புதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி? கலாநிதி.தயான் ஜயதிலக



“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”
மேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனைdayan jayatilake-1கள்’ என்பதில் பக்கம் 72ல்)
ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.

 தேசிய பிரச்சினை அல்லது தேசியவாதிகளின் பிரச்சினை என்பது என்ன? அது எங்கள் கலவைகளில் ஒன்றும் மற்றும் அரசியல் ரீதியாக எம்முடன் போட்டியிடும் கூட்டு அடையாளமும் ஆகும். இன்னும் அடிப்படையாக தற்போதுள்ள கேள்விகளுக்கு அது இன்றிமையாத ஒன்றாகிறது: ஸ்ரீலங்கா என்றால் என்ன. எப்படி ஒரு சிறந்த ஸ்ரீலங்காவாக அதனால் வரமுடியும்? ஸ்ரீலங்கவாசி என்கிற ஒழுங்குக்கு நாம் வருவதற்கு எப்படி அரசாங்கத்தை கட்டமைப்பு செய்;யவேண்டும்?
எல்லாவற்றையும் அவர் சரியாக புரிந்துகொள்ளாவிட்டாலும் (உதாரணமாக, ஜனாதிபதி முறைமையையும் மற்றும் சுனாமிக்கு பின்னான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பு (பி.ரி.ஓ.எம்.எஸ்) சார்ந்த அவரது பிரமைகள் என்பனவற்றையும் கூறமுடியும்) கூட ஜனாதிபதி சிறிசேன ஜனவரி, 9ல் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அரசியலமைப்பை மாற்றும் நடவடிக்கைகளில் ஆரம்பித்து, வடக்கு – தெற்கு பிரச்சினைக்கு தான் என்ன செய்துள்ளேன் என்பதை தெரிவிப்பதில்  ஒரு இராஜதந்திரிக்கு உள்ள தைரியத்தை காண்பித்தார். ஒரு மேட்டுக் குடி அல்லது பிரபுத்துவ தன்மையில் இல்லாது உள்நாட்டில் வளர்க்கப்பட்ட கரிமத் தன்மையானதைப் போல சிங்கள பௌத்த பன்மைத்தன்மையான – தாராண்மைவாதத்தை அவர் வெளிப்படுத்தினார், அதில் டி.எஸ் சேனநாயக்க, ஜனாதிபதி பிரேமதாஸ, மற்றும் விஜய குமாரதுங்க போன்றோரின் எதிரொலிகளும் மற்றும் பிரதிபலிப்புகளும் இடம் பெற்றிருந்தன. சில முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட்டால் இந்தப் பிரசங்கத்துக்கு பன்முக முற்போக்குவாதம் மற்றும் புதிய மையவாத கருத்தொருமிப்பும் மற்றும் ஒருங்கிணைவுக்கான ஒரு மேடை அமைந்திருக்க முடியும்.

பிரதமரின் உரைக்குப் பின் இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேனவின் பேச்சு, அதிக அந்தஸ்து, முதிர்ச்சி மற்றும் தீவிரம் என்பனவற்றை கொண்டுள்ள திரு.விக்கிரமசிங்காவைக் காட்டிலும் தான் முக்கியமானவர் என்பதை தெளிவாக விளக்கியது. வெகு புத்திசாலித்தனமாக உரையை ஆரம்பித்த பிரதமர், விரைவிலேயே பண்பு சார்ந்த குழப்பங்களையும் மற்றும் பிரதான விடயத்துக்கு அப்பாற்பட்ட மலிவான விடயங்களையும் பேசி அதைச் சிதைத்து விட்டார். மாறாக ஜனாதிபதி சிறிசேன அந்த செயல்திறனை வெளிப்படுத்தும்போது கடினமான முறையில் தார்மீக உயர் தன்மையை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் பேசாவிட்டாலும், (திரைக்குப் பின்னால் தலையீடுகளை மேற்கொண்ட) பிரதமரின் அரசியல் நடத்தை காரணமாக அரசியலமைப்பு முயற்சிகள் ஒரு கண்ணிவெடியினால் தாக்கப்படும் நிலையை அடைந்திருக்கும். சிறிசேனவின் பேச்சில், தவறவிட்ட வாய்ப்புக்களான பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் பற்றிய புலம்பல்களும் இருந்தன, அதன் மதிநுட்பமான உட்குறிப்பு நாங்கள் தமிழர் பிரச்சினைகளை கட்டாயம் தீர்க்கவேண்டும் என்பதாக இருந்தது, அதேவேளை திரு.சம்பந்தன் தமிழர் சமூகத்தின் அரசியல் தலைவராக உள்ளார்.

