"சீனா இன்று! " மருதன்

“நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால்,  இந்தியாவில் பிறக்கவே
விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ
முடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை
அபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என்
அனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால் 
ஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்."  மருதன்


வரலாற்றில் முதல்முறையாக வ ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ (In the Name of People) ) என்னும் சீனத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் (NEtflix)  சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 55 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக்கிறார்கள். சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரேவழி,  திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். “ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும்  அந்நாடு குறித்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்” என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். “சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல்  மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. ஆம் என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம்  சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால் பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன்,  இணையத்தை உபயோகித்தேன்,  மண்டரின் ஓரளவு கற்றுக் கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் போன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டேன்.
சீனாவில் சதந்திரமாக இருக்க முடியாது  என்றார்கள். நான் மூன்றுமாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றி வந்தேன்.
சீனர்கள் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள் என்றார்கள். கம்யூனிசம் குறித்து என்னால் சீனர்களுடன் விவாதிக்க முடிந்தது. மொத்தத்தில் நான் தெரிந்து கொண்டது ஒன்றுதான். சீனா பற்றிச் சொல்லப்படுவது அனைத்தும் அரை உண்மை அல்லது முழுப்பொய்.” சீனாவின் பாய்ச்சல்கள் மறுக்க முடியாதவை. அமெரிக்காவோடு நேருக்குநேர் நின்று போட்டிபோடும் பொருளாதார ஆற்றலைக் கொண்டிருக்கும் ஒரே நாடு சீனா  மட்டுமே என்பதை அந்நாட்டை
விரும்புபவர்கள் மட்டுமல்ல  வெறுப்பவர்களும் கூட ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு சராசரி சீனரின் சொத்து 2006-ல் இருந்ததைவிட 2016-ல் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது. சீன அரசின் முனைப்பான திட்டங்களே இதற்கு முழுமுதல் காரணம். போகிறபோக்கில் எந்தவொரு திட்டத்தையும் அங்கே அரசியல்வாதிகள் அறிவிப்பதில்லை.

அறிவித்து முடித்த கையோடு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் மறந்துவிடுவதும் இல்லை. எத்தனை கடினமானதாக இருந்தாலும் சரி அறிவித்த திட்டத்தை நிறைவேற்றி முடித்தபிறகே மறுவேலை  பார்க்கிறார்கள். ஓர் உதாரணம்…சீனாவின் பொருளாதாரக் கட்டுமானத்தையும் அந்நாட்டின் வருமான புள்ளிவிபரங்களையும் ஆராய்ந்த நிபுணர்கள், சீனாவின் பலம் அதிகரிக்க வேண்டுமானால் உற்பத்தித் துறையிலிருந்து சேவைகள் துறைக்கு நாட்டை நகர்த்திச் சென்றாக வேண்டும் என்றொரு கருத்தைச் சொன்னார்கள். சரி…எதிர்காலம் என ஒன்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் உடனே அந்தக்
கருத்தை அள்ளியெடுத்துக் கொண்டு செயல்பட அரம்பித்துவிட்டது சீன அரசு. இன்று சீனா குறிப்பிடத்தக்க அளவுக்குச் சேவைகள் துறை பக்கம் நகர்ந்து வந்துவிட்டது.

அதுமட்டுமின்றி, அத்துறையில் சாதனையும் படைத்திருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் அல்லாமல், சீனா தன் காதுகளையும் கண்களையும் எப்போதும் திறந்து  வைத்திருப்பதால் மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது. சமீப காலமாக சீனாவில் எழுதப்பட்டுவரும் அறிவியல் புனைகதைகளை உலகம் ஆர்வத்துடன் வாசிக்கிறது. முழுக்கச் சொந்தத் தயாரிப்பில் ஒரு பெரிய பயணிகள் விமானத்தை (சி919) உருவாக்கிவிட்டது

சீனா. மற்றொரு பக்கம் விண்வெளி ஆய்வுகளிலும் செயற்கை அறிவாற்றல்
துறையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

மருத்துவம், சுகாதாரம் இரு துறைகளிலும் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. ஐந்து வயதைத் தொடுவதற்குள் இறந்துபோகும் சீனக் குழந்தைகளின் எண்ணிக்கை 2006 வாக்கில் 2.19 சதவிகிதமாக இருந்தது. பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை பாதியாகிவிட்டது.

சீனர்களில் கிட்டத்தட்ட சரி பாதியினர் இன்று மொபைல் மூலம் இணையத்தைப் பாவிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு, மூவரில் ஒருவரிடம் மட்டுமே மொபைல் இருந்தது. பத்துபேரில் ஒருவர் மட்டுமே இணையத்தை உபயோகித்து வந்தனர். சென்றவாரம் வந்த ஓர்அறிவிப்பு இது. ‘நாம் ஏன் விக்கிப்பீடியாவைச் சார்ந்திருக்க வேண்டும்? நமக்கான விக்கிப்பீடியாவை நாமே உருவாக்கிக் கொள்வோம், வாருங்கள்’ அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த வேலை முடிந்துவிட்டிருக்கும்.

தங்களால் எதையும் சாதிக்கமுடியும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்.தங்களை  வெற்றிபெற்ற தேசமாக அவர்கள் கனவு காண்கிறார்கள். கொடூரமான வரட்சிகளையும் ஏழ்மைகளையும் அந்நிய ஆக்கிரமிப்புகளையும் முறியடித்து,  கடும் தியாகங்கள் புரிந்து, ஈட்டிய கடந்தகால வெற்றிகளை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். எந்த இடர்ப்பாட்டையும் தாண்டிச்செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். “நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால்,  இந்தியாவில் பிறக்கவே விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை
அபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என் அனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால் ஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்.

அங்கே என் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி  செய்யப்பட்டுவிடும். உணவு,  இருப்பிடம், கல்வி,  மருத்துவம், சுகாதாரம் எதைப்பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. ஜனநாயகம் பற்றியெல்லாம் அநாவசியமாகக் கவலைப்படாமல் நிம்மதியாக என் வாழ்வை நடத்தலாம்” என்பது சீனாவில் பல காலம் வாழ்ந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவரின் கருத்து.உண்மைதானே!

(இக்கட்டுரை ‘கல்கி’ வார இதழில் மருதன் என்பவர் எழுதிய கட்டுரையின்
முக்கிய பகுதிகளாகும் - நன்றி: கல்கி)

Source  : vaanavil (81) september 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...