உள்ளூராட்சி தேர்தலின் பின் நாட்டில் நாட்டில் அரசியல் - நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் அபாயம்!-சயந்தன்


இலங்கையில் 2018 பெப்ருவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்@ராட்சி
சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நாட்டில் பெரும்
அரசியல் - நிர்வாகச் சீர்குலைவும் அதனால் நாட்டில் அரசியல்
ஸ்திரத்தன்மையின்மையும் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம், 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலின் போதும்
அதன் பின்னரும் நாட்டில் உருவாகி வந்த அரசியல் சூழ்நிலைகளே. 2015
ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் போது மேற்கத்தைய ஏகாதிபத்திய
சக்திகள் இலங்கையிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் தமது
நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கிய சதித் திட்டத்துக்கு
உதவியதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக குமாரதுங்கா , மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு வழிவகுத்தனர். நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் விருப்புக்கு மாறாக உருவாக்கிய இந்த ஆட்சி மாற்றம் நாட்டை பல வழிகளிலும் சீரழித்துள்ளது.

   
                                       


இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் அரசியல், பொருளாதாரää
கலாச்சாரக் கொள்கைகள் வேகமாக மேற்கத்தையமயமாக்கப்பட்டு
வருகின்றன. முன்னைய அரசால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித்
திட்டங்கள் யாவும் கைவிடப்பட்டுள்ளன. விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் ஏறியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாக்கள் வெளிநாட்டுக்கடன்
அநியாய வட்டிக்குப் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கான வட்டியைச்
செலுத்துவதற்கு நாட்டின் வளங்கள் அந்நியருக்கு குறைந்த விலையில்
தாரைவார்க்கப்படுகின்றன. கல்வியைத் தனியார்மயப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்வி நிலையங்களில் அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதால் ஊடகத்துறை பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி நிற்கிறது.

‘நல்லாட்சி’ என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில்
மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட பலவிதமான ஊழல்களும்
மோசடிகளும் ஏற்பட்டு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபா நஸ்டம்
ஏற்பட்டுள்ளது. தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கி அவர்களது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அவர்களது எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முற்படவில்லை. தமக்கு எதிரானவர்களைப் பழி வாங்குவதிலேயே அரசாங்கம் முழுநேரமும் ஈடுபட்டு வருகின்றது. இந்தச் சூழ்நிலைகளின் பிரதானமான காரணகர்த்தாக்கள் மைத்திரி, சந்திரிக இருவருமே. அவர்கள் இருவரும்  சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய – எதிர்ப்பு, ஐக்கிய தேசிய கட்சி – எதிர்ப்பு
கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுää படுபிற்போக்கு
வலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவுடன் சேர்ந்து ஆட்சி; அமைத்ததின் மூலம்
சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் இழைத்தனர். அதன் மூலம் நாட்டில்
அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற ஒரு நிலையை உருவாக்கினர்.


                                                      சயந்தன் 

ஆனால் நல்லவேளையாக சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கைகளையும் நாட்டையும் நேசித்த சக்திகள் மைத்திரி – சந்திரிக
குழுவின் சதித் திட்டத்துக்கு உடன்படாததினால்,  அவர்கள் பொது
எதிரணி என்ற ஒரு அணியை உருவாக்கி செயற்பட ஆரம்பித்தனர்.
அந்த அணி தற்போதைய உள்@ராட்சித் தேர்தலில் முன்னாள்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான சிறீலங்கா
பொதுமக்கள் முன்னணி (SLPP) என்ற கட்சியின் சார்பில் தாமரை
மொட்டுச் சின்னத்தில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த அணியின் தோற்றத்தால் தென்னிலங்கை அரசியலில் புதிய நிலை ஒன்று தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிää ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரண்டு பிரதான போட்டி அணிகளும்ää மூன்றாவது ஸ்தானத்தில் ஜே.வி.பியும் இருந்து வந்தன. ஆனால் சிறீலங்கா பொதுமக்கள் முன்னணியின் வருகையுடன் இந்த நிலை மாற்றமடைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஐ.தே.கவின் பிரதான போட்டியாளன் சுதந்திரக் கட்சியா அல்லது பொதுமக்கள் முன்னணியா என்ற நிலை தோன்றியுள்ளது. அதேநேரத்தில் இவ்வளவு காலமும் மூன்றாவது நிலையில் இருந்த ஜே.வி.பி.
நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Image result for election symbol of podujana peramuna


