அமைச்சரவையை நீக்கி சர்வகட்சிகள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,  நாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளையே பிரதமர் உட்பட அமைச்சரவை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சோலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுவரும் சிறிய வகையான சம்பவங்கள் பாரியதொரு வெடிப்பாக மாறும் அபாயம் இருக்கின்றது. அதனையே அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பார்த்து இருக்கின்றன.இவ்வாறான சம்பவங்கள் கிழக்கு பகுதியில் இடம்பெறுமானால் அதனை காரணம் காட்டி அமெரிக்கா தனது இராணுவ முகாமை அமைக்க திட்டமிட்டு வருகின்றது. இதற்கு பிரதமர் உட்பட அமைச்சரவை ஆதரவளித்து வருகின்றது. அதனால் நாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த பிரதமரையும் அமைச்சரவையும் நீக்கி சர்வகட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவையொன்றை தற்காலிகமாக ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மூலம் : தேனீ இணையம்