தமிழ் தேசிய கூட்டமைப்புவடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமது வாக்கு வங்கியில் பெரும் சரிவை கண்டுள்ளது. கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சி 42.8% வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் நடந்த இந்த உள்ளாட்சி தேர்தலில் அதன் வாக்கு சதவிகிதம் 25.4% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது பாரம்பரியமான வாக்களிப்பு முறையில் இருந்து இந்த தேர்தலில் வெளியேற முயற்சித்துள்ளனர் என்பதையே இந்த வாக்கு வீழ்ச்சி காட்டுகின்றது.அதாவது கடந்த தேர்தலில் இந்த கட்சிக்கு வாக்களித்த 210,304 பேர் இம்முறை வாக்களிக்கவில்லை.
இந்த வாக்கு வீழ்ச்சியில் பலவேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் 3/4 வடகிழக்கு மக்கள் தமிழ்தேசிய கூட்டமைபின் மீதான தமது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
வெறுமனே 24.4 % வாக்குகளை பெற்ற ஒரு கட்சி வடகிழக்கில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இனிமேலும் தம்மை கூறிக்கொள்ள முடியுமா? என்பதுதான் அடுத்ததாக எழப்போகின்ற கேள்வி.
பி.கு: மாவட்ட ரீதியாக ததேகூ வின வாக்கு வங்கி நிலவரம் அடுத்தடுத்த பதிவுகளில்...

Source: Raj Selvapathy 's FB
No comments:
Post a Comment