அப்படிச் சொல்வதுடன், பிரசங்கங்கள் முக்கியமாக உள்ள அதேவேளை ஜனாதிபதியின் நல்ல ஒரு பேச்சு நல்ல விளைவுகளைத்தான் ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல ஒரு பேச்சை பின்தொடரும் தீமையான அரசியல் மற்றும் கொள்கைகள் அந்தப் பேச்சைக்காட்டிலும் மோசமானதாக இருக்கும். சந்திரிகா ஓகஸ்ட் 2000 ல் பாரளுமன்றித்தில் ஆற்றிய உரையின்படி, அனுருந்த ரத்வத்த இயக்கிய இராணுவ வெற்றிக்கு உலகளாவிய ஆதரவை பெறும்படி லக்ஷ்மன் கதிர்காமரை ஈடுபடுத்தியதன் மூலமோ அல்லது கருணாவின் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அதைப் பின்பற்றியிருந்தால் அவரது கருத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். மாறாக விவேகமோ மற்றும் பகுத்தறிவோ இல்லாத வகையில் நோர்வேயினரையும் மற்றும் நோபல் பரிசு வெற்றியாளரான மார்ட்டி அதிசாரியையும் திருப்பி அனுப்பினார்.

ஜனாதிபதி சிறிசேன ஸ்ரீலங்காவில் உள்ள தேசியத்துவ பிரச்சினையின் ஒரு சுருக்கமான வரலாற்றை தேடியெடுத்துள்ளதுடன் அந்த பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் என தான் அடையாளம் கண்டு அதை பிரதானப்படுத்தியுள்ளார்: வடக்குக்கு ஒற்றையாட்சி என்றால் ஒவ்வாமை மற்றும் தெற்குக்கு சமஷ்டி என்கிற பதம் ஒவ்வாமை. இதற்கு நான்கு சாத்தியமான வழிகளுண்டு அவற்றில் இரண்டு ஆரம்பிக்கப்படாதவை. அந்த நான்கும் பின்வருபவவை:  (1) பெயரில் இல்லாமல் அனைத்திலும் சமஷ்டியான ஒரு முறை (2) பெயரில் இல்லாமல் அனைத்திலும் ஒற்றையாட்சி முறை (3) பெயரில் அல்லாது பாதி சமஷ்டி முறை (4) நியாயமான மாகாண சயாட்சியுடன் கூடிய ஒற்றையாட்சி. அரசின் குணாதிசயத்துக்கான வரைவிலக்கணத்தில் மௌனம் பாலிப்பது ஒரு ஐந்தாவது தெரிவு அல்ல, ஆனால் மேலே குறிப்பிட்ட நான்கு முறைகளில் இருந்து ஒன்றை பிரிப்பது ஆகும்.

யதார்த்தம் இரண்டு பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது: முதலாவது,  நகரங்களில் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்த சக்தி வாய்ந்த எல்லை கடந்த பிரிவினைவாத கிளர்ச்சியை, பலவந்தமான இராஜதந்திர முயற்சி மற்றும் 70,000 வலிமையான அமைதி காக்கும் படை என்பனவற்றை நிலைநிறுத்திய பிராந்திய வல்லரசினால் ஸ்ரீலங்காவை 13வது திருத்தத்துக்கு அப்பால் முன்தள்ள முடியவில்லை. இரண்டாவதாக மே 2009ல் பெற்ற தீர்க்கமான இராணுவ வெற்றி மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் என்பனவற்றால் கூட அதிகாரப் பரவலாக்கத்தை 13வது திருத்தத்துக்கு கீழேதான் இழுக்க முடிந்தது. இதில் உள்ள பாடம் என்னவென்றால் இந்த தீவின் சமூக அரசியல் அடிப்படைத் தட்டுகள் கட்டளையிடும் ஒரு தீர்வு என்னவென்றால் 13வது திருத்தத்தை மறு சீரமைப்பு அல்லது மறு கட்டமைப்பு செய்யவேண்டும் என்பதையே ஆனால் உள்நாட்டு உறுதியை குலைக்கும் வகையில் அதைத் தாண்டிச் செயல்பட முடியாது என்பதையே.
இது சித்தாந்த தத்துவங்களுக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். இதைத்தான் காரணம் எதுவுமின்றி மனித குலத்தின் இரண்டு ஆழ்ந்த சிந்தனையாளர்களான புத்தர் மற்றும் அரிஸ்ரோட்டில் ஆகியோர் முறையே மத்தியபாதை மற்றும் தங்கக் கருத்து என்னும் பதங்களால் வாதிட்டுள்ளார்கள். மத்தியபாதையானது சமஷ்டி மற்றும் ஒற்றiயாட்சி என்பனவற்றுக்கு இடைப்பட்ட கணிசமான அளவில் மாகாண சுயாட்சியுள்ள ஒரு ஒற்றையாட்சி அரசாங்கம். இதற்கான மாதிரிகளைக் காண்பதற்கு பிரதமர் சொன்ன ஒஸ்ரியாவுக்கு நாம் போகத் தேவையில்லை ஆனால் துல்லியமாக தென் ஆபிரிக்காவை பார்வையிடலாம் - அது சமஷ்டி அல்லாத (மண்டேலா அந்த முத்திரையை குத்த மறுத்துவிட்டார்) ஆனால் மாகாண சுயாட்சியை கொண்டது.

