இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள்

எஸ்.எம்.எம்.பஷீர்


ilamparuthy bazeer bazeer-2
படம்: இளம்பருதி        புலிகளின் அக்குரஸ்ஸ   பள்ளிவாசல் குண்டு வெடிப்பு காட்சிகள்

1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு  சந்தியில் நடைபெற்ற மீலா துன்னபி விழாவில் சிற்ப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது  " இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிற்ந்ததினத்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.
இதே இளம்பருதிதான் யாழ்ப்பான முஸ்லிம்களை 24 மணித்தியால கெடுவில் வெளியேற்றியவர் என்பதையும் மறந்து சமாதான ஒப்பந்த்தததின் பின்னர் அங்கு குடியேறிய பத்து ஐம்பது முஸ்லிம்கள் 2003 மே மாதம் கொண்டாடிய நபி பிறந்த விழாவில் பெருந்தன்மையுடன் தங்களை துரத்தியவனையே சிற்ப்பு அதிதியாக கெளரவித்தனர்.” புலி பசித்தாலும் புல்லைதின்னாது”. எனினும் , சாணக்கியனின் சாம பேத , தான, தண்ட அனுகுமுறைகளை கையாண்டேனும் புலியுடன் அனுசரித்து வாழவே முஸ்லிம்கள் எப்பொழுதும் வட கிழக்கிலே முனைப்பு காட்டி வந்திருகிறார்கள்.ஆனால் என்ன புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்திஉள்ளர்கள்.
எந்த நபிகளாரை தானும் நேசிப்பதாக கூறி. எந்த “போரளி¢யை” கொண்டு இன்னுமொரு மீலதுன்னபி விழாவில் தெற்கில் கொட்டபிடியவில் முஸ்லிம்களை இந்த மண்ணில்யிருந்து ” விடுதலை” செய்வதற்காக 17 ஆயிரத்தியொண்ணாவது கொலையாளியை அனுப்பீயிருக்கிறாய். அந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் உன்னை அழைத்தது போலன்றி, உன்னை சாரா விட்டால் தமது அரசியலை வட கிழ்க்கில் இடயூறின்றி செய்யமுடியாதென்றும், மாற்று முஸ்லிம் அரசியல் இயக்கங்கள், கட்சிகள் உனது அனுசரனையுடன் ஒரங்கட்ட, தனது ஏகபோக அரசியலை முஸ்லிம்களக்கு செய்ய , நோர்வேயின் பின்புலத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உன்னிடம் விருந்துண்டு ஒப்பந்தம் பண்ணி, அந்த மை காயமுன்னமே வாழைச்சேனையிலும் மூதூரிலும் முஸ்லிம்களின் “விடுதலைககாக” எத்தனை “இன்னுயிர்கள் நீத்தவர்கள் நீங்கள். யாழ்ப்பாண மையவாத ” விஞ்ஞானத்தின்” சிருஸ்டியான ” •ப்ரங்கெய்ஸ்டைன்” புலிகள் ” ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து , கடைசியில் மனிதனை கடித்த கதையாய் இப்போது தன்னை போசித்த முல்லைத்தீவு தமிழ் குடிமக்களையே பலிகொள்ள தொடங்கியிருக்கிற்து. முஸ்லிம்களுக்கும் , சிங்களவர்களுக்கும் மட்டுமல்ல என்று தனது மக்களுக்கும் எதிரியாக புலிகள் உலகுக்கு புலப்பட்டுள்ளது.  
இந்த சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் பாணியில் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என பிரகடனப்படுத்திக்கொண்டு தமது இனத்தினை ஏதோ புலிகள்தான் அங்கீகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஹக்கீம் புலிகளுடன் ஒப்பந்தம் செய்த பொழுது முஸ்லிம் தரப்பில் சென்றிருந்த முன்னாள் செனட்டரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான ஜனாப் மசூர் மௌலானா அவர்கள் நன்கு சமைத்த ஹலால் ஆட்டிறைச்சிக் கறியினை உண்டதன் பின்னர் பிரபாகரனிடம் தம்பி உங்களுடைய பிள்ளைகளினுடைய படிப்பு எப்படியென்று கேட்டுவைத்தார். அவரும் பதிலுக்கு தனது பிள்களகனின் சிறந்த பெறுபேறுகளை சொல்லிவைத்தார்.
