கார்த்திகேசன் – ஓர் அர்ப்பணிப்புள்ள தோழர்-‘வானவில்’

கார்திகேசன் ; - ஓர் அர்ப்பணிப்புள்ள தோழர் 1952 இல் நான் கம்பஹாவின் 1952 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தோழர்களில் ஒருவரான தோழர் கார்த்திகேசனை அறிவேன். சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்த எனது மூத்த புதல்வர் சுபாசும்,  கார்த்தகேசனின் மகள் ராணியும் நெருங்கிய நண்பர்களான பின்னர் எமது உறவுகள் மேலும் பலப்பட்டன. 1940 களில் கார்த்திகேசன் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்ட பின்பு யாழ்ப்பாண அரசியலில் அவர் ஒரு பிரபல மனிதரானார். அப்பொழுது அவர் ஒரு இளம் தலைவராக இருந்தார். நான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும்ää
அதன் வாலிபர் சம்மேளனத்தினதும், அதேபோல அதன் தொழிற்சங்க
சம்மேளனத்தினதும் பொதுச்செயலாளரான பின்னர் ,  கம்பஹா
- யக்கல மடுகஸ்வளவுவவில் இருந்த எனது இல்லத்துக்கு அவர் வருகை
தந்திருக்கிறார். இந்த வருகைகளின் போது நாம் இருவரும் பல்வேறு
விடயங்கள் குறித்து,  விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து, அதிலும் யாழ்ப்பாணத்தில் நிலவி வருகின்ற சாதிப் பிரச்சினை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருக்கிறோம்.


சிறீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் புகழ்பெற்ற பண்டாரநாயக்க –
செல்வநாயகம் உடன்படிக்கையைக் கொண்டுவந்த போது அவர் அதை
ஆதரித்தார். இந்த நாட்களில் பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர். ஜெயவர்த்தன,  எம்.டி. பண்டா, ஆர்.பிரேமதாசää ஆனந்த திஸ்ஸ டி
அல்விஸ் போன்றோர் தலைமையில் கொழும்பிலுள்ள விகாரமாதேவி
பூங்காவிலிருந்து கண்டியிலுள்ள தலதா மாளிகையை நோக்கி 1958 ஒக்ரோபர் 3 ஆம் திகதி ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்தனர். ஊர்வலக்காரர்கள் 3 ஆம் திகதி இரவு கடவத்தவில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலை 5 மணிக்கு ஊர்வலத்தைத் தொடர்வதற்கு ஆயத்தமாகினர். 3 ஆம் திகதி இரவு
அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின்
எஸ்.டி. பண்டாரநாயக்க எஸ்.டி. பண்டாரநாயக்க அலுவலகத்திலிருந்து அந்த கண்டியை நோக்கிய ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தும்படி என்னிடம்
கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒக்ரோபர் 4 ஆம் திகதி காலை 5 மணியளவில் நான் கம்பஹா பகுதியிலுள்ள எனது மக்களைத் திரட்டி இம்புல்கொட
பகுதியிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரு மலைகளில் நிறுத்தி
வைத்தேன். காலை 6 மணியளவில் ஊர்வலம் இம்புல்கொட சந்தியை
அண்மித்த போது, நாம் அவர்கள் மீது இளநீர் கோம்பைகளை வீச ஆரம்பித்த
காரணத்தாலும், அந்தப் பகுதி முழுவதும் மக்கள் நிறைந்திருந்ததாலும் அவர்களால் இம்புல்கொடவுக்கு அப்பால் முன்நோக்கி நகர முடியவில்லை. மக்கள் ஓருபக்கத்தில் யக்கலவிலிருந்து இம்புல்கொட வரையிலும், மறுபக்கத்தில் இம்புல்கொட முதல் கடவத்த வரையிலும் வீதியை மறித்து நின்றனர்.

ஜே.ஆரும் நானும் முற்பகல் 11 மணியளவில் இம்புல்கொட சந்திக்கருகில்
பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு உலங்கு வானூர்தியில் பொலிஸ் மா
அதிபர் வந்திறங்கினார். அவர்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்தால் வீதிகளில்
நிறைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கொல்வார்கள்ää எனவே அவர்கள்
விரும்பினால் நடந்து செல்லாது வாகனங்களில் ஏறிச் செல்லட்டும் என
நான் பொலிஸ் மா அதிபரிடமும் ஊல்வலத் தலைவர்களிடமும்
கூறினேன். அதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் ஊர்வலக்காரர்களிடம் திரும்பிக் கொழும்புக்குச் செல்லுமாறு ஆலோசனை கூறினார். அத்துடன் அந்தக் கண்டி ஊர்வலம் முடிவுக்கு வந்தது.

