"போர்க்குற்ற விசாரணை என்ற அரசியல் "



பிரேசில், ஆர்ஜன்ரீனா,கொலம்பியா, சிலி, பெரு, சூரினாம் ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகப் பணி பரிந்த இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியாவிற்கு எதிராக போர்க்குற்ற
விசாரணை நடைபெற்றால்ää அவருக்கு எதிராக சாட்சியங்களை
வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக, இலங்கையின் இன்னுமொரு முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைத் தூதுவர் பணியிலிருந்து கடந்த ஓகஸ்ட் 31ந் திகதி ஓய்வுபெற்ற ஜகத் ஜயசூரியா மீதுää பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் சில மனித உரிமை
குழுக்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக பதவி வகித்த இறுதி யுத்தத்தின்போதுää வவுனியா கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரியா பணி புரிந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




இலங்கை தொடர்பில் ‘போர்க்குற்றம்’ என்ற பதம் 2009 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசபடைகளுக்கும் நடந்த இறுதியுத்தத்தில் இலங்கை அரசபடைகள் மாத்திரம் இழைத்த குற்றங்கள் என்ற அர்த்தத்திலேயே பொதுவாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை சரத் பொன்சேகாவும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். ஆனால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கையில், இலங்கை அரச படைகளும் புலிகளும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் ‘போர்க்குற்ற விசாரணை’ என்பதுää உலகளாவிய ரீதியில் போர்க்குற்றங்களை தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கும் நாடுகளாலாலேயே ஐ.நா. வாயிலாக முன்னெடுக்கப்பட்டும்  கொண்டிருக்கின்றது.

புலிகளைத் தோற்கடித்த இறுதியுத்த காலப்பகுதியில் இலங்கையின் இராணுவத்தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா, உதவிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. இவர்கள் இருவருமே தற்போது இலங்கையில் போர்க்குற்ற
விசாரணையொன்று நடைபெற வேண்டுமென்ற தரப்பினரது முழு ஆதரவாளர்களாக உள்ளனர். இப்போது இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஒருபடி முன்னேபோய், கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு இலங்கை அரசபடைகளுக்கு எதிராக சாட்சியம் வழங்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இதே சரத் பொன்சேகா, புலிகளை
போரில் வெற்றி கொண்டதற்கு காரணமாகவிருந்தது அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்ல இராணுவத்தளபதியாகவிருந்த தானே என மார்தட்டி 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்ää
2015 ஆம் ஆண்டுத்தேர்தலில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராகப் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்துää இலங்கை அரசியலில் ‘180 பாகை பல்டிகள்’ பல நடந்த வண்ணமுள்ளன. அந்த வகையாகவே சரத் பொன்சேகாவின் கூற்றையும் பார்க்க வேண்டும். அத்துடன் மைத்திரிபால சிறிசேனா, சரத் பொன்சேகா போன்ற அரசாட்சிக்கு விசுவாசமற்றவர்களைக் கொண்டிருந்த அரசினாலேயே,  ஒருபோதுமே தோற்கடிக்கப்பட முடியாதென்று வர்ணிக்கப்பட்ட புலிகள் முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது இலங்கை வரலாற்றில் ஆச்சரியமளிக்கக் கூடியதொரு விடயமாக எப்போதுமே பேசப்படப் போகின்றது.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னர் இராணுவத்தளபதி தனக்குக் கீழிருந்த கட்டளைத்தளபதிக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் சாட்சி சொல்ல முன்வந்திருப்பதானது , போர்குற்ற விசாரணையை வலியுறுத்தும்
தமிழர் தரப்பினருக்கு சாதகமான செய்தியாக அமைந்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டினை இலங்கை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் 1995-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடாநாட்டில் கைது செய்யப்பட்டுக் காணாமற்போன 600 பேர்கள் தொடர்பாக சரத் பொன்சேகா நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார்.
இதனால் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டுமென தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் அந்நிய சக்திகளிடம் நல்ல பெயர் வாங்கிää போர்க்குற்றத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவர் இவ்வாறு
கூறினாரோ தெரியாது என்ற சந்தேகம் எழுவதும் தவிர்க்க முடியாதது.

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தகாலப்பகுதி முழுவதிலும் அத்துடன் அரசைக்கவிழ்ப்பதற்காக ஜே.வி.பி கிளர்ச்சி செய்த காலப்பகுதிகளிலும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை யாராலும் மறுப்பதற்கில்லை. அந்நிய அழுத்தங்களின்றிää இலங்கையில் நீதியான போர்க்குற்ற விசாரணையொன்று இடம்பெறுவதை இன, மத அரசியல்
பேதங்கடந்து எல்லா இலங்கையர்களும் வரவேற்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் போர்க்குற்ற விசாரணை என்பது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்ற ஒரேயொரு நோக்கத்திற்கு அப்பால்,  தத்தமது எதிரிகளைக் குறிபார்த்தே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொதுவாக புலிசார்பு
தமிழ் தேசியவாதிகளும் தற்போதைய அரசும்ää முன்னைய அரசினை எப்படியாவது பழிவாங்க வேண்டும்,  மீண்டும் அதிகாரத்திற்கு வராமல் ஓரங்கட்ட வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரல்களின் கீழேயே வேலை செய்து வருகிறார்கள்.

நன்றி: வானவில் இதழ் 81 -செப்டம்பர் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...