக்கம் கட்சி மாறியவர்கள் எவரும் தங்கள் விதிகளை தங்கள் கைகளிலேயே எடுத்துச் சென்றுள்ளார்கள்.
கேள்வி: பசில் ராஜபக்ஸவின் ஆதரவின் குறைவு காரணமாகத்தான் பாராளுமன்றில் உங்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டமுடியாமல் போனதா?
ராஜபக்ஸ: இந்தக் கருத்துடன் நான் உடன்பட மாட்டேன். நாங்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதாக இருந்தால், நாங்கள் ஒரு முழுக் கட்சியாக அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பசிலுக்கு இருந்தது. வேறு சிலர் முஸ்லிம் கட்சிகளை உடைத்து அவர்களைப் பிரிவுகளாகச் சேர்க்க விரும்பினார்கள். இருந்தும் இன்னொரு சூழ்நிலையில் எங்களுடன் இருந்த மற்றொரு பிரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றவர்களிடம் “எங்கள் பக்கம் வராதீர்கள் ஏனென்றால் நாங்கள் உங்கள் பக்கம் வரவுள்ளோம். நாங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை இருந்தும் எங்கள் பக்கம் உள்ள சுமார் 10 – 12 பேர் அரசாங்கத்தில் இணைவதாக உள்ளோம். ஆகவே இந்தப் பக்கம் வந்து பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள” என்று அவர்களிடம் சொல்லியுள்ளார்கள்.
கேள்வி: எதிர்காலத்தில் அவர்களுடன் எப்படி வேலை செய்வீர்கள்?
ராஜபக்ஸ: என்னுடன் வேலை செய்வது சிரமமானது அல்ல. இதெல்லாம் எனக்கு பெரிய பிரச்சினையில்லை. யாராவது எங்கள் பக்கத்திலிருந்து போட்டியிட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, நாங்கள் அவர்களுக்கு அதே வழிகளில் சமமாக உதவி செய்வோம்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: ஏசியன் டிரிபியூன்)
Source:Thenee.com 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...