அரசியலமைப்பு மாற்றத்துக்கான நிலைப்பாடுகளின் நிபந்தனைகள் ஜனாதிபதி சிறிசேனவின் ஐதேக கூட்டாளிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தெற்கு – தெற்கு முரண்பாடுகளை விளைவிக்கக்கூடிய சமாந்தரமான முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி உள்ளபோது வடக்கு – தெற்கு நல்லிணக்கம் எப்படி உருவாகும். இராணுவ நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை புலிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் தவிர்க்க முடியாதபடி யுத்தக் குற்ற விசாரணைகள் பிரபலமான யுத்தம் மற்றும் பெரிய இராணுவம் என்பன இலக்கு வைக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளபோது சுயாட்சியின் அடிப்படையிலான நல்லிணக்க நடவடிக்கை சிங்கள தாராண்மைவாதத்தில் எப்படி வெற்றிபெற முடியும்? அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை அத்தகைய ஒரு எதிர்ப்பை  ஜனவரி 8 முகாமுக்கு கூட தூண்டியிருக்குமாயின், சர்வதேச சக்திகளுடன் கூடிய ஒரு விசேட நீதிமன்றம் (ஐநா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சியாட் அனுமதித்தது)  விசாரணை செய்யப்போகும் கசப்பான போர் அகழிகளைப் பற்றி சற்று கற்பனை செய்து பாருங்கள். யுத்தக் குற்றங்கள், தீர்ப்பாயங்கள் என்பனவற்றுக்காக வாக்களிக்கும் கட்சிகள் சமூகத்தினரின் அழுத்தங்கள் காரணமாக அடிப்படையிலேயே பிளவை எதிர்கொள்ள நேரிடும். தெற்கில் முன்னணி ஒன்று திறக்கப்படும் அதேவேளை வடக்கு – தெற்கு முன்னணியை எப்படி சமாதானப் படுத்துவது? அது எப்போதும் சுயாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் என்பனவற்றுக்கு இடையிலான தெரிவாக இருக்கும்.

ஜனாதிபதி சிறிசேனவின் மிதவாத சிங்கள பௌத்தம் கூட ரி.என்.ஏயினால் நிச்சயமாக இல்லாது ஒழிக்கப்படலாம். யாழ்ப்பாண ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ் சிறிதரன் வடக்கு கட்சிகளினதும் மற்றும் அதற்கு ஆதரவு தரும் வட்டாரங்களின் ஆட்டத் திட்டத்தை ஞ}யிறு வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்.
“…. ஆகவே இந்தச் சூழ்நிலையில் சமஷ்டி கட்டமைப்பு தமிழரின் இறையாண்மை என்பனவற்றின் அடிப்படையிலான தீர்வு ஒன்றை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் மற்றும் இந்தியா என்பன எங்கள் போராட்டத்தை நசுக்குவதில் பெரும் பங்கினை வகித்தன. அதனால் எங்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். அவர்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமற் போனால் நாங்கள் பிரிவதற்கான நிபந்தனைகளை அவர்கள் உருவாக்க வேண்டும் (வீரகேசரி, ஜனவரி 03, 2016)
ஜனாதிபதியின் முன்னோக்குகளின் பலவீனம் இலட்சிய வகையான தாராண்மை சீர்திருத்தத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. யதார்த்தமான தாரண்மை சீர்திருத்தவாதம் (உதாரணமாக: கிளின்டன், ஒபாமா, கெரி) வெற்றி பெற்றது, இலட்சிய தாராண்மை சீர்திருத்தவாதம் (உதாரணம்: காட்டர், விபி சிங்) தோல்வியடைந்தது. ஸ்ரீலங்காவில் உள்ள இன்றைய யதார்த்த தாராண்மை சீர்திருத்தவாதம் என்பதன் அர்த்தம்:

