மற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:

சீன – இலங்கை உறவுகள்,

அதன் கடன் சுமை


லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலையங்கத்தின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.
________________________________________
சீனாவும் இலங்கையும் வரலாற்றுரீதியாக நெருங்கிய உறவைப்பேணி வருகின்றன. கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகள் முன்னதாகவே சீன பௌத்த குருமார் இங்கைக்கு விஜயம் செய்தமை பதிவாகியுள்ளது. இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்த பின்னர் 1950 இல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சீனா நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு அனுசரணையும் வழங்கியது.
1952 இல் இலங்கை பெரும் உணவுப்பற்றாக்குறையை எதிர்நோக்கியதுடன் தனக்கு தேவையான அரிசியையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் இயற்கை இறப்பரின் விலையும் வீழ்ச்சி கண்டது. இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீனா உதவி அளித்தது.


ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் நீடித்த இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் யுத்தக் குற்றங்களைக் காரணம்காட்டி இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்தன. அதேநேரத்தில் இந்தியாவும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்தது. இந்த நேரத்தில் சீனா எமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆயுதங்களை வழங்கி கிளர்ச்சியாளர்களைத் தோற்கடிக்க உதவி புரிந்து நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவர உதவியது.
இன்று சீனா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது. சீனா தங்களுடனான வர்த்தகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உடன்படிக்கையை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, சீனப் பொருட்கள் மீது பரந்த அளவிலான வரிகளை விதித்துள்ளது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. 2019 யூன் 01 ரொய்ட்டேர்ஸ் செய்திகளின்படி, அமெரிக்கத் துறைமுகங்களில் வந்து இறங்கும் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம்வரை வரி விதித்துள்ளது. இந்த வரிகள் பாவனைப் பொருட்கள் மற்றும் இடைப்பட்ட பொருட்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதிலடியாக சீனா 60 பில்லியன் டொலர்கள் தொகையை இலக்காகக் கொண்டு அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரத்தில் உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பான ஹ{வாவெய் தொழில்நுட்பவியல் கொம்பனி லிமிட்டெட்டை (Huawei Technolies Co.Ltd) அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இட்டுள்ளதுடன், அவ்வாறு செய்யுமாறு தனது மேற்கத்தைய கூட்டாளிகளையும் நிர்ப்பந்தித்து வருகிறது. மறுபக்கத்தில் இதற்குப் பதிலடியாக சீனா அருமைமிக்க பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்க உற்பத்தித்துறையை முடக்கத் திட்டமிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு மட்டத்தில் இலங்கை சீனாவின் ‘ஒரு வழி ஒரு பாதை’ திட்டத்தில் இணைவதையிட்டு அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சீனா கவர்ச்சிகரமான, அதேநேரத்தில் நடைமுறையில் குறைந்தளவு பெறுமானமுள்ள திட்டங்களில் ஆசைகாட்டி தனது கடன்பொறிக்குள் சிக்க வைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.
இதற்கு உதாரணமாக, அமெரிக்காவும் அதன் மேற்கு மற்றும் கிழக்கு கூட்டாளிகளும் இலங்கைக்கு ஆசைகாட்டி சீனக்கடன்கள் மூலம் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய துறைமுகத்தையும், குறைந்தளவு பயன்பாடுள்ள மத்தள விமான நிலையத்தையும் பயன்படுத்தி இலங்கையை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாகக் காட்டுகின்றன. சீனாவுக்கு இவற்றை நீண்டகால அடிப்படையில் பயன்படுத்தக் கொடுத்ததின் மூலம் இது நிரூபணமாகின்றது என அவை கூறுகின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்காக சீனாவிடம் பெற்ற கடன்களைச் செலுத்த முடியாத நிலையிலேயே வேறு வழியின்றி சீனாவின் கட்டுப்பாட்டில் அந்தத் துறைமுகத்தைக் கையளித்துள்ளதாகப் பொதுவான அபிப்பிராயம் நிலவுகின்றது. ஆனால், இலங்கையின் மொத்தக்கடன் தொகையானது சர்வதேச நாணய நிதியம் உட்பட யப்பான், சீனா போன்ற தனிப்பட்ட நாடுகளையும் உள்ளடக்கியது என்பதைப் பலர் புரிந்துகொள்ளத் தவறி விடுகின்றனர்.
REPORT THIS AD

2018 இல் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கையின் 55,000 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன்களின் விபரம் வருமாறு; ஆசிய அபிவிருத்தி வங்கி – 14 சதவீதம், யப்பான் – 12 சதவீதம், உலக வங்கி – 11 சதவீதம், சீனா – 10.6 சதவீதம். நாடு 2019 – 2022 ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தில் வர்த்தக வங்கிகள் மற்றும் பாரம்பரிய கடன் வழங்குபவர்களுக்கு 17,000 மில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
நாட்டின் 9.100 மில்லியன் டொலர்கள் நிதிக் கையிருப்பைப் பொறுத்தவரையில் இத்தொகை கடன்களைத் திருப்பிச் செலுத்தப் போதாது. கடந்த நான்கு ஆண்டுகளாக 150 மில்லியன் டொலர்கள் பற்றக்குறை நிலவி வந்துள்ளது. அத்துடன் இலங்கையின் பொதுமக்கள் கடன்சுமை தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 77 சதவீதமாகும். இது அயல் நாடுகளான இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து என்பனவற்றினதை விட அதிகமானதாகும். சீனாவின் தொடர்புகள் காரணமாகவே இலங்கையின் கடன் பிரச்சினை உருவானதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சீனாவின் கடன்களில் ஒருபகுதி மற்றைய கடனாளிகளின் கடனைத் திரும்பச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக ‘தென்சீன மோர்னிங் போஸ்ற்’ (South China Morning Post) என்ற பத்திரிகை கூறுகின்றது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...