அமெரிக்காவை வரவழைக்கும் ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையக்கூடாது! - சுப்பராயன்-யாழ்பாணத்தில ; பேராசிரியர் ; திஸ்ஸ விதாரண


ஐக்கிய தேசியக்கட்சி இலங்கையில் ஐ.அமெரிக்கத் தலையீட்டைக்
கோருவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக் கட்சியுடன் கூட்டு
வைக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார் லங்கா சமசமாஜக்
கட்சியின் பொதுச்செயலாளர்  பேராசிரியர்  திஸ்ஸ விதாரண  அண்மையில் யாழ்ப்பாணத்தில் முகாமைத்துவ அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தலைவர்கள்  முதலில் தாம் இலங்கையர்கள் என்றே சிந்திக்க வேண்டும,  அதன் பின்னரே தாம் தமிழர்களால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள்  என எண்ண வேண்டும ; எனக் குறிப்பிட்டார்.

Image result for professor tissa vitharana

படம்: பேராசிரியர்  திஸ்ஸ விதாரணஅவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது:
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதல்களின் உண்மையான தலைவர் பலரும் கருதுவது போல
சஹ்ரான் அல்ல. அவருக்குப் பின்னால் இருந்த உண்மையான தலைவர் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.  நன்கு திட்டமிடப்பட்டு
ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னால் சக்திவாய்ந்த
சர்வதேசச் சக்தியொன்று செயல்பட்டுள்ளதாக பொதுவாக பலரும்
ஏற்றுக்கொள்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் இதன் பின்னால் உள்ளது என்றால் அங்கு பல கேள்விகள் எழுகின்றன. ‘குளோபல் றிசேர்ச் ஜேர்னல்’ என்ற சஞ்சிகையில் ஹாவார்ட் பல்கலைக்கழக புலமையாளர் எழுதிப் பிரசுரிக்கப்பட்டுளள கட்டுரையொன்றில், எஸ்.ஐ.எஸ். உட்பட அல்கைடா மற்றும் தலிபான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்காவே ஆயுதங்கள ; வழங்கி பயிற்சியும் அளித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்கப்போவதாக நம்பிக்கை கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முஸ்லீம் மக்களின் பிரதான எதிரி நாடான இஸ்ரேலில் இதுவரை ஒரு குண்டைத்தானும ; வெடிக்க வைக்கவில்லை. அப்படியிருக்க 2 கோடி சனத்தொகை கொண்ட இலங்கையில் வெறுமனே 10 சதவீதம் மட்டுமே முஸ்லீம் சனத்தொகை கொண்ட இலங்கை போன்ற சிறிய நாட்டில், இஸ்லாமிய அரசொன்றை அமைக்க முடியாத நாட்டில் ஏன்  அவர்கள்  குண்டுகளை வெடிக்க வைக்கின்றனர் ? சிரியாவில் 2019 மார்ச்
19 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

ஆனால் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கமும் இந்தத் தாக்குதல்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து வந்ததாக
உரத்துக் கூறியபின்னர் இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவ்வமைப்பு
வழமைக்கு மாறாக உரிமை கோரியுள்ளது. இது ஏன்?


பொருளாதார மற்றும் தந்திரோபாய காரணங்களுக்காக அமெரிக்கா
இலங்கை மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்காவின்
பொம்மை அரசாங்கமான ஐ.தே.க. அரசாங்கம், உலகளாவிய ஆட்சி
மாற்றம் என்ற அமெரிக்க கொள்கைக்கு ஏற்ப 2015இல் தேசியவாத மகிந்த
ராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்த பின்னர், அமெரிக்கா நாடுகளைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கான நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. அதன் பின்னர் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் வாழ்கின்ற மக்கள்  கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர் . டியோக்கோ கார்சியாவில் உள்ள தனது இராணுவத்தளத்தை இழக்கும் சூழலில் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையை மாற்றுத் தேர்வாக அமெரிக்கா கருதுகின்றது. அதனால் ஐ.தே.க. தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. தேர ;தலில் ஏற்படப்போகும் தோல் வியைத் தவிர்ப்பதற்காகவே பயங்கரவாதத்தை எதிர்க்கும் சட்டம் என்ற போர்வையில் சட்டமொன்றைக் கொண்டு வந்து அதை நாடாளுமன்றமும் மக்களும் ஏற்க வைக்க முயற்சிக்கப்படுகிறது.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் தேர்தல்கள் நடத்துவதை
இல்லாமல் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்
புதைத்து, நாட்டில் பொலிஸ் இராஜ்யம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான
மூலப்பிரதியாகும். ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மூலம்
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்விழ்த்துவிட்டு
அதன் மூலம் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்கும் சட்டத்தை
நியாயப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்பது
எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆனால் வன்முறையை எதிர்க்கும்
இலங்கையின் உண்மையான புதல்வாரன கார்டினல் மல்கம் ரஞ்சித்
அவர்களின் உறுதியான நடவடிக்கை காரணமாக இந்தத்திட்டம்
நிறைவேறாமல் இருக்கின்றது. அதன் பின்னர்  ஐ.தே.க. காடையர்கள்
நீர்கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம்களின்  இடங்களில்
தாக்குதல்களை நடத்தியதுடன் ஏனைய இடங்களுக்கும் அதைக் கொண்டு
சென்றனர். அரசாங்கம் இதை ஊக்குவித்தது. இதன் மூலம் அமைச்சர்
ரிசாத் பதியுதீன்,  ஆளுநர்கள்  ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத்
ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவு விசாரிப்பதில் தடங்கல்  ஏற்படுத்தியது. சாலியும், விடுதலை செய்யப்பட்ட முஸ்லீம் விரோத தீவிரவாதியான கலகொடத்த ஞானசார தேரோவும் எரியிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி சமூகத்தின் எல்லா மட்டத்திலும் அச்சத்தை அதிகரித்துள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இழப்புகளை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் அளித்துவரும் ஆதரவு 2015 சதித்திட்டத்தின ; தொடர்ச்சியைக் காட்டுவதுடன் ,1983இல் ஜே.ஆரின் அரசாங்கம் அப்பாவித் தமிழர்கள்  மீது கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை சம்பவம் போன்ற ஒன்றை முஸ்லீம்கள்  மீது அரங்கேற்றுவதற்கு முயற்சிப்பதையும் காட்டுகின்றது. அதன் காரணமாக அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் உருவாகியது. இப்பொழுது மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின ; முக்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவின் அடிப்படைவாத வகாபி பிரிவின் சார்பாக உருவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்  ஜிகாத் பயங்கரவாதம் உருவாகியுள்ளது. நிலைமைகள் மோசமடையும் சூழலில் அரசாங்கம் ளுழுகுயு என்ற ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் செய்து அதன் மூலம் அமெரிக்கப்படைகள் இராஜதந்திர சலுகையைப் பயன்படுத்தி விசா இன்றி இலங்கைக்குள் நுழையவும் இலங்கையின் எந்தவொரு இராணுவத்தளத்தைப் பயன்படுத்தவும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக வர இருக்கிறது.

