"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் " ; இமெல்டா சுகுமார்.



                                                                                                              எஸ்.எம்.எம்.பஷீர்

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
                                                    சுப்ரமணிய பாரதி 

இப்போது யாழ் மாவட்ட  அரச அதிபர் இமேடா சுகுமார் மனம் திறந்து பேசத்தொடங்கியிருக்கிறார். தமது கடைமைகளை செய்ய புலிகள் தடையாக இருந்ததையும் மக்களை கேடயமாக்கி கொன்றதையும் மிகுந்த கிலேசத்துடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகளின்  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் குறிப்பாக நெடியவன் போன்றோரை குறிப்பிட்டு தாம் எவ்வாறு தனது கடைமையை செய்ய நேரிட்டது என்பது பற்றி தனது தனது உள்ளக்கிடக்கையை அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பின்னணியில் பார்க்கும் போது சில  அரச அதிபர்களின் உதவி அரச அதிபர்களின் புலிகளினதும் ஏனைய இயக்கங்களினதும் அதிகாரம் வடக்கு கிழக்கில் நிலவிய காலகட்டங்களில் எனது நினைவுக்கு வந்த சில சம்பவங்களையும் திரும்பி பார்க்கிறேன்.  

அரச நிர்வாக அதிகாரிகள்  புலிகளின் காலத்தில் எத்தகைய அவலங்களை அனுபவித்தார்கள் என்பது இதுவரை நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை. சகல தமிழ் ஆயுத இயக்கங்களும்  இலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்களின் கடமைகளை செய்வதில் தமது ஆயுத ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனர். அது மாத்திரமின்றி அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலர்  தமிழ் தேசிய உணர்வின்பால் உந்தப்பட்டு  அரசுக்கு கட்டுப்படுவதையும் ஒரு துரோக  செயற்பாடாக உளப்பூர்வமாக கருதி அரச ஊதியத்தை பெற்றுக்கொண்டு தமிழ் தேசிய  ஆயுத  இயக்கங்களின் (Armed Movements) மற்றும் அரசியல் கட்சிகளின்   செயற்பாடுகளையும்  அனுசரித்து செயற்பட்டு வந்துள்ளனர்.



நாங்கள் பிரித்தானியாவிலிருந்து  2008 ஆம் ஆண்டு புலம் பெயர் இலங்கை பிரதிநிதிகளாக இலங்கை சென்ற பொழுது யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. யாழ் அரச அதிபரையும் அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம் . அப்போது யாழ் அரச அதிபரான திரு கணேஷ் எங்களை ஓரிரு மக்கள் பிரதிநிகளுடன் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்திருந்தார்.  அந்த சந்திப்பில் நாங்கள் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை  ஒரு தொடக்க புள்ளியாக கொண்டு  இலங்கையில் சமாதான நடவடிக்கைகளை முன்னேடுக்கலாமா என்ற கருத்தறிதலுக்காகவும் அங்கு வந்திருப்பதாக கூறியபோது  அங்கு அழைக்கப்பட்டிருந்த  முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை கொதிப்படைந்தார். நீங்கள் அரச நிகழ்சி நிரலை எங்களிடம் விற்க வந்திருக்கிறீர்கள் அது தீர்வல்ல என்று புலிப்பாணியில் கருத்துக்களை திணிக்க முற்பட்டதுடன் தமிழ் தேசிய இலக்குகள் குறித்து தமக்குள்ள கருத்தினை வெளிப்படையாக சொல்லாமல் ஆத்திரமுற்றார் . மேலும் அந்த கூட்டத்தில் நாம்  வேறு பல விவாதங்களை  எழுப்பிய போதுஒரு சாமான்ய அரசியல் வாதி போன்று அந்த "புத்தி ஜீவி" எனப்படும் மனிதர் வேகமாக கதிரையை பின் தள்ளி  வெளியேறி சென்றார். 
அந்சந்திப்பில் கலந்து தலைமை தாங்கிய அரச அதிபர்  கணேஷும்  மற்றும் சிலரும் ஆரம்பத்தில்  ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கு சமிக்ஜை   காட்டாமல் தமது அரசியல் கருத்தியல் எதிர்ப்பினை மிக நாசூக்காக வெளிப்படுத்தினர். நாங்கள் மிக நாகரீகமாகவும்  திண்ணமாகவும் கருத்துக்களை முன்வைத்த போதும் அவர்கள் அன்று நடந்து கொண்டதில் கணேஷும் பதில் சொல்லவேண்டியவராக நாம் கண்டோம் .  அவரை ஒரு அரச அதிகாரியாக காண்பதைவிட  அங்கு வந்திருந்த "மக்கள் பிரதிநிகள்" சிலரின்  முகவராக அவர் தோன்றியதால் எமது ஆட்சேபனையை நாம் வன்மையாக முன்வைத்தோம். கணேஷ் மற்றும் அவரின் முக்கிய மக்கள் பிரதிநிதி ஒருவரும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி வாகனத்துள் ஏறிய  பின்னர் ஓட்டோடி வந்து எங்களிடம் மன்னிப்பு கோரினர். அதவாது அங்கு நடந்த சம்பவம் பற்றி வேறு எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்ற மறைமுக வேண்டுகோளை அவர்கள் விடுத்ததாக நாங்கள் உணர்ந்து கொண்டோம்.  கெஞ்சினால் மிச்சும் மிஞ்சினால் கெஞ்சும் இந்த வகையறாக்கள் அரச பதவிகளை அலங்கரித்ததனால்தான் இன்றுவரை ஒரு நேர்மையான நீதியான நிர்வாகம் இலங்கையில் எங்கும் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது..   
  
