“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”


எஸ்.எம்.எம்.பஷீர்

நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா
                             சுப்ரமணிய பாரதி

புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட  படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே . அவ்வாறான யிற்சிகளையும்  தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ்  எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும் , அத்தலைமைத்துவத்தின்  கீழ் கட்டுப்படும் "போராளிகள்' எதனை தலைமைத்துவத்திடம்  எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் வழிகாட்டி” (Guidelines)  கூறுகிறது. ஆனால்  அவ்வழிகாட்டியின்  (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது. இங்குதான் புலிகளின் தலைமைத்துவத்தின் கபடத்தனத்தையும் பட்டவர்த்தனமாக காணக் கூடியதாகவுள்ளது.     “வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”  என்று குறிப்பிடும்  அந்த கையேட்டின் தலைமை பற்றிய தலைப்பானது வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் தலைவருடையது என்பதை உண்மையில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனையே நிதர்சனமாக வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தோல்வி புலிகளின் தோல்வியாக தமிழ் தேசிய வக்கிரத்தினதும் வன்முறையினதும் தோல்வியாக சகல தோல்விகளும்  முள்ளிவாய்க்காலில்  முடிவுற்றாலும் அது புலிகளின் தலைவரின் தோல்வியாக அடையாளப்படுத்திமட்டும் பார்க்க முடியாதவாறு தமிழர் தேசியஜனநாயக  சக்திகளும் தங்களை இணைத்து அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.   தமிழர் தலைமைகளும் தங்களின் இறுக்கமான குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் அரசியல் நகர்வுகளிலும் தோல்வியுற்ற தலைமைகள்தான்.
  


எது எவ்வாறாயினும் புலிகள் இயக்க "போராளிகள்" எனப்பட்டோர் தலைவர் என்ற தமிழ் சொல்லினூடாக மட்டும் தமது ஏக போக தலைவரான  பிரபாகரனுக்கு கீழ்படிந்த கட்டுப்பட்ட , அவரின் கட்டளையை சிரமேற்கொண்டு பலரின் சிரத்தை கொய்த , தற்கொலை செய்து பலரை  அழித்தொழித்த   வேளைகளிலெல்லாம் லீடர் என்ற ஆங்கிலச் சொல்லை பாவிக்க முடியவில்லை . ஏனெனில் லீடர் என புலிகள் கீழ் நிலை  தலைவர்களை ( குழு லீடர் )    மட்டும் சுட்டி நிற்பதாக குறித்து அவர்களின் தோல்விகள் லீடருடையது எனதாக்கினர். ஏனெனில் புலிகள் அமைப்பு என்றுமே தோற்காத தலைவரை (பிரபாகரனை ) கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தமது இயக்கத்தையும் தமிழ்  சமூகத்தினையும் கட்டமைத்தனர். நல்லூர் கந்தன் மீது கொண்ட பக்தியை ஒத்த பக்தியை (கடவுள் பக்தி)  லீடர் மீதும் வைக்க வேண்டும் என்றும வற்புறுத்தினர். கோலியாத் மீது தாவீது மேற்கொண்ட புத்தி சாதூரியமான 'போராளிகளை " உருவாக்க பயிற்சியளித்து இறுதியில் புலிகளின்  லீடர்கள் தோற்றதாக அல்லாமல் புலிகளின் தலைவரும் தோற்றுப் போனார். தலைவர் தான் லீடர் அல்ல என்ற கதை போய் தலைவர் லீடராகி தோற்றுபோனார்.  இப்போது புலிகளின் வழிகாட்டியை கீழே பார்ப்போம்

Leadership   (தலைமை)
ஐ.        முன்மாதிரியான செயற்பாடு  ( Example activity)                                                          ஒழுக்கம் போரிடும் ஆற்றல்  நாட்டுப்பற்று  தலைமைத்துவப் பற்று மக்களை நேசிக்கும் பற்று போன்ற வற்றில் முன்மாதிரியான செயற்பாடு உள்ளவராகவும் முன்மாதிரியான சிந்தனை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஐஐ.      நேர்மை (Honest)     
தனிப்பட்ட விடயம் தொடக்கம் பொதுவான விடயம் வரைக்கும் நேர்மையான சிந்தனை உடையவராகவும், நேர்மையான செயற்பாடு உடையவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் நன் நடத்தை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.


ஐஐஐ.   சுயநலமின்மை  ( Un selfishness )                                                                                                       தனது கடமைக்கு மீறிய பொருட்களை வைத்திருப்பதும் தனது தனித்தேவைக்கு அதிகமான பொருட்களை வைத்திருப்பதும் அல்லது வைத்திருப்பதற்குச் சிந்திப்பதையும் தவிர்க்க வேண்டும். (உதாரணம் வாகனம், உடை, பணம்) 
ஐஏ.      தகமை  ( Professional )                                                                                                         எப்போதும் ஒரு குழுத்தலைவர் தொழிற்தேர்ச்;சி உள்ளவராகவும் அதை வளர்த்துக் கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.     