தற்போதைய கள நிலவரப்படி ஐ.தே.க., சுதந்திரக் கட்சி என்பனவற்றை விட பொதுமக்கள் முன்னணிக்கே தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிய வருகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பல சபைகளில் ஐ.தே.க,  சுதந்திரக் கட்சி, பொதுமக்கள் முன்னணி என்பன ஏறக்குறைய சமமான உறுப்பினர்களைப் பெறக்கூடும்.
அப்படியான ஒரு நிலை தோன்றுமாயின் உள்@ராட்சி சபைகளில் நிரவாகத்தை அமைப்பதில் சிக்கல் தோன்றலாம். பல சபைகளில் இன்னொரு அணியின் ஆதரவுடனேயே நிர்வாகத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியான சில சபைகளில் ஜே.வி.பியின் ஆதரவும் சில
வேளைகளில் தேவைப்படலாம். அதேநேரத்தில் இந்த நிலைமையால்
வேறு வகையான சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு.

அதாவது ஒரு சபையில் ஒரு கட்சி நிர்வாகத்தை அமைத்தால்,  சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மற்றைய இரண்டு அணிகளும் இணைந்து அதைத் தோற்கடிக்கலாம். ஏற்கெனவே
தென்னிலங்கையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே சில சபைகளில்
எதிர்க்கட்சியுடன் இணைந்து வரவு செலவுத் திட்டம் போன்ற முக்கிய
விடயங்களில் ஆளும் கட்சியைத் தோற்கடித்த நிகழ்வுகள் அரங்கேறி
இருக்கின்றன. இது முன்னொருபோதும் இல்லாத நிலைமை. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் நிர்வாகத்தை அமைக்க முடியாத
நிலையை உருவாக்கிய பொறுப்பு சந்திரிக, மைத்திரி இருவரையுமே
சாரும். அவர்கள் தமது சுயலாபம் கருதியும்,  மேற்கு நாடுகளின் சதிக்கு
ஆளாகியும் சுதந்திரக் கட்சியில் ஏற்படுத்திய பிளவால்தான் இந்த
நிலை தோன்றியுள்ளது. அவர்கள் இருவரும் தனிப்பட்ட ஒரு மகிந்த ராஜபக்சவை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்த இந்தச்
செயலால் நாட்டின் அடிமட்ட நிர்வாகத்தின் அத்திபாரமாகவும்,
ஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஒரு
ஸ்திரமற்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். இதனால் பாதிக்கப்படப்
போவது அவர்கள் அல்ல.

வழமைபோல சாதாரண மக்களே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
இதைத் தடுப்பதற்கான ஒரேயொரு வழி இத்தேர்தலில் உண்மையான
ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியாகப் போட்டியிடும் உண்மையான சுதந்திரக்
கட்சியினர்,  இடதுசாரிகள், தேசியவாதிகள் அடங்கிய சிறீலங்கா
பொதுமக்கள் முன்னணிக்கு மக்கள் பெரும்பான்மையான ஆதரவை
அளித்து அவர்கள் தலைமையில் இடையூறின்றி உள்ளூராட்சி சபைகளை
இயங்க வைப்பதுதான். இல்லாவிடின் தற்பொழுது நாட்டில் உருவாகியுள்ள
அரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரமின்மை மேலும் மோசமடையவே செய்யும்.

நன்றி: வானவில் இதழ் 85 ஜனவரி 2018 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...