பல்கலைக்கழகங்களும் பாலியல் வக்கிரங்களும் !!

 

                                 எஸ்.எம்.எம்.பஷீர்


உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப – அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப.”


                                                       ( பழமொழி நானூறு )

இப்போது பெரும் பரபரப்பாக தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  பேராசிரிய பெருந்தகைகள் சிலரின் பாலியல் சேஷ்டைகள் சில்மிஷங்கள்  எம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அந்த தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் செல்லையா இளங்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எனது புருவத்தை உயர்த்தின , அதன் விளைவாகத்தான் இந்தக்கட்டுரையும் உருவாயிற்று


பேராதனைப் பல்கலைக்கழகமும்  ( University of Peradeniya ) இனக்கற்கைகளுக்கான   சர்வதேச மையமும் ( International Centre for Ethnic Studies (ICES) )சேர்ந்து சுவீடனிலுள்ள கோதன்பேர்க் பல்கலைக்கழகம் (University of Gothenburg –Sweden  )  உபாசலா பல்கலைக்கழகம் Uppsala University –Sweden ) ஆகியவற்றின் அனுசரணையுடன்  ” சமாதானமும் அபிவிருத்தியும் மீதான இலங்கை  மாநாடு  ”  ( Sri Lankan Conference on Peace and Development )
23-25 ஆகஸ்து மாதம் 2009 கண்டியில் நடந்தது.  இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் , சிரேஷ்ட விரிவுரையாளர்கள் , ஆய்வாளர்கள் , சமாதான  தன்னார்வ தொண்டு  நிறுவன செயற்பாட்டாளர்கள் ,  ஸ்கண்டிநேவிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலதரப்பட்டோரின் ஆய்வு கட்டுரைகள் கருத்து பரிமாற்றங்கள் அங்கு இடம்பெற்றன,


