தினக்குரல் பத்திரிகையின் விசமத்தனம்!

“ராஜபக்சாக்களுக்கு ஐ.எஸ். ஊடன் தொடர்பா?”
அல் பக்தாதியின் கொலையை கண்டிக்காதது ஏன்? ரணில் கேள்வி 


கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் மின்பதிப்பை
(e-paper)  தினசரி பார்ப்பவர்கள் அங்கு ஒரு விசமத்தனம் இருப்பதைக்
கண்டுகொள்ள முடியும். அதாவது, இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெற்றது. அது நடைபெறுவதற்கு முன்னர் எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சவுக்கும் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவருக்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணியினர் மட்டுமின்றி, பல ஊடகங்களும் முன்னின்று பல பொய்யானதும் விசமத்தனமானதுமான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.

இந்தப் பிரச்சாரங்களில் சிங்கள, ஆங்கில ஊடகங்களை விட தமிழ்
ஊடகங்களே முன்னணியில் நின்றன. முக்கியமாக கொழும்பிலிருந்து
வெளியாகும் தினக்குரல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு
சொந்தமான உதயன் என்பனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்
அந்த வகையில் தேர்தல் தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் நொவம்பர் 02 ஆம் திகதி வெளிவந்த தினக்குரல் பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தி ரணில் விக்கிரமசிங்கவின் படத்துடன் இவ்வாறு வெளிவந்திருந்தது.

“ராஜபக்சாக்களுக்கு ஐ.எஸ். ஊடன் தொடர்பா?”
அல் பக்தாதியின் கொலையை கண்டிக்காதது ஏன்? ரணில் கேள்வி 


இந்தத் தலைப்பின் நோக்கம் என்னவெனில், ஒரு பக்கத்தில்ராஜபக்சாக்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் எனப் பிரச்சாரம் செய்துகொண்டு, மறுபக்கத்தில் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பால் விசனத்தில் இருந்த கிறிஸ்தவ மக்களை ராஜபக்சாக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில் அவர்களுக்கு ஐ.எஸ். என்ற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு எனக் காட்டுவதாகும்.

இந்த விசமத்தனமான செய்தியை தினக்குரல் பிரசுரித்த விடயம்
ஒருபுறமிருக்க, மேலதிக விசமத்தனமான செயல் என்னவெனில், 02ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தப் பதிப்பை தினக்குரல் நிர்வாகம் தனது மின் பதிப்பு பக்கத்தில் தொடர்ந்து வைத்திருப்பது தான். இதன் நோக்கம் என்ன?
இப்பொழுது புரிகிறதல்லவா, ஐ.தே.க. ஆட்சியின் கீழ் ஊடக சுதந்திரமும்
தர்மமும் எப்படிக் கொடிகட்டிப் பறந்தன என்பது என்று.

மூலம்: வானவில்: இதழ் 108 -மார்கழி 2019.

No comments:

Post a Comment

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

  செப்டம்பர் 16, 2022 சி ரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார். 1936 ஒக்டோபர் 01ஆம்...