உள்ளூராட்சித் தேர்தலில் எதிரணியினர் இனவாதம் பேசியா வெற்றி பெற்றார்கள்? புனிதன்


 பெப்ருவரி 10 இல் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று அதில் கூட்டு
எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘நல்லாட்சி’ அரசுக்குச்
சார்பானவர்களும்ää தமிழ் தேசியம் பேசியோரும்ää ஏகாதிபத்திய
அடிவருடிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனதை அவதானிக்க முடிந்தது. இந்த அதிர்ச்சி இன்னமும் நீங்கியதாகத் தெரியவில்லை. குறிப்பாக,  தமிழ் ஊடகங்கள், முக்கியமாகப் பத்திரிகைகள்,  இந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில நாட்கள் பிடித்தன. தேர்தல் முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டு நாலைந்து நாட்களாகிவிட்ட பின்னர் கூட அவைகளால் அதைச் சீரணிக்க
முடியாமல் திண்டாடின. பல பத்திரிகைகள் புதிய செய்திகளை
பதிவேற்றம் செய்யாமல் ஸ்தம்பித்துப் போய் இருந்தன. உதாரணமாக,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ‘சப்றா’ புகழ் ஈ.சரவணபவனுக்குச் சொந்தமான
‘உதயன்’ நாளிதழ் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்படுவதற்கு
முன்னர் வெளியிட்ட “முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
முன்னணியில்” என்ற தலைப்புச் செய்தியுடன் நீண்ட நாட்களாகத் தவம்
இருந்தது.



அதற்குக் காரணம், அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும்,
‘நல்லாட்சி’ அரசு மீதும் இருந்த பற்றுதலும் அளவுக்கதிகமான
நம்பிக்கையுமாகும். தமிழரசுக் கட்சியினர் நீண்டகாலமாகச் சொல்லி வரும் ஒரு கருத்துää “எங்கடை கட்சி ஒரு தடியை நட்டு வைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்று சொன்னால் கூட தமிழ்ச் சனம் கண்ணை மூடிக்கொண்டு வோட்டுப் போடும்” என்பதாகும். எனவே இத்தேர்தலிலும் தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தமக்கு வாக்களிப்பார்கள் என கூட்டமைப்பு எண்ணியது கானல் நீராகிப் போய்விட்டது. அதேபோல, ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி(கள்) இடையில் வரும் தேர்தல்களில் எப்படியும் (சுத்துமாத்துப் பண்ணி) வென்றுவிடும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போய்விட்டது.

இந்த மாதிரியான கணிப்புகளை மீறி நாட்டு மக்கள் தெற்கில் மட்டுமின்றி
வடக்கு கிழக்கிலும் அரசுக்கெதிராகவும், அரசுக்கு முண்டுக் கொடுத்து வரும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பிக்கு எதிராகவும் வாக்களித்து
தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களின் இந்தத் தெளிவான தீர்ப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள்
எதிரணியின் அமோக வெற்றிக்கும்,  தமது படுதோல்விக்கும் ஏதேதோ நியாயங்கள் சொல்லித் திருப்திப்படுகின்றன. தென்னிலங்கை அரசு சார்பு பிற்போக்கு அரசியல் சக்திகள் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், “மகிந்தவுக்கு எதிராக 55 வீதமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்” என்று சொல்லிää தமது கையாலாகாத்தனத்தை
மறைக்க முயல்கின்றன. அத்துடன் மகிந்தவின் முன்னைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காததால்தான், மகிந்த தரப்பு வெற்றிபெற முடிந்தது என்றொரு வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. மகிந்த உட்பட அவரது குடும்பத்தின்
அங்கத்தவர்கள்,  உறவினர்கள், அவரது ஆட்சியில் பதவி வகித்தவர்கள் என
அனைவருக்கும் எதிராக இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 400 வரையிலான வழக்குகளைத் தொடுத்திருக்கின்றது.
இவற்றில் 10 வழக்குகளில் கூட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
அப்படியிருக்க அரசு அவர்கதை; தண்டிக்காததால்தான் அரசுக்கு எதிராக
மக்கள் வாக்களித்தார்கள் என்ற நியாயம் எப்படிச் சரியாகும்?
அதுவுமல்லாமல்ää மகிந்த அணி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டது என்று மக்கள் கருதி, அதற்கெதிராக அரசு நடவடிக்ககை எடுக்காததால்தான்
மக்கள் அரச கட்சிகளுக்கு எதிராக வாக்ளித்தார்கள் என்பதை ஒரு
வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், நடவடிக்கை எடுக்காத அரச கட்சிகளை விட, ஊழல் செய்த மகிந்த அணியினருக்கு எதிராகவல்லவா மக்கள் பெருமளவில் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் அப்படிச்
செய்யாமல் மகிந்த அணியை ஆதரித்து; பெருமெடுப்பில் வாக்களித்தது எதற்காக?

அதற்கு உண்மையான காரணம், அரசாங்கம் எதிரணயினர் மீது அரசியல்
உள் நோக்கங்களுடன் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் பொய்யானவைää
சோடிக்கப்பட்டவை என்று அவர்கள கருதியதால்தான்.

