த.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது ‘நல்லாட்சி’அரசு!


இருந்து விலகிவிட வேண்டும். இந்த ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் முகமாக, சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
புறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம்  அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால்  இதை ஆதரித்து வாக்களிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்ச்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசில் அங்கம் வகிக்காது
அதேநேரத்தில் அரசுக்கு முண்டு கொடுத்து வரும் போலி
எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , அரசை விமர்சிப்பதாகப்
பாசாங்கு செய்துகொண்டு அரசை மறைமுகமாக ஆதரித்து வரும்
இன்னொரு கட்சியான ஜே.வி.பியும் இந்தச் சட்ட மூலத்தை ஆதிரித்து
வாக்களித்துள்ளன. அதுமாத்திரமின்றி, இந்தச் சட்டமூலத்தை ஜே.வி.பி.
தலைவர் அனுரகுமார திசநாயக்க வானளாவப் புகழ்ந்தும் உள்ளார்.
(த.தே.கூ. சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு  அதன் தலைவர்
சம்பந்தன் அதை மறைப்பதற்காக கபடத்தனமாக அரச ஊழியர்கள்
தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க்கூடாது என அறிக்கையும்
விடுகின்றார்)

அதேநேரத்தில் அவசரம் அவசரமாகக் கொண்டுவரப்பட்ட இந்தச்
சட்டமூலத்தைப் படித்துப் பார்க்கப் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை
என்ற காரணத்தாலும், இந்தச் சட்டமூலத்தில் பல ஜனநாயக விரோத
அம்சங்கள் உள்ளதாகக் கருதுவதாலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்தச்
சட்டத் திருத்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளது.
பல உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தும் அரசாங்கம் தோல்விப் பயம் காரணமாக ஒன்றரை வருடங்களாக அவற்றின்
தேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்து வருகின்றது. விரைவில் காலம்
முடிவடைய இருக்கும் வட மத்திய கிழக்கு, சப்ரகமுவ மாகாணசபைகளின்
தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
‘நல்லாட்சி’ அரசின் பங்காளிக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக்
கட்சியும்ä , அமைச்சர் மனோ கணேசனின் கட்சியும் அரசின் இந்த
முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் ,  ஐ.தே.க.
தலைமையிலான அரசு தன் திட்டத்தில் விடாப்பிடியாக நிற்கிறது.
இந்த உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தில் உள்ள இன்னொரு
ஜனநாயக விரோத அம்சம் என்னவெனில்ää தற்போது நடைமுறையில் இருப்பது போல அரசாங்க ஊழியர்கள் வருங்காலத்தில் தொழிலில் இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது.

அவர்கள் தேர்தலில் ஈடுபடுவது என்றால் தேர்தல் நடைபெறுவதற்கு
ஒரு வருடத்துக்கு முன்பே பதவியில இருந்து விலகிவிட வேண்டும். இந்த
ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
புறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால்,  இதை ஆதரித்து வாக்களிக்க எனது
மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனநாயக விரோதச் சட்டத் திருத்தம் சம்பந்தமாக கருத்துத்
தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார , “இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரச ஊழியர்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்ப்பு வளர்ந்து வருவதால்  அவர்களைத் தேர்தல்களில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கே அரசு இவ்வாறான ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அரசு
தடை விதித்தால்  அவர்களுக்குப் பதிலாக அவர்களது வாழ்க்கைத்
துணைவர்களை தேர்தலில் போட்டியிட வைப்போம்” எனக் கூறியிருக்கிறார்.


மூலம்: வானவில் 81 செப்டம்பர் 2017 

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...