நல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்”


 -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை விண்ணில் பறக்கிறது. வேலையின்மை கடுமையாக உயர்ந் துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதல பாதா ளத்தில் விழுந்து கிடக்கிறது.விவசாயம், தொழில், நெசவு என அனைத்துத் துறைகளும் கடும் சிரமத்தில் உள்ளன. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மக்களின் கவ னத்தை திசை திருப்புவதற்காகவும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கா கவும் மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.


ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை உடைத்ததோடு, அந்த மாநிலத்திற்கு குறைந்தபட்ச சலுகைகள் வழங்கிய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததற்கான நடவடிக்கையை நாடாளு மன்றத்தின் கடந்த கூட்டத் தொடரில் மோடி அரசு எடுத்தது. இதனால் அந்த மாநிலத்தில் மயான அமைதி நிலவுகிறது. ராணுவத்தின் முற்று கையில் சிக்கியுள்ள அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. தொலைத் தொடர்பு சேவைகள் முழுமை யாக முடக்கப்பட்டுள்ளன. ஆனால் தான் எடுத்த தவறான நடவடிக்கையை நியாயப்படுத்துவதி லேயே மோடி அரசு முனைப்பாக உள்ளது. இந்த நிலையில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடி கெடுக்கும் சட்டத்தால் அசாம், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. இந்தச் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் அரசியல் சாசனத்திற்கு விரோத மான இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாமில் கடந்த சில நாட்க ளாக பெரும் கலவரம் நடந்து வருகிறது.போராட் டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் வன்முறை வெடித்து வருகிறது. காஷ்மீரைப் போல ராணுவத்தை குவிப்பதன் மூலம் பிரச்ச னையை தீர்க்க மோடி அரசு முயல்வது விபரீ தத்தையே அதிகரிக்கிறது. மக்களிடையே பகைமையை வளர்க்கவே மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டம் வழி வகுத்துள்ளது. இப்போதேனும் அரசியல் சாச னத்திற்கு விரோதமான குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் பெற மோடி அரசு முன் வரவேண்டும். இந்த விஷயத்தில் காட்டப்படும் முரட்டுத் தனமான பிடிவாதம் நாட்டுக்கு நல்லதல்ல.

Source: Theekkathir

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...