மீண்டெழும் மந்தைகள் !


எஸ்.எம்.எம்.பஷீர்

மந்தைகள் தவம் செய்தன
மானுடம் பயனுற வாழ்வதற்கே
விந்தை நிகழ்ந்தது
தூர்சீனா மலையின்
அடிவாரம் நடுங்கியது

மலை சுக்குநூறாகியது 
மூஸா மூர்ச்சித்தெழந்தார் 
மௌட்டீகத்தில்
மீண்டும்
மானுடம் மூழ்கியது !

தட்டுத் தடுமாறி
தடியுடன்
நடந்தவர்  
மீண்டும் மனிதரை
மேய்ப்பவரானார்
மனிதரோ 
மீண்டெழும்
மந்தையராயினர் !

மாறின  காலங்கள்
மேய்ந்த மந்தைகளும் 
மேய்ப்பர்களும்
மாறினர் ;
மனிதரோ 
மீண்டெழும்
மந்தையராயினர் !

விந்தை மனிதர்கள்
விக்கித்து நின்றனர்
மந்தைக்கும்
மனிதர்க்கும் 
இடையில் சிக்கினர் !
மனிதரோ 
மீண்டெழும்
மந்தையராயினர் !

மூஸா = மோசஸ் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...