வடக்கின் உள்ளூராட்சி தேர்தல் நிலைமை - புனிதன்


2018 பெப்ருவரி 10ஆம் நாளன்று 2018 இலங்கையில் நடைபெறவுள்ள
உள்ளூராட்சி    சபைகளுக்கான தேர்தலில் வட மாகாணத்தில் தமிழ்
அரசியல் கட்சிகள் பல்வேறு அணிகளாகக் களம் இறங்கியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புää ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)ää
தமிழர் விடுதலைக் கூட்டணி - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இணைந்த அணிää தமிழ் தேசிய மக்கள் முன்னணிää தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்பன அவற்றுள் சிலவாகும். இவை தவிர தெற்கின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சில தேசியக் கட்சிகளும் வடக்கில் போட்டியிடுகின்றன.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இம்முறை
நடைபெறும் தேர்தல் வடக்கைப் பொறுத்தவரை சற்று வித்தியாசமான
சூழலிலேயே நடைபெறுகின்றது.

அதற்குக் காரணம், தமிழரசுக் கட்சியை பிரதான அங்கமாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி எடுத்துள்ள அரசியல்
நிலைப்பாடாகும். மிக நீண்டகாலமாக தமிழ் தலைமைகள் தென்னிலங்கையில் இருந்த அரசுகளுக்கு எதிரான ஒரு தீவிர நிலைப்பாட்டையே தமது அரசியல் (தேர்தல்) உத்தியாகப் பயன்படுத்தி வந்தன. அவர்களது அந்த உத்தி தேசிய இனப் பிரச்சினையால்
பாதிப்புக்குள்ளாகி இருந்த தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பலனைக் கொடுத்தது. அதன் காரணமாக நாடாளுமன்றத்
தேர்தல்களின் போது அவர்களுக்கு அது நல்ல அறுவடையைக் கொடுத்து
வந்துள்ளது.

ஆனால் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தற்போதைய தமிழ் தலைமை 2015 ஜனவரி 8இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முதல் கொண்டு முன்னைய தமிழ் தலைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபாடான ஓர் அரசியல்
நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. அந்தத் தேர்தலின் பின்னர்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்செயலாகக் கிடைத்த உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி பதவியை வைத்துக்கொண்டும் கூடää தமிழ்
தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஓர் அங்கத்துவக் கட்சி போலவே
செயற்படுகிறது.



முன்னைய காலங்களிலும் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமது வர்க்க
நிலைப்பாடு, ஏகாதிபத்திய சார்பு நிலை என்பன காரணமாக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகச் செயற்பட்டு வந்தாலும்ää இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையைப் போல இவ்வளவு வெளிப்படையாகவும், நெருக்கமாகவும் அரசுடன் செயற்பட்டதில்லை.
முக்கியமாக கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர்களான
சம்பந்தன்ää மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரின் தீவிரமான அரசு
சார்பு நிலைப்பாடுää தமிழ் பொதுமக்கள் மத்தியிலும்ää பங்காளிக் கட்சிகள்
மத்தியிலும் கணிசமான எதிர்ப்பலைகளைத் தோற்றவித்துள்ளது.
அதன் காரணமாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான
ஈ.பி.ஆர்.எல்.எப். அதிலிருந்து வெளியேறி இன்னொரு அணி அமைத்துப்
போட்டியிடுகின்றது. எஞ்சியுள்ள புளொட், ரெலோ என்பனவும் தமிழரசுக்
கட்சி மீது கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றன.

இப்படியான ஒரு சூழ்நிலையில் வடக்கின் உள்@ராட்சித் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு பலரின் ஆவலைத் தூண்டி விட்டுள்ளது. மக்கள் இன்னமும் போதிய அரசியல் விழிப்புணர்வும், வரலாற்றுப் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளாததால்ää வழக்கம் போலவே தமிழரசுக் கட்சி தலைமைதாங்கும் அணி கூடுதலான வெற்றியைப் பெறும் என்ற கணிப்பே பலரிடம் காணப்படுகின்றது.
அதற்குக் காரணம் “தமிழரின் ஒற்றுமையை ஓரணியாக நின்று உலகத்துக்குக் காட்ட வேண்டும்” என்ற மந்திர வார்த்தையை தமிழ்த் தலைமை எப்பொழுதும் பயன்படுத்தி வருவதுதான்.இந்த வார்த்தைகளை அவர்கள் அரசை எதிர்த்துக் கொண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்ää அரசை ஆதரித்துக் கொண்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மக்களோ அவர்களது இந்த இரட்டை நாடகத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள


இருப்பினும் இம்முறைத் தேர்தல் முடிவுகள் சற்று வித்தியாசமாக
அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்மையான தமிழ் தேசியவாத
சக்திகளிடமும்ää ஜனநாயக சக்திகளிடமும் ஓரளவு காணப்படுகின்றது. அதற்கு அரசியல் ரீதியான காரணிகளும் அமைப்புரீதியிலான காரணிகளும்
ஏதுவாக உள்ளன.  அரசியல் ரீதியிலான காரணியை எடுத்து நோக்கும் போதுää தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசு சார்புப் போக்கை
பல்வேறு தமிழ் தேசியவாத அணிகளும்ää உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
உள்ள புலி சார்பு சக்திகளும் கடுமையாக எதிர்ப்பதால்ää அந்த எதிர்ப்பு
மக்கள் மத்தியில் அரசியல் வினைத்திறனாக மாறி நடைபெறவிருக்கும் உள்@ராட்சித்  தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக மாறும் சாத்தியக்கூறு உண்டு.

அமைப்பு ரீதியிலான காரணியை எடுத்து நோக்கினால்ää இந்தத் தேர்தலில்
போட்டியிடும் அணிகளில் ஈ.பி.டி.பி. கட்சியைத் தவிர்ந்தää மற்ற எல்லா
அணிகளும் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
கொள்கையையே கொண்டிருப்பவை. அதுமட்டுமின்றிää அவற்றில் சில கட்சிகள் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவை. சில கட்சிகள் அதில் அங்கம் வகிப்பதற்கு இப்பொழுதும் விரும்புபவை. சில
தனிப்பட்ட அல்லது பதவி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அவை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனி அணியாகப் போட்டியிடுகின்றன. எனவே இந்த அணிகள் எல்லாமே தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் வாக்கு வங்கியைத்தான் பங்கிடப் போகின்றன. எனவே இதன் காரணமாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள்
சிதறடிக்கப்பட்டுää அது இத்தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கலாம்.
இத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலையில் வடக்கில் தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு எதிராக அல்லது ஒரு மாற்றாக எழுந்து நிற்கும்

மூலம்: வானவில் இதழ் 85  ஜனவரி  2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...