ஆனால் 1990 ம் ஆண்டு 12 வயதிற்கும் குறைந்த பாலகர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருந்த வேளையிலும் ஏறாவுரில், அழிஞ்சிப்பத்தானையில், படுக்கையிலும், தாயின் முலையைச் சப்பிய மழலையையும், கற்பிணியின் வயிற்றில் ஜனித்திருந்த குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம் நிட்சயமாக கேட்கவேண்டிய கேள்விதான் அது!, இந்த ஒப்பந்தத்தின் பின்னர்தான் ஹக்கீம் “வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் அதிகாரம் பெற்ற ஒரு தனித்துவ இனம் என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை என்னுடன் எழுத்து வடிவில் உடன்பாட்டைச் செய்திருக்கின்றது.” என்று குதூகலித்ததன் பின்னர்தான் மூதூரிலும், வாழைச்சேனையில் திருமணத்தில் ஆட்டிறைச்சி சமைக்கப்போனவர்களை ரயர்போட்டு எரித்ததும் அந்த தமிழ் மணமகள் லண்டன் வந்தபோது எங்களிடம் கண்ணீர்விட்டு சொன்னதையும் கறுத்தப் பாலத்திற்கு அப்பால் செல்லமுற்பட்ட ஏறாவூர் விவசாயிகளை தடுத்து ஹக்கீமிடம் போய்ப்பாருங்கள் என்று பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் தமது காணிகளை காணச் சென்றோரை தடுத்து நிறுத்தியதுமென இன்னோரன்ன சம்பவங்கள் இடம்பெற்றன.
புலிகள் முஸ்லிம்களின் அரசியல்வாதிகளை மட்டுமல்ல சிவில் சமூகத்தினரையும் தங்களது ஆதிக்க மேலாண்மையை அரசியல் சாணக்கியத்துடனும் கையாள முற்பட்டட பொழுதெல்லாம் முஸ்லிம்கள் துரதிஸ்டவசமாக பலியாகியிருக்கின்றார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் செல்வனை கரடியனாற்றில் ஜம்மியத்துள் உலமாவின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் சந்தித்த பொழுது அவர் “நபிகளாரின் புனிதக் குர் ஆனிலிருந்து உண்மை, நேர்மை, நீதி இறுதியாக வெல்லும் ஆகவே தமிழர் சதந்திரப் போராட்டம் இம்மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறுதியில் வெல்லும் என்று” கூறியதை பறைசாற்றி புலிகளின் சமாதானச் செயலக அறிக்கை புளகாங்கிதம் அடைந்திருந்தது.. இதில் உண்மை நிலையினை அறிவதற்காய் நான் முயன்றபொழுது எனது விசாரணைகள் அதனை உறுதிப்படுத்தின. எனது விசனமும் அதிகரித்தது.
இன்னுமொரு சம்பவமாக மௌலவி சுஹைர் என்பவர் யாழ்ப்பாணத்திலே புலிகளின் பொங்கு தமிழ் மேடைகளை அலங்கரித்திருந்தார்.. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிமாயிருப்பினும் புலிகளினையும் அவர்களது (போராட்டங்களையும்) போற்றிப் புகழ்ந்ததுடன் புலிகனின் புனிதப் போராளிகளின் கல்லறைகளில் முஸ்லிம் புனிதப் போராளிகள் அடக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமிய மதத்தின் புனிதப் போராளி கருத்தியலினையும் சிந்தை இழந்து சிதைக்கமுற்பட்டார். துரதிஸ்டவசமாக புலிகளின் இராணுவ பலம் முஸ்லிம்களின் அரசியல், சிவில் சமூகத்தின் வீரியத்தினை சிதைவடையச் செய்தது. ஒருபுறம் இது விசனத்திற்குரியது மட்டுமல்ல சிலவேளை இஸ்லாமிய அடிப்படை மத நம்பிக்கைக்கும் குந்தகமாக அமைந்துள்ளது. அத்தகைய நிலைப்பாடுகள் இறந்தகால நிகழ்வுகளாகவே இருக்கட்டும் என்பதுவே வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடாக இருக்கவேண்டும்
பள்ளிவாசல்மீதான புலிகளின் தாக்குதலுக்கு மே மாதம் 14 ந் திகதி 1998 ம் ஆண்டு அக்கரைப்பற்று மஸ்ஸிதுல் ஹதா பள்ளிவாசலில் பதுருதீன் என்னும் பொலிஸ் உத்தியோகஸ்தர்மீது பள்ளிவாசலில்வைத்த சுட்டதும் மேலும் மூவரை கைக்குண்டு எறிந்து காயப்படுத்தியதும் புலிகள் பள்ளிவாசல்கள் ஏனைய வணக்கஸ்தலங்கள்மீதான தாக்குதல்களை நடாத்தி எத்தகைய விளைவுகளை திட்டமிட்டு செயற்ப்டுத்தி;டிருக்கின்றார்கள் என்பதனை அடுத்த கட்டுரையில் தொடரவுள்ளோம்.
Thenee, mahavali (March 2009) 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...