அதேநேரத்தில் தமிழ்த் தரப்பைப்பொறுத்தவரையில்ää தமிழ் அரசியல்வாதிகள்,  ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பத்தி
எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் என பல நாமங்களைச் சூட்டிக் கொண்டு பவனி வரும் அத்தனை பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகளும்ää மகிந்த அணி சிங்கள இனவாதம் பேசியதால்தான்,அவர்களுக்கு சிங்கள மக்கள்
அமோகமாக வாக்களித்துள்ளார்கள் என்று பிரச்சாரம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அது உண்மையானால் முதலில் அவர்களிடம் ஒரு கேள்வி. “நீங்கள் சொல்வது உண்மையானால்,2015 ஜனவரி 8 ஜனாதிபதித்
தேர்தலிலும், பின்னர் அதே ஆண்டு ஓகஸ்ட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலிலும், ஏன் இந்த சிங்கள மக்கள் மகிந்தவை ஆதரித்து வாக்களித்து
வெற்றிபெற வைக்கவில்லை?”

உண்மை என்னவென்றால்ää நாய்க்கு எங்கை அடித்தாலும் அது
பின்னங்காலைத்தான் தூக்கும் என்று சொல்வது போலää நமது இந்தப்
பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் தமக்கு எதிராக ஏதாவது விரோதமாக
நடந்தால், அதற்கு சிங்கள இனவாதம் தான் காரணம் என நாக்கூசாமல்
உடனடியாகக் கூறி விடுவர். தமக்குச் சாதகமாக ஏதாவது நடந்தால்ää சிங்கள
மக்கள் இனவாதத்தைக் கடந்து விட்டார்கள் என்று சொல்வார்கள்.
அப்படியான கதைதான் அவர்களது 2015 ஜனவரி 8 நிலைப்பாடும்ää 2018
பெப்ருவரி 10 நிலைப்பாடும். எல்லோருக்கும் தெரியும் நடைபெற்று
முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவோ
அல்லது கூட்டு எதிரணி சார்ந்த எவருமோ சிறுபான்மை தேசிய இனங்கள்
சம்பந்தமாக இனவாத அடிப்படையில் எந்த ஒரு சொல்லையும் உதிர்க்கவில்லை என்று. மாறாக அவர்கள் சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கும் சென்று கூட்டங்கள் நடாத்தி மக்களின் ஆதரவைக் கேட்டனர். மக்களும் ஓரளவுக்கு
அவர்களது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அவர்களுக்கு
வாக்களித்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், இதர தமிழ்
இனவாத அரசியல் கட்சியினரும் என்ன செய்தார்கள்? மேடைக்கு மேi;ட
இனவாதம் பேசினார்கள். அப்படியிருக்க மகிந்த தரப்பு இனவாதத்தால்தான்
உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது என நாக்கூசாமல் இவர்கள்
சொல்வது இந்த அரசுக்கு எதிராக வாக்களித்த நாட்டின் பெரும்பாலான
மக்களை அவமதிப்பதற்காகவே.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராக பெருமெடுப்பில் வாக்களித்ததிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை
விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினமான விடயமல்ல. இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவபர்கள் 2015 தேர்தல்களில்
மக்களுக்கு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தே ஆட்சிபீடம் ஏறினார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது உட்பட அவர்கள் கொடுத்த
வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. போதாக்குறைக்கு முன்னைய அரசால் ஆரம்பிக்க்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் இந்த அரசு நிறுத்தியது. விலைவாசிகளை கட்டுக்கடங்காமல் உயர்த்தியது.
முன்னைய அரசின் ஊழல் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிரூபிக்க வக்கில்லாமல் தாமே மத்திய வங்கி பிணைமுறி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாக்களைக் கொள்ளையிட்டார்கள்.
தமது நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய தொழிலாளர்கள், அரச ஊழியர்கள்ää மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டனர்.
நாட்டின் வளங்களை அந்நியருக்கு தாரைவார்த்தார்கள். இப்படியாக
கட்டுக்கடங்காத மக்கள் விரோத நடவடிக்கைகளைச் செய்தார்கள்.
அதனால் இந்த அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்தது. அதைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் உள்@ராட்சித்
தேர்தலை நடாத்தாது இரண்டு வருடங்களுக்கும் மேலாக
இழுத்தடித்தார்கள். தொடர்ந்தும்இழுத்தடித்தால் மக்கள் வீதியில்
இறங்கிக் கிளர்ச்சி செய்வார்கள் என்ற நிலை தோன்றிய போதுதான் தேர்தலை நடாத்தினார்கள்.

தேர்தலில் மக்கள் அரசுக்கும் அதன் எடுபிடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி. என்பனவற்கும் நல்ல பாடம்
புகட்டினார்கள். இதுதான் நடந்தது. இதனால் திகைத்துப் போன அரசும்
அதன் எடுபிடிகளும் வெற்றி பெற்ற எதிரணி மீது சேறு பூச முயல்கின்றனர்.
அந்தச் சேறு பூசல் மக்களிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்பதே நிலைமை. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும்ää நாடாளுமன்றத் தேர்தல்,
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அவற்றிலும் கூட்டு எதிரணி அமோக
வெற்றி பெறுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் எதிரணியினருக்கு எதிராகச் சதி
சூழ்ச்சிகளில் ஈடுபடலாம். ஆனால் அவர்களால் மக்களின் மனங்களை
வெல்லவோää அவர்களது தீர்ப்பை மாற்றவோ ஒருபோதும் முடியாது.

“ மக்கள் மட்டுமே வரலாற்றின்
உந்து சக்தியாவர்.” - மாஓ

மூலம் : வானவில்  -இதழ் 87 பங்குனி  2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...