கவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்





எஸ்.எம்.எம்.பஷீர்

உன்னால் முடியுமானால் நீ செய்யவே வேண்டும்”     (If you can, you must do )
                                                                                             முஹம்மத் ஹவாஸ் 

படம்: முஹம்மத் ஹவாஸின் நண்பர், கட்டுரையாளர், முஹம்மத் ஹவாஸ்
எகிப்து எழுதிய புதுக் கவிதை ஒரு காவியமாகுமா (http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7229.html) என்ற எனது கட்டுரையில் எகிப்தில்  எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் எப்போது நடைபெறப் போகிறது அல்லது மக்கள் எழுச்சியின் வெற்றிகள் எதிர்பார்த்த பலனை தருமா என்ற ஆதங்கத்துடன் இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும்.என்று குறிப்பிட்டிருந்தேன்


ஆனால் இதுவரை கண்டு கொள்ளக் கூடிய மாற்றங்கள் விரைவாக இடம்பெறவில்லை எனபதும் சர்வதேசத்தின் பார்வை லிபியா, சிரியா, பஹ்ரைன் , எமன் என்று பரந்து பட்டு நிற்கிறது. ஆனால் எகிப்தில் மக்கள் தலைவர்கள் சகோதரத்துவ இயக்க செயற்பாட்டாளர்கள்   , சிவில் சமூகம் ஆகியன அரசியல் சாசன மாற்றங்கள் , தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் காணப்படும் அமைதி ஒருபுறம் மறுபுறம் இப்போது நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் உள்ள இராணுவ உயர் அதிகார அசமந்தத்தனம் அரசியல் மாற்றங்களை எதிர்வு கூறியவாறு இவ்வருட  செப்டம்பர் மாதத்துள்  ஏற்படுத்தி விடுமா  என்ற பயத்தையும் கிளப்பி விட்டுள்ளது.இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹுஸ்னி முபாரக்குக்கு எதிராக துணிச்சலாக சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட முஹமது ஹவாஸ்   . இப்போது நடைபெற தீர்மானிக்கப்படவுள்ள ஜனாதிபதி   தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களுள் அதிகம் பலமான வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் ஒருவராக உள்ளார். இராணுவ அதிகாரிகள் தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக ஊழல்களுக்காக விசாரிக்கப்படல் வேண்டும்   என்று உறுதியாக சவால்விடுகிறார்.  ஒரு தொழிலதிபராக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டாலும் எகிப்து அரசியலில் மிகுந்த ஈடுபாடும் எகிப்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதையும்  தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு இவர் இம்முறையும் தேர்தலில் குதிக்கவுள்ளார். இவரை இன்று எனக்கு சந்திக்க கிடைத்த வேளையில் இன்றைய எகிப்து பற்றி வழக்கமான எனது உசாவறிதல் மூலம் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாலாம் என்று நினைக்கிறேன்.  இவருடனான சந்திப்பின் போது இவர் சகோதரத்துவ இயக்கம் இன்று எகிப்தில் செல்வாக்கிழந்து செல்கிறது என்று குறிப்பிடுவதுடன் எகிப்திய மக்கள் எழுச்சியின் போது மக்களுக்குடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தனது அனுபவத்தையும் எவ்வாறு சகோதரத்துவ இயக்க கைதிகளை விடுவித்து அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முபாரக்கும் அவரின் இராணுவ முகவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் அவை ஏற்படுத்திய சமூக அரசியல் பிரச்சினைகளையும் பற்றி எங்களுக்கு கிடைத்த சில நிமிடத் துளிகளுக்குள் அளவளாவ முடிந்தது. மக்கள் எழுச்சியின் பயன்களை பெறவேண்டும் அநீதி இழைத்த  ஹோஸ்னி முபாராக்கின் அதர்ம ஆட்சியாளர்கள் சகலரும் தண்டிக்க பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.     இராணுவத்தின் நிர்வாகம் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்ட அவர் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி மீண்டும் தஹிறார் சதுக்கத்தில் பதினோரு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தற்காலிக இராணுவ நிர்வாக அமைப்புக் கெதிராக நடைபெறவுள்ள  ஆர்ப்பாட்டம் பற்றி நம்பிக்கை தெரிவிக்கிறார். அல்ஜசீரா தொலைக்காட்சி பற்றியும் இவர் தனது அதிருப்தியை எதிர் கருத்தை முன்பு குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்து இவரின்     அரசியல் அனுபவத்தையும் மெச்சிக்கொண்டு எகிப்தின் கவிதை காவியமாகுமா என்ற கேள்வியுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...