Monday, 19 August 2019

முறிகள் மோசடிக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய அரசாங்கம்


இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய  மோசடியான மத்திய வங்கி முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இந்த மோசடி தொடர்பிலான வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவை ஓகஸ்ட் மாதம் 9ஆம்
திகதி பிறப்பிப்பதாக மேல் நீதிமன்றம் 24.07.2019 இல் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியே இந்த மோசடி இடம்பெற்றது. 26.01.2015 இல் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற அர்ஜுன மகேந்திரனின் பதவி,30.06.2016 இல் முடிவுக்கு வந்தது. இவர் ஆளுநராக பதவி வகித்தபோது,  நிதியைத் திரட்டிக்கொள்ளும் முகமாக,  30
வருடங்களில் முதிர்ச்சியடையும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதாக அறிவித்தார். ஏலத்தின் நிறைவில் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 20 பில்லியன் ரூபா வரை முறிகளை விநியோகிப்பதற்கு இவர் தீர்மானித்தார். எனினும் மத்திய வங்கி அதிகாரிகளின் எதிர்ப்பினால் அது 10 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.முதலீட்டாளர்கள் பலரும் அரச முறிகளை வாங்க ஆர்வம் காட்டியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரச முறிகளை 9.5 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதம் வரை பெற்றுக்கொள்ள விரும்பியிருந்தனர். எனினும் 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறி, 12.5 எனும் வழமைக்கு மாறான வட்டி வீதத்திற்கு அமைவாக Pநசிநவரயட வுசநயளரசநைள
நிறுவனத்திற்கு (இந்நிறுவனத்தின் அப்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது) வழங்கப்பட்டது. இது, குறைவான வட்டி விகிதத்தில் முறிகளைப் பெற்றுக்கொள்ள விரும்பியவர்களை ஓரங்கட்டி விநியோகிக்கபட்டதாக உள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அப்போதைய ஊடகங்கள் வாயிலாக தலைப்புச் செய்திகளாக வெளியாகி மக்களின் கருத்துகள் மேலோங்கியபோது, 2015 மார்ச் 17 ஆம் திகதி தாம் முறிகள் விநியோக நடைமுறையை மாற்றுவதற்கு கட்டளையிட்டதாகää பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். பின்னர், ஐக்கிய தேசியக்
கட்சியுடன் தொடர்புடைய சிலரை உள்ளடக்கி பிரதமர் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழு அர்ஜுன மகேந்திரனை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தது. பின்னர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸää ‘கோப்’ (ஊழுPநு - ஊழஅஅவைவநந ழுn Pரடிடiஉ நுவெநசிசளைநள) குழுவின் தலைவராக இருந்த டியு குணசேகரவிற்கு அறிவித்தார். அக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல்நாள், அதாவது 2015 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி, பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் வழங்கிய ஆலோசனைகளையே தாம் நடைமுறைப்படுத்தியதாகää மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வழங்கிய வாக்குமூலம் மூழ்கடிக்கப்பட்ட அந்த ‘கோப்’ அறிக்கையில்
உள்ளடக்கப்பட்டிருந்தது என்பது முக்கிய விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், சுனில் ஹந்துன்நெத்தி (ளுரnடை ர்யனெரnநெவவi) புதிய ‘கோப்’ தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு
நவம்பர் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையேää 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் சர்ச்சைக்குரிய மேலும் இரண்டு முறிகள் கொடுக்கல், வாங்கல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான ‘கோப்’ குழு அறிக்கையில ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகள் இருந்தன. அடிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளில் ஐ.தே. கட்சியினர் தாக்கம் செலுத்தியதாக பலரும் சுட்டிக்காட்டினர். அதனால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்ää ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையிரேயே அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து,வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத் தலைவராக உள்ள றுயடவ யனெ சுழற நிறுவனத்தின் ஊடாக,  அப்போதைய நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் வசிப்பிடத்துக்கு வாடகை வழங்கப்பட்டு
வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வீடு ஆறுமாத காலங்களுக்கு 11.6 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுää பின்னர் 165 மில்லியன் ரூபாவிற்கு ரவி கருணாநாயக்கவின் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுமுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய மோசடி இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தியானாலும், இது தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு தற்போதைய அரசாங்கத்திலிருந்து இதுவரை எவரும் முன்வரவில்லை. அத்துடன் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர் பிரதமராக இன்னமும் பதவியில் இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. மோசடிக்கு பொறுப்புச்
சொல்லவேண்டிய அரசும் கலைக்கப்படாமல் இருக்கின்றது. கடந்த வருடம் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுää ஐ.தே.கட்சி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதின் பின்னணியில் முறிகள் மோசடி விவகாரமும் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

No comments:

Post a comment

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

  Kevin Reed 16 October 2020 Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both...