அம்மாநாட்டில் நான் சமர்ப்பித்திருந்த “சமாதானச் செயற்பாட்டில் , சமாதான கட்டுமானத்தில் , சமாதான உருவாக்கத்தில் பிளவுபட்ட கிழக்கு மாகாண சபை  ஸ்தாபிதமும் ; யுத்த பின்னரான அனுபவங்களும் ” என்ற தலைப்பிலான எனது ஆய்வுக்கட்டுரையும் தேர்ந்தெடுக்கப பட்டிருந்ததால் நானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன் அப்போதுதான் முதன் முதலில் அம்மாநாட்டில் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கலந்து கொண்டு தமது துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை இரு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் ஒருவரான சிரேஷ்ட விரிவுரையாளர் செல்லையா இளங்குமரன் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகான சபை தேர்தல் யாழ் மாநகர சபை தேர்தல்கள் ஆகியன மக்களின் விருப்பினை பிரதிபலிக்கவில்லை , தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்றும்  தனது ஈ.பீ தீ பீ ,(EPDP)  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)  வெற்றி பெற்றமை சரியான முறையில் நடந்த தேர்தலில் அல்ல என்றும் தனது ஆதரவு- எதிர்ப்பு   அரசியலை துல்லியமாக வெளிப்படுத்தி தனது பதவி கல்வி வழங்கிய அதிகாரத்தை கொண்டு அங்கு வந்திருந்த வெளிநாட்டு கல்விமான்களுக்கு தமது அரசியல் கருத்துக்களை அயல் நாட்டுக்கு காவிச்செல்ல உதவினார். ஆனால் பின்னர் நான் நீங்கள் எல்லாம் புலிகளின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கேட்டபோது தாங்கள் புலிகளுக்கு எதிராக வாய்திறக்க முடியாத கையாலாததனத்தையும் தாங்கள் புலிகளுக்கு நகைகளை நிர்ப்பந்தத்தில் வழங்கியது பற்றியும் கூறினார். ஆனால் இவருக்கு பின்னால் வேறு ஒரு வரலாறு ஒன்று என்பதாக இன்னுமொரு தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் இவ்வாறு  எழுதியுள்ளார்.
செல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1995 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் அவ்வாண்டே யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார்.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோக (Pedophilia ) குற்றச்சாட்டில் கைதான விரிவுரையாளர் கணேசலிங்கம் போன்ற பிருகிருதிகள் மூலம் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்த பல்கலைகழக பாலியல் வக்கிரங்களை  பார்க்கின்றபோது எனது பல்கலைக்கழக காலங்களும் ஞாபகத்துக்கு  வந்தன . பேராதனைப் பல்கலைக்கழக மாணவ காலத்தில் ஒரு தமிழ் சிரேஷ்ட புவியியல் விரிவுரையாளரின் பெண் பித்து பற்றி அவருக்கு இரையாக போன பெண் ஒருவர் பற்றி எங்கள் காலத்தில் முணுமுணுப்புக்கள் எழுந்தன. அவ்வாறே ஒரு சிங்கள விரிவுரையாளரின் அவரது பாலியல் இச்சைக்குள்ளான ஒரு சிங்கள மாணவி பற்றியும் செய்திகள் பரகசியமாகின. பெண்கள் மத்தியில் பல்லிளித்து கதாநாயகனாக பவனிவந்த அந்த விரிவுரையாளர் பற்றிய செய்திகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அறிந்த செய்திதான். மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற இன்னுமொரு தத்துவஞானி விரிவுரையாளரும் (மேனைகை ஆட்டம் கண்டு தவம்குலைத்த விசுவாமித்திரன்  ) கூட பேராதனை பல்கலைக்கழகத்தில் பரவலாக அறியப்பட்டவர். அதனால் நாட்டை விட்டே அவர்கள் இருவருமே வெளியேறிவிட்டார்கள்.
இன்னுமொரு தமிழ் ஆண் முகாமைத்துவ விரிவுரையாளர்  தனது விரிவுரையின் போது முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதான இரண்டு மதப்பிரிவு பற்றி ( முகாமைத்துவத்திற்கும்  முஸ்லிம் மதப்பிரிவிற்கும் சம்பந்தம் என்ன அப்போது ஏற்பட்டது என்பதை என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை!!) ஷியா பிரிவினர் பற்றி குறிப்பிட்டபின் அடுத்த பிரதான பிரிவினரை  சொல்வதில் நாணம் கொண்டு மாணவ மாணவியரை சில்மிஷ புன்முறுவலுடன் அரைக்கண் சிமிட்டி நோக்கி அப்பிரிவினர் குறித்து சொல்லப்படும் சொல்லை சொல்லி , சில  மாணவர்களையும் மகிழ்வித்து  மாணவியர்களை சங்கடப்படுதியதுடன் , அச்சொல்லை அழுத்தி அழுத்தி கூறி அச்சொல் பாமர கொச்சை வழக்கில் பாவிக்கப்படும் அர்த்தத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள அவர் அன்றும அதற்கடுத்த விரிவுரையிலும் செய்த பாவனைகள் , நளினங்கள் அவருக்கு ” ஆண்மை” இருக்கிறதை உறுதி செய்ய செய்தது போல் தோன்றியது. அவரது அந்த பாவனைகள், அவர் அதனை அழுத்தி கூறி அடைந்த அற்ப சந்தோசங்கள்  அன்றுபோல் இன்றும் எனது மனதில் அசிங்கமாக பதிந்திருக்கின்றன. பல்கலைகழகம் பாலியலும் கற்பிப்பதுண்டு ஆனால் பாலியல் வக்கிரம் கொண்ட சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆசைக்கு பலியாகும் பெண்களை வெறுமனே இருவர் சம்பந்தப்பட்ட உரிமை பிரச்சினையாக அல்லாது அதிகாரத்தை துஸ்பிரயோகம் பண்ணும் ஒரு கடினமான குற்றமாக தண்டிக்கும் விடயமாக அணுகப்பட வேண்டும. பல்கலைக் கழகங்களில் ராஜாக்களாக பவனிவரும் பல ஆசாடபூபதிகள் ஆசிரியர்களாக மட்டும் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் இன்றைய சூழல் மாணவர்களால் திட்டமிட்டு பயன்படுத்தப்பட வேண்டும் . இப்போது தேவை விரிவுரையாளர்களின் சொந்த “அரசியல்” போதனை அல்ல ,  வெறுமனே தேசியத்தின் பேரால் இன உணர்வின் பெயரால் தூண்டப்பட்டு சிந்தனைச் சுரண்டல் செய்யப்பட்ட மாணவர்  சமுதாயம் மனித விழுமியங்களுக்கான  நேர்மையான சுயேச்சையான போராட்டங்களை இனிமேல்தான் செய்யவேண்டும். அரச பல்கலைக்கழக  ஆசான்கள்  அரசிடம் சம்பளம் வாங்கி மாணவர்களுக்கு சேவை புரியும் ஊழியர்கள் என்பதை மனதிலிருத்தி செயற்படாவிட்டால் மாணவர்கள் போர்க்கொடி எழுப்பவேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
Thenee . Mahavali. salasalappu சலசலப்பு (October 2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...