பத்திரிகை அறிக்கை


நவமணி- இலங்கை (  அக்டோபர் 2006) 

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பினை இரத்துச் செய்யும் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சிறீ லங்கா முஸ்லிம் மையத்தின் நிலைப்பாடும், சிறீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் ஐக்கிய ராஜ்யம்


இலங்கை இந்திய உடன்படிக்கையினால் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் இணைப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஒருபுறம் சட்ட வாதங்களின் நியாயத் தன்மையை இத்தீர்ப்பு வெளிப்படுத்துகின்றபோதும் மறு புறம் கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களின் ஜனநாயக தேர்வாக அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆணைக்கு இணங்கிய சட்டவாக்க செயற்பாடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அமையவேண்டுமென்பதனை வலியுறுத்திக் காட்டுகின்றது.

 

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பொருட் படுத்தாது அவர்களின் தேசிய இன அடையாளத்தைப் புறந்தள்ளி இந்திய அரசுடன் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் புலிகளும் மேற்கொண்ட எதேச்சாதிகாரமான முடிவில் கசப்பான அனுபவங்களை முஸ்லிம் மக்கள் இன்றுவரை அனுபவிக்கவேண்டியிருக்கின்றது மேலும் காலங்காலமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவிவந்த இன செளயன்யத்தையும் ஒப்பந்தத்தின் பின் விழைவுகள் சீர்குலைத்துள்ளன

குறிப்பாக முஸ்லிம் மக்கள்மீதான தாக்குதல்கள், பலாத்கார வெளியேற்றங்கள் முஸ்லிம்களின் உயிர்கள், உடமைகள் என்பன தமிழ் குறுந்தேசிய வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கு தமிழீழம் என்ற கனவின்பேரில் புலிகளினால் பலியிடப்பட்து.

கிழக்கு முஸ்லிம்களை ஒரு தனித் தேசிய இனமாக சகல தமிழ் கட்சிகளும், புலிகளும் பகிரங்கமாக அங்கீகரித்து கிழக்கிலே அன்யோன்யமாக மீண்டும் வாழத் தலைப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் கலந்த ஆலோசனையுடன்தான் வடக்கு, கிழக்கு இணைபிற்கான கோரிக்கை உண்மையிலேயே முன்வைக்கப்படவேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் வேண்டுகோள் விடுக்கின்றது. கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின்ஜனநாயக உரிமைகளைப் பிரயோகிக்கின்ற சந்தர்ப்பமாக இது கொள்ளப்பட்டவேண்டும். இதன்மூலமே அவர்களது வாழ்வுரிமையையும், பாதுகாப்பினையும் அரசியல் அபிலாசைகளையும் அடைந்துகொள்ளமுடியுமென நாங்கள் திடமாக நம்புகின்றோம்.

எஸ்.எம்..எம் பஷீர்

இயக்குனர் சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் ஐக்கிய ராச்சியம்.


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...