ராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு


மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி
வாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித
சேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது,
அவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.


‘தன்வினை தன்னைச்சுடும்’ என ஒரு தமிழ் முதுமொழி உண்டு. அது ராஜிதவுக்கும் இப்பொழுது சரியாகப் பொருந்தி வருகிறது. தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும்
அவருக்குமான தொடர்புகள் குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் கிளம்பியிருக்கிற சூழலில்,
மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. கடந்த அரசாங்க காலத்தில்
ராஜித மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அமைச்சரவையின் அங்கீகாரம்
இன்றி கொழும்பு முகத்துவாரத்துpலுள்ள 20 ஏக்கர் பரப்பளவுள்ள மீன்பிடித்
துறைமுகம் ஒன்றை தனியார் கொம்பனியொன்றுக்கு மிகக்குறைந்த குத்தகையான
மாதமொன்றுக்கு 125,000 ரூபாவுக்கு வழங்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டிருக்கிறது. அதுவும் அந்தக் கொம்பனி 2014 ஓகஸ்டில் பதிவு
செய்யப்பட்டிருந்தபோதும், மிக்குறுகிய காலத்தில் அதேவருடம் ஒக்ரோபரில் அந்தக் குத்தகை
வழங்கப்பட்டிருக்கிறது.

குத்தகையைப் பெற்றுக்கொண்ட அந்தக் கொம்பனி ஏற்கெனவே அதில் பணிபுரிந்த
தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிதாக வேறொரு கொம்பனியிடமிருந்து
ஊழியர்களை நியமனம் செய்திருக்கிறது. காலம் பிந்தித்தான் மீன்வளத்துறை
அமைச்சு இந்த மோசடியைக் கண்டுபிடித்து, குத்தகைப்பணத்தை 450,000
ஆகக் கூட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. ராஜிதவின் இந்த நடவடிக்கை
ஊழல் சம்பந்தப்பட்டது எனக் கருதும் கூட்டு எதிரணி, இந்த விடயம் குறித்து பொலிஸ்
ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட ‘நிதி குற்ற விசாரணைப் பிரிவு’ அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்குடன் அமைப்பட்டது என எதிரணி கருதுவதால், அதனிடம் முறைப்பாடு செய்வதில் பயனில்லை எனக் கருதும் எதிரணி, ராஜித மீதான
குற்றச்சாட்டை நேரடியாக பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையிடத் தீர்மானித்திருப்பதாக
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார்.

மூலம் : வானவில், சித்திரை 2016

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...