ஏ.         அவரும் அவரைச் சார்ந்தவர்களும்  ( He and his subordinate persons)                                              ஒரு குழுத்தலைவர் சிக்கனமாக இருப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் சிக்கனமாக வைத்திருக்க வேண்டும். தனக்கு இருக்கும் செல்வாக்கை தன்னைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு போதும் அனுமதி அளிக்கக் கூடாது.
சிறப்புரிமைகளை துஸ்பிரயோகம் செய்யாமல் இருத்தல் ( Abusing Privilege )
ஒரு மேல்நிலை அதிகாரிக்கு தனது கடமைகளை விரைவாகவும், திறமையாகவும் செய்வதற்காக சில சிறப்புரிமைகள் அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும். இவ்வாறான உரிமைகளை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எங்களிடத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது   (You expect of us )       

(போராளிகள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி பொறுப்பாளர் எதிர்பார்ப்பது)
ஐ.        பற்று ( Loyalty)                                                                                                                       வீரர்கள் உமது நிலையில் (சுயமெ யில்) பற்றுறுதியாக இருக்க வேண்டும். ஒரு அதிகாரி தனது வீரர்களுடன் சேர்ந்து உழைக்கும் போதும் (விளையாட்டு
பயிற்சி வேலை) வீரர்களைப் பாராட்டும் போதும் அவர்மீது தானாகவே வீரர்கள் பற்று வைப்பார்கள்.


ஐஐ.      பக்தி ( Devotion)                                                                                    எப்போதும் உமது நிலையில் வீரர்கள் மனப்éர்வமாக வியந்து பாராட்டி பக்தியாக இருக்க வேண்டும். உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலமே பக்தியைப் பெற முடியும். (நல்லூர்க் கோயில்) வீரர்கள் எப்போதும் தலைமை மீதும் தனது தேசத்தின் மீதும்  தனது மக்கள் மீதும்  தனது சுதந்திரத்தின் மீதும் பக்தி உள்ளவர்களாக வளர்க்கப்படல் வேண்டும்.
ஐஐஐ.   தாங்கும் ஆற்றல் ( Endurance)    
                                                                                            எப்போதும் தனக்குக் கீழ் உள்ள வீரர்களை எந்தச் சூழ்நிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கும் தன்மை  உடையவர்களாக மாற்றுவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால்தான் போரிடுவதில் சாதனை படைக்க முடியும்.
ஐஏ.      செயலூக்கம்    ( Motivation)                                                                                வீரர்கள் எப்போதும் செயலூக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். அல்லது செயலில் ஊக்கத்தை வீரர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். வீரர்களைச் செயலூக்கப்படுத்தும் போழுது சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது மாறாக விடுதலையில் பற்றூட்டியே ஊக்கப்படுத்த வேண்டும்.


ஏ.         சாதுரியம் ஃ உளத்துணிவு  ( Bravery)                                                                                        வீரர்களை எப்போதும் சாதுரியமான துணிச்சல் காரர்களாக வளர்க்க வேண்டும், எதிரியின் பலவீனங்களை அறிந்து தாக்கும் தந்திரம் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும், (கோலியாத், தாவீது கதை) இதை ஏற்படுத்துவதற்கு வீரர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதே சிறந்ததாகும்.
உங்களிடத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது ( We expect of you (தலைவர்கள் எப்படி இருப்பது என்பது பற்றி போராளிகள் எதிர்பார்ப்பது)


ஐ.        தனிப்பட்ட உறுதிப்பாடும் தியாகம் செய்வதற்குரிய துணிவும், தனக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்க்காதும் இருக்க வேண்டும்.


.      உயர் நிலை தோற்றப்பாடு                                                                                                                       எப்போதும் ஒரு குழுத்தலைவர் உடற் சமநிலையையும், மூளைச் சமநிலையையும் பேணுபவராக இருக்க வேண்டும். இவ்விரண்டும் பேணப்படும் போது ஒரு குழுத்தலைவரின் அதியுயர் தோற்றப்பாடு வெளிப்படும்.
ஐஐஐ.   உறுதிப்பாடு இருப்பதோடு, தோல்வி மனப்பான்மை, விருப்பின்மை போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும். அதே வேளை தனது கடமையின் தன்மையை உணர்ந்து வேலை செய்வதுடன் தனது கடமைக்கு அப்பாற்பட்ட தோற்றப்பாட்டை வெளிப்படுத்தக் கூடாது. (அதிகாரி நிலை உயரும் போது பணிவு நிலை வரவேண்டும்)
ஐஏ.      கீழ் நிலையில் உள்ள வீரர்களை ஏற்றத்தாழ்வு இல்லாமல் சீராக நடத்துதல் (தனக்கென்று குறிக்கப்பட்டவர்களை வைத்திருப்பது தவறான விடயம் ஆகும்)
ஏ.      துணிவு                                                                                                                                                 அதியுயர் துணிவைக் கொண்டிருக்க வேண்டும் எப்போதும் ஒரு அதிகாரி கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை எதிர்கொள்வதற்கு துணிவை வரவழைக்க வேண்டும்.
ய)         அபாயத்தை எதிர்கொள்வதற்கு
டி)         பிழையை ஏற்றுக்கொள்வதற்கும், குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கும்.
உ)        தலைமைத்துவ பண்புகளை தக்க வைப்பதற்கு துணிவு வேவை.       (சிங்கம் முயலுக்கு தலைமை தாங்கும், முயல் சிங்கத்துக்கு தலைமை    தாங்க முடியாது)

குறிப்பு:-    வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம்        லீடருடையது என்றும் ஏற்க வேண்டும்.
ஏஐ.      தேவையில்லாத வேலைகளையும், இலக்குகளையும் தவிர்த்தல்.                 
ஒரு அதிகாரி நன்கு தீர்மானம் எடுத்து தெளிவாகத் திட்டமிட்ட பின்பே எந்த வேலைகளையும் வழங்க வேண்டும். அல்லது ஏற்க வேண்டும் அத்தோடு வெல்லக் கூடிய இலக்குகளையும்  பயன்தரக் கூடிய இலக்குகளையும் தெரிவு செய்து தாக்க வேண்டும். தான் வெல்ல முடியாது எனத் தீர்மானிக்கும் இலக்குகளுடன் சவால் விடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏஐஐ.   திறன் மதிப்பீடு செய்யும் ஆற்றல்
  





No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...