இதன மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். சுர்வதேச பயங்கரவாத அமைப்பென்று
கூறிக்கொண்டு அரசாங்கத்தின்  அனுமதியின்றி அமெரிக்க இராணுவம்
இலங்கைக்குள்  நுழைய முடிகின்றது. அதன் பின்னர்  அவர்கள் இலங்கையை ஈராக்,  சிரியா போன்ற யுத்தகளமாக மாற்றுவார்கள் .
இந்தப் பயங்கரமான அபாயத்தை எதிர் கொள்வதற்கு நாடும் மக்களும்
ஒரே இலங்கைத் தேசமாக ஐக்கியப்பட்டு எழுந்துநின்று இந்தச்
சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் .

ஆனால் தூரதிஸ்டவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா
முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பன
ஐ.தே.கவின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஆதரிக்கின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலோ அல்லது வேறு
பகுதிகளிலோ வாழும் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயல்படாது பணக்கார தமிழ் மேட்டுக்குடியினருக்காக செயல்படுவதுடன் , நாட்டின்
சனத்தொகையில் ஒரு வீதமாக மட்டுமேயுள்ள,  அமெரிக்காவுக்கு
சேவகம் செய்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மேட்டுக் குடியினருடனும்
சேர்ந்து செயல்படுகின்றனர்.  இது முதலில் இலங்கையர்களாகவும் பின்னரே தமிழர்களாகவும் சிந்திக்கின்ற உண்மையான தமிழ் தலைமை
ஒன்றை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் அவசியத்தை இந்த நிலைமை உணர்த்துகின்றது.

அமெரிக்காவும் அதன் 1 வீதமான பணக்கார ஆதரவாளர்களும் எமது
நாட்டைச் சுரண்டுவதிலிருந்து விடுபடுவதற்கும், 99 வீதமான மக்கள்
‘பிரித்து ஆளுதல்’ என்ற அடிப்படையில் இன,  மத அடிப்படையில் ஒருவரோடொருவர் சண்டையிடுவதில் இருந்து விடுபடுவதற்கும் இதுதான்  ஒருவழி. பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியபோது திரு.சம்பந்தன் முஸ்லீம்களின் பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது நாட்டின்  இதர பிரச்சினைகளைப் பற்றியோ ஒரு வார்த்தைதன்னும் பேசாமல் கடந்த நான்கு வருடங்களாக எதுமே செய்யப்படாமல் இருக்கும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைப்பற்றி மட்டுமே பேசினார்  என்பதை நான் இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறேன் .

புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதில் திருவாளர் சம்பந்தனுக்கு முன்னணிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும்,ஐ.தே.க. அரசாங்;கத்தை தோற்கடிக்க முடியாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கின்றபோதும், அபாயமான ஜிகாத் பயங்கரவாதம் பற்றி விவாதிக்கும் போது சம்பந்தன் தமிழ் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் பேசுகின்றார் .  அரசாங்கத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல்  இருக்கும்வரை வாக்குச் சேகரிப்பதற்கு அது ஒரு கருவியாக இருக்கும் என்பதே
உண்மையாகும்.

எனவே லங்ங ;கா சமசமாஜக்கட்சி மற்றும் சோசலிச கூட்டமைப்பு போன ;ற
இடதுசாரிகளுடனும்ää முற்போக்கான தமிழ் கட்சிகளுடனும் இணைந்து
செயல்படுவதன ; மூலம் அடுத்ததாக ஏற்படப்போகும் மகிந்த ராஜபக்ச
தலைமையிலான அரசாங்கத்தில் சர ;வகட்சி சுட்டத்தில் முன ;னேற்றத்தை
ஏற்படுத்த முடியும் என ;பதைத் தமிழ்மக்கள ; உணர வேண்டும்.இதுதான ; தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை உண்மையான
நம்பிக்கையளிக்கும் விடயமாகும

மூலம்  : வீரகேசரி - வானவில்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...