இனவாத பிரச்சாரம் காரணமாக பண்டாரநாயக்க – செல்வநாயகம்
உடன்படிக்கை தடைப்பட்டுப்போன பின்பு கார்த்திகேசனும் நானும் சந்தித்து
இனப்பிரச்சினை சம்பந்தமாகக் கலந்துரையாடினோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான கண்டி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியமைக்காக கம்பஹா மக்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கார்த்திகேசன் தனது கொள்கையில்
எப்பொழுதும் திடசங்கற்பத்துடன் இருப்பவர். நானும் அவரும் தமிழர்களின்
சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையில் ஒரே கருத்தையே கொண்டிருந்தோம்.
1961 இல் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் ‘சத்தியாகிரகம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்து நடத்திய பொழுது அப்போதைய பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க அங்குள்ள
நிலைமையை மதப்பீடு செய்வதற்காக என்னை அங்கே அனுப்பினார். அங்கே நான் செல்வநாயகம் உட்பட பெரும்பாலான தமிழ்த் தலைவர்களைச்
சந்தித்து அவர்களுடன் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினேன்.
அதேநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான மு.கார்த்திகேசன்,வீ.ஏ.கந்தசாமி, எம்.சி.சுப்பிரமணியம்,
பி.கந்தையா மற்றும் அ.வைத்திலிங்கம் ஆகியோரையும் சந்தித்தபோதுää
அவர்கள் “சத்தியாக்கிரக” இயக்கத்தில் தமது நிலையை எனக்கு விளக்கிக்
கூறினர். என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் உள்ள சகோதர சிங்கள மக்கள் கொண்டுள்ள அதே உரிமைகளை தமிழ் மக்களும்
கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை எப்பொழுதும் கொண்டிருப்பவன்.
யாழ்ப்பாணத்தில் இந்தத் தலைவர்களையெல்லாம் சந்தித்த பின்
கொழும்பு திரும்பிய நான்ää தமிழ் தலைவர்கள் முன்வைத்துள்ள
கோரிக்கைகள் நியாயமானவை என சிறீமாவோ பண்டாரநாயக்கவிடம்
தெரிவித்தேன். நான் எனது நாடாளுமன்ற 12 ஆனி  2019 உரைகளிலும் இந்தக் கருத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்ட பொழுது, நான்
திரு.என்.சண்முகதாசனுடனும் கார்த்திகேசனுடனும் நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்
பற்றியும், இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்தும் கருத்துப்
பரிமாற்றம் செய்து எமது கவலைகளைப் பகிர்ந்து கொண்டதுடன்,
கருத்தொருமைப்பாட்டுக்கும் வந்தோம். கார்த்திகேசன் தமிழ் மக்களின்
நியாயமான கோரிக்கைகளின் பக்கம் நின்றதுடன்ää யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்.

அவர் வாழ்நாள் முழுவதும் எம்.சி.சுப்பிரமணியம் தலைமையிலான அகில
இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசiபை மற்றும் எஸ்.ரி.என்.
நாகரத்தினம் தலைமையிலான தீண்டாமை ஒழிபபு வெகுஜன இயக்கம்
என்பனவற்றின் பின்னால் உறுதியுடன் நின்றார். நான்,அவரது மகள் ராணிää அவரது கணவர் சின்னத்தம்பி ஆகியோர் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்வு மற்றும் அர்ப்பணிப்புள்ள அவரது தியாகம் என்பனவற்றை அறிந்து
புரிந்துகொண்டேன். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பும்
திடகாத்திரமும் உள்ள முன்னோடித் தலைவராவார். பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கும் பொதுமக்களுடன் அவர் அணுகும் முறை குறித்து நான் எப்பொழுதும் வியந்திருக்கிறேன். நாட்டிலுள்ள பல்வேறு வகைப்பட்ட மக்களுடன் பழகுவதில் முன்னுதாரணமாகத் திகழும்
கார்த்திகேசனைப் போன்ற மனிதரைக் கண்டுபிடிப்பது சிரமம். முதலாளித்துவ வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் கோபுரமாக அவர் திகழ்ந்தார்.

கார்த்திகேசன் இனிமேலும் எம்முடன் இல்லையென்றபோதிலும், அவர் எந்தக் கொள்கைகளுக்காக நின்றாரோ,  அவை மேலும் மேலும் பலப்பட்டு, அவரது கொள்கைகள் சமூகத்தால் நிறைவு செய்யப்படும்.
(எஸ்.டி. பண்டாரநாயக்க அவர்கள் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.
பண்டாரநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரரும்ää அவருடன் சேர்ந்து
சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரும்
என்பதுடன், அக்கட்சியின் சார்பாக கம்பஹா தொகுதியின் நாடாளுமன்றப்
பிரதிநிதியாக பல வருடங்கள் சேவையாற்றியரும் ஆவார்) .


தோழர் மு.கார்த்திகேசன்

ஜனன நூற்றாண்டு

லங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்த இயக்கத்தின் விதைகளை நாட்டின் வட பிரதேசத்தில் முதன்முதலில் ஊன்றியவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளரும், எமது பேராசானுமான காலஞ்சென்ற தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் ஜனன நூற்றாண்டு தினம் 2019 யூன் 25ஆம் திகதியாகும்.
அவரது நூறாவது ஜனன தினத்தையொட்டி சில கட்டுரைகளும் கவிதையொன்றும் இவ்விதழில் வெளியாகியுள்ளன. இப்படைப்புக்கள் யாவும் அவரைப்பற்றி பலர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலான, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதற்காக அந்நூலின் பதிப்பாளர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழர் கார்த்திகேசனின் ஜனன நூற்றாண்டையொட்டி தொடர்ந்தும் நாம் ‘வானவில்’ இதழில் கட்டுரைகளை வெளியிட இருப்பதால், அவருடைய சக ஆசிரியர்கள், அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள், அவருடன் கட்சிப்பணி புரிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் போன்றவர்களிடமிருந்து பிரசுரத்திற்காக கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம்.
-‘வானவில்’ ஆசிரிய குழு


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...