2019 ஜனாதிபதி தேர்தல் மூலமும் நாட்டின் நெருக்கடி நிலை தீராது டியு குணசேகர கூறுகிறார்


“நமது நாடு ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால்
2019இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் கூட நாட்டில்
ஸ்திரத்தன்மையை மீட்டுவிட முடியாது” இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டியு
குணசேகர. டியு குணசேகரவின் 60 ஆண்டுகால அரசியல் பங்களிப்பைக்
கௌரவிக்குமுகமாக கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், “நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்
அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து காத்திரமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால் பாரதூரமான விளைவுகள்
ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
Image result for dw gunasekara

படம்: தோழர் டியு குணசேகர.

தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசியத் தலைமை ஒரு ஆக்கபூர்வமான கொள்கையைப் பின்பற்றும் என நம்புகிறேன். நாடாளுமன்றம் இன்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது.
பிரச்சினைகளைக் கையாள்வதில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக
உள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிகழும் மோதலும் ஒரு காரணம். நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டுச் சக்திகள் நமது நாட்டில் செயல்படும் விதங்கள் குறித்து பாராமுகமாக இருந்து வருகின்றனர். உலகளாவிய நெருக்கடிகள் குறித்து இலங்கை பாராமுகமாக இருந்துவிட முடியாது.
இன்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள்
அனைத்தினுள்ளும் தலைமைத்துவப் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த
தலைமைத்துவப் போராட்டங்களும்,நாடாளுமன்ற நெருக்கடிகளும் நாட்டின் அனைத்துத்துறைகளையும் பாதித்துள்ளன. வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் காரணமாக அங்கு பல அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.சம்பந்தன் மட்டுமே உயிர்தப்பிப் பிழைத்திருக்கிறார்.
கிழக்கு மக்களின் இன்னொரு தலைவரான எம்.எச்.எம். அஸ்ரப்
தூரதிஸ்ட்டவசமாக 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 16இல் நடைபெற்ற
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமான விபத்தில்
கொல்லப்பட்டுவிட்டார். தெற்கிலும்கூட லலித் அத்துலத்முதலி,காமினி திசாநாயக்க போன்ற தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட போது அதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
ஆதரித்ததிற்காக எமது தோழர்களில் 50 பேர்வரை ஜே.வி.பியினரால்  கொலை செய்யப்பட்டனர்” இவ்வாறு டியு தனது பேச்சின்போது
குறிப்பிட்டார். தோழர் டியு குணசேகரவை கௌரவிக்க நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் நேபாளப் பிரதமர் மாதவ் குமார் பிரதான உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் அனைத்துக்
கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம்
ஒன்றை மேற்கொண்டிருந்ததால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத அவர்ää டியு குணசேகரவின் 60 ஆண்டுகால அரசியல் பணிகளைப் பாராட்டி
வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியிலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பலத்த நெருக்கடிக்கு
மத்தியிலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்ததை நினைவுகூர்ந்து
பாராட்டியிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, டியு  குணசேகர தனக்கு சொன்ன அறிவுரையைக் கேட்காமல் இரண்டு வருடங்கள் முன்னதாக 2015இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதின் மூலம் அதிக விலையைக் கொடுத்துவிட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், டியு குணசேகர ‘கோப்’ குழுவின் தலைவராக
இருந்தபொழுதே முதன்முதலாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் அவரால் அம்பலப்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...