(1)அதிகார சமநிலைக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்கவைப்பது.
(2)தமிழ் நாட்டின் நிரந்தர பூகோள அரசியல் மற்றும் தற்போதுள்ள அச்சுறுத்தல் என்பனவற்றை அங்கீகரித்தல்.
(3)தமிழ் மற்றம் முஸ்லிம் சுயாட்சிக்கான அளவுருவின் சிவப்பு வரைகளை தெளிவாக வரைதல்.
(4)இராணுவம், போர் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தனிமைப் படுத்துதல், மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளினூடாக இராணுவம் - பிக்குகள் - கும்பல் அச்சு ஒன்றை உருவாவதை தவிர்த்தல்.
(5)புலம் பெயர்ந்தவர்கள் செல்வாக்கினைக் கொண்ட மேற்கினைச் சமப்படுத்தம் வகையில் இந்தியா – சீனா – யப்பான் – ரஷ்யா என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆசிய அடையாளம் ஒன்றுக்கு மாறுதல்.

ஜனாதிபதி ஜெயவர்தனாவினால் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியுடன் (1986 பி.பி.சி) மற்றும் இந்தியா (1984 – 1987)  மேற்கொண்ட தனது உடன்படிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் அவர் பிரதான நீரோட்டத்தில் உள்ள சிங்கள தேசியவாதத்தின் தலைவரான நாட்டின் முன்னாள் தலைவர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் வாக்குரிமையை பறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிளவு படுத்தினார் அதன் காரணமாக கெடுதல் நடவடிக்கையை தூண்டிவிட்டார். 1986ல் ஜே.ஆர், திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமையை மீள வழங்கியபோது நிலமை ஏற்கனவே உறதியற்றதாக மாறிவிட்டது. 1980ன் மறுசீரமைப்பு முழுவதும் திருமதி பண்டாரநாயக்காவின் அவசியத்தை நிலைநிறுத்தியது.

சிங்கள தேசியவாதத்தின் முறையான வரலாற்றுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸதான். எந்தவொரு நிலையான அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் தெற்கு தேசியவாதத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்துக்கு அவரது ஆதரவு முன்னிலையாக உள்ளது அல்லது தீங்கற்றதாக அவர் நடுநிலை வகிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அவர் நடை முறையில் ஒரு வீட்டோ அதிகாரம் கொண்டவராக உள்ளார். ஒரு யதார்த்த ஆய்வுக்கு பதிலாக அது அவரை ஒரு சீரற்ற அதிகார மையம் மற்றும் தவிர்க்கமுடியாத பேச்சு வார்த்தை பங்காளியாக அங்கீகரித்துள்ளது, ஆனால் அரசாங்கம் சரியாக எதிர்த்திசையில் துன்புறுத்தல் மற்றும் நகைப்பிற்குரிய அச்சுறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தகைய ஆத்திரமூட்டல்கள் ஆழ்ந்த எதிர் விளைவுகளைக் கொண்டவை. தெற்கு இல்லாமல் ஒரு தேசிய கருத்தொற்றுமை கிடையாது மற்றும் மகிந்த இல்லாமல் தெற்கில் ஒரு கருத்தொற்றுமை உருவாக வாய்ப்பில்லை.

திரு.சம்பந்தன் அறிவுநுட்பத்துடன் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவை கோரியுள்ளார், ஆனால் அது தீங்கற்ற ஒரு அழைப்பாகவும் இருக்கலாம். அது நியாயமான எல்லை, நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, கட்டமைப்பான கலந்துரையாடல்கள், சலுகைகள் மற்றும் வசதியான உடன்படிக்கைகள் என்பனவற்றை கொண்டிருக்க வேண்டும். ஒரு சர்வசன வாக்கெடுப்பில் சிங்களப் பெரும்பான்மை மகிந்த ராஜபக்ஸவின்  ஒப்பதல் இல்லாத ஒரு இன மறுசீரமைப்புக்கு வாக்களிக்கும் எனக் கணிப்பிடுவது அவரை எதிர்ப்பவர்கள் முட்டாள்தனமாக விளையாடும் ஆபத்தானதொரு சூதாட்டம். வடக்கு – தெற்கு நல்லெண்ணத்திற்கு தெற்கு – தெற்கு நல்லிணக்கம் அவசியம் அதன் அர்த்தம் தற்போதைய ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ ஆகியோரிடையே உண்மையான நல்லிணக்கம் அல்லது நீடித்த சமாதான சகவாழ்வு அவசியம் என்பதாகும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 Source: http://www.thenee.com/220116/220116-1/220116-2/220116-3/220116-3.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...