முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு நாடகம் முடிவுக்கு வருகின்றது .! - புனிதன்


கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பிலும்
நாட்டின் சில பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் மதவழிபாட்டில்
ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீதும் நடத்தப்பட்ட
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களால் 250 இற்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமும்
அடைந்தனர். இந்தத் தாக்குதல்கள் காரணமாக இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடு என்ற உணர்வு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உருவானது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், அரசியல் ரீதியிலான நெருக்கடிகளும் ஏற்பட்டன.
Image result for muslim ministers resigned in sri lanka at pm place

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி சில நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்றன இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எத்தனித்தன. ஆனால் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகளும் மக்களும் அதற்கு அனுமதிக்கவில்லை. என்றாலும் திரைமறைவு முயற்சிகள்
தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களைத்
தொடர்ந்து அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து வந்த சில முஸ்லீம்
அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக,
அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும்
மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் மீது இந்தப் பயங்கரவாதத்
தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
விசேடமாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டன. ரிசாத் பதியுதீனை அமைச்சர் பதவியில் இருந்து
நீக்குவதுடன், அவரைக் கைது செய்து விசாரணைக்கு உள்படுத்த
வேண்டுமெனவும் நாட்டின் பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள்
எழுந்தன. அவர் மீது உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தினதேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். இந்த நிலைமைகள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடுமையான நெருக்கடியை உண்டுபண்ணின.ஏற்கெனவே இந்தத் தாக்குதல் பற்றி இந்தியா வழங்கிய புலனாய்வுத்
தகவல்களை மறைத்ததாகவும், அரசுக்கும் அதன் சர்வதேச எஜமானர்களுக்கும் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புண்டென்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த சூழலில் அரசாங்கம் செய்வதறியாது நிலைகுலையத் தொடங்கியது.

போதாதிற்கு ரிசாத் பதியுதீன் மீது எதிரணி நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்தத் தீர்மானத்தை
ஆளும் ஐ.தே.கவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெற வைக்கக்கூடிய சூழலும் உருவானது. இந்தச் சூழ்நிலையில்தான் அரசாங்கத்தில் பதவி வகித்த முஸ்லீம் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளைத் துறப்பது என முடிவு எடுத்தனர். ஆனால் பதவி துறந்தாலும் அரசுக்கு ஆதரவாகவே இருப்பது எனவும் முடிவும் செய்தனர். இதன் மூலம் இந்தப் பதவி துறப்பு ஐ.தே.கவால் அரங்கேற்றப்படும் ஒரு நாடகம் என உடனடியாகவே மக்கள் புரிந்துகொண்டனர். அதேநேரத்தில்
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும்,மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியும் தமது பதவிகளை ராஜினாமா செய்துகொண்டனர்.

முதலாவதாக, முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலகுவது என எடுத்த முடிவே மிகத்தவறானதாகும். ஏனெனில் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புள்ளவர்கள் என
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்ää ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோராவர். அப்படியிருக்க குற்றச்சாட்டுக்கு
உள்ளாகாத மற்றைய அமைச்சர்களும் பதவி விலகக் காரணம் என்ன? அவர்கள் தம்மையும் குற்றச்சாட்டுகளுடன் இணைத்துக் கொண்டார்களா என்ற  கேள்வி இங்கே எழுகின்றது. இந்தப் பதவி விலகல் மூலம் சில
விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அதாவது, ஒருவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டால் அவர் தார்மீக ரீதியில் தாமாகவே பதவி விலகிக்கொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதுதான் ஜனநாயக ரீதியிலான பண்பாகும். அதற்குப் பதிலாக தன்னைக் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன அடிப்படையில் தனது இனத்தவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனமாக
சவால் விடுவது சர்வாதிகாரத்தனமானதும், நீதி நியாயத்துக்கு அப்பாற்பட்டதுமாகும்.

அதிலும் இலங்கையிலுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளும் மதத் தலைவர்கள்
சிலரும் சில அரபு நாடுகளின் பண உதவியுடனும் தார்மீக ஆதரவுடனும்
இலங்கை முஸ்லீம்களை அரேபியமயப்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள் என்ற அச்சம் நாட்டு மக்களிடையே,  குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒட்டுமொத்த பதவி விலகல் மேலும் மக்கள் மத்தியில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. முஸ்லீம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக
பதவி விலகியமை நிச்சயமாக இனவாத அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

இந்த நடவடிக்கையில் ஐ.தே.கவுக்கும் நெருக்கமான சம்பந்தமுண்டு. தனது
ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஐ.தே.க. இந்த வழிமுறையை கையாண்டுள்ளது. அதில் உண்மை உள்ளது என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. அதற்கு உதாரண,  குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட எந்தவொரு முஸ்லீம் அரசியல்வாதி மீதும் இதுவரை விசாரணை நடத்தப்படவோ நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை.  அதுமாத்திரமின்றறி, ரிசாத் பதியுதீன் குற்றமற்றவர் என்றும் ஐ.தே.க. அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன், பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவியை திரும்பவும்
பெற்றிருப்பதுடன், ரிசாத் பதியுதீன் உட்பட ஏனையவர்களும் அமைச்சுப்
பதவிகளை மீண்டும் பெறுவதற்குத் தயாராகியும் வருகின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் முஸ்லீம் அமைச்சர்களின் இந்த ராஜினாமா
நடவடிக்கை தம்மையும் ஐ.தே.க. அரசையும் பாதுகாக்க ஆடிய நாடகம்
என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது. இதன் மூலம்
முஸ்லீம் தலைமைகளும், ஐ.தே.க. தலைமையும் இனங்களுக்கிடையிலான
முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளார்கள் என்பதுதான்
உண்மை.

மூலம் வானவில் இதழ் 103 ஜூலை 2019

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...