தமிழ் ஆயுத போராட்ட ஆரம்பகாலத்தில் செங்கலடி உப அரச அதிபர் ஒருவர் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்க உறுப்பினர்களால் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க வேண்டப்பட அவர் அதற்கு மறுத்து தமது அரச கடமை பற்றி பேச அவரை தூசனை வார்த்தைகளால்  பொது மக்கள் முன்னிலையில் திட்டி திறக்க வைத்ததையும் அந்த உப அரச அதிபர் அது குறித்து மனம் நொந்து போனதையும் அவமானப்பட்டதையும் தன்னிடம் கூறியதாக எனக்கு அறிமுகமான ஒருவர் தெரியப்படுத்தினார்.  தொன்னூறுகளின் ஆரம்பத்தில்  புலிகள் வெளிப்படையாக இராணுவ உயர் அதிகாரிகளுடன் பயணித்த மட்டக்களப்பு அரச அதிபர் அந்தோணிமுத்துவை கிளேமோர் குண்டுவைத்து கொன்றபோதுதான் ஓட்டமாவடியை சேர்ந்த எழுத்தாளரும் கல்விமானுமான உப அரச அதிபர் வை . அகமதுவையும் அதே பயணத்தில்  கொல்லப்பட்டார் . வை அகமதுவின் உப அரச அதிபர் நியமனத்தை  அஸ்ரபே பிரேமதாசா அரசின் மூலம் முஹிதீன் அப்துல் காதரின் வேண்டுகோளின் பேரில் பெற்றுக் கொடுத்தார். அவரால் நீண்ட காலம் அவரின் பின்தங்கிய சமூகத்துக்கு சேவையாற்ற முடியவில்லை .

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின்னர்  மட்டக்களப்பு அரச அதிபராக பணியாற்றிய மட்டக்களப்பின் முதல் அரச அதிபராக தெரிவான மவ்னகுருசாமி கருணாவின் ஆதரவாளராக புலிகளால் குற்றம் சாட்டப்பட்டதுடன் 2004 மார்ச் மாதம் 27 திகதி அன்று சுடப்பட்டார். அந்த நாளில் நாம் பிரயாணம் செய்த வாகனமும் இராணுவத்தால் வழிமறிக்கப்பட்ட போது எமது வாகனத்தை நிறுத்திய இராணுவ அதிகாரி மூலம் மவ்னகுருசாமி சுடப்பட்டதை அறிய முடிந்தது. அன்றைய தினம் மட்டக்களப்பு நகரம் பட்ட அல்லோல கல்லோலம் இராணுவ பிரசன்னம் இன்னமும் எனது மனதில் உறைந்திருக்கிறது. மவுனகுருசாமி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். யாழிலும் அம்பாறையிலும் இவ்வாறான அரச நிர்வாகிகள் சிலர் கொல்லப்பட்டனர். இன்று சுதந்திரமாக அரச கடமைகளை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் தமிழ் தேசிய சக்திகள் எதிர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தமது பணியை விட்டுவிடாது தொடர்கின்ற வேளையில் , இமேடா சுகுமார் ஒரு வீரமிகு பாரதி கண்ட புதுமை பெண்ணாக எழுந்து நிற்கிறார். 
-------

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...