கனவுகளைக் கலைத்துவிடு !எஸ்.எம்.எம்.பஷீர்

கனவுகள்
எம்மை
கட்டி வைத்திருக்காவிட்டால்
எப்போதோ
நாம் கரைந்து
போயிருப்போம்!

நனவுகளைப் போலவே
கனவுகளும்
சாஸ்வதமானவை
இரண்டுக்கும்
இடைவெளி
நூல் இழையாயினும்
இருவேறு உலகும்
எமை ஆட்சி செய்யும்!

நெடிய கனவுகள்
கலைக்கப்படாமல்
கண்ணை மூடித்
தூக்கத்தில் கிடக்க,
விழிகளை இருட்டில்
தொலைத்தவனுக்கு
காட்சிகள் யாவும்
கனவன்றி வேறில்லை!

காலம் காலடியில்  
கண்களை திறந்துவிடு
கனவுகளை கலைத்துவிடு
உன் விழிகளின்
வெளிச்சத்திற்காய்
காத்திருக்கிறது உலகு
நனவுகளே  இனி
கனவுகளாக ஆகட்டும். !

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்