இந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்
எஸ்.எம்.எம்.பஷீர்

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்!
                                                     திருவள்ளுவர்

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும்  பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமாக  செயற்படத் தொடங்கியிருந்து,.
எப்படியோ இறுதியில் தமிழ் ஈழக் கனவு பிரபாகரனின் அஸ்தமனத்துடன் , வட மாகாண சபைக்கான தேர்தலுடன் புலத்தில் கலைந்து போவது யதார்த்தமாகிப் வருகிறது,  ஆனால் புலம் பெயர் புலிகள் கடுப்பில் இருக்கிறார்கள் .

இம்மாதம் இறுதிப்  பகுதியில் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இரண்டாவது நாடு கடந்த தமிழீழத் தேர்தலைநடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழக் கனவை ஏதோ ஒரு விதத்தில் நனவாக்கி வருவதாக கனவுலகக் கனவான்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டிருப்பது போல் செயற்படுகிறார்கள். நாடுகடந்த புலிகளின் தேர்தல் தமிழீழ அரசவை தமாசாக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் புலிகளின் இன்னுமொரு பிரிவினர் புலம் பெயர் தமிழர்களுக்கு வானொலிகளில் புலிகளின் வரலாறு பற்றி பாடம் நடத்துகிறார்கள் .  
தமது பிராந்திய நலனுக்காக இந்தியா இலங்கையுடன் சேர்ந்து தமிழீழக் கனவை சிதைக்க  போட்ட அடித்தளம் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றும்,  அது பிரிக்கப்பட்ட இரு மாகாண சபைகளாகி வடக்கிலும் மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புலம் பெயர் புலிக் கவிஞர்கள் அரசியல் விமர்சகர்கள் இந்தியா மீதான கோபத்தை அள்ளி வீசுகிறார்கள்.  இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கினற அன்றைய இந்திய ஆட்சியாளர்களை , அவர்களின் பரம்பரைகளை மிக மிக அநாகரீகமாக விமர்சிக்கின்ற புலிகளின் ஆதரவு  ஊடக  தளங்களில் ஒன்றான இங்கிலாந்து வானொலி ஒன்றில்  ஒரு புலம் பெயர் புலிக் "கவிஞன்" அண்மையில் நடத்திய பாவரங்கில் தனது உள்ளார்ந்த முஸ்லிம் விரோதத்தையும் அவர் வெளிப்படுத்திய விதம் என்னை இக்கட்டுரையை எழுத தூண்டியது.
பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து  இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி 3/10/1987 அன்று  உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும்  உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில்   முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்

“கண்ணுவ முனிவரின் கைப்பாவையாம் சகுந்தலை காமம் மேலிட கிழவன் துஷ்யந்தனை திருமணம் செய்ய முன் புணர்ந்து பெற்ற மகன் பரதன் ஆண்ட பூமி என்பதால் பாரத தேசம் எனப் பெயர் பெற்ற மானங் கெட்ட நாட்டின் அமைதி படையை நம்பி நெஞ்சுரம் மிக்க வீரன்  குமரப்பாவை இழந்தோம்.

வந்த மருமகளை சபை நடுவில் நிறுத்தி  மாதவிடாய் என்றும் பாராமல் துகிலுரிந்த பாவியர் ஆண்ட மானங் கெட்ட நாட்டின் அமைதி உடன்படிக்கையை நம்பி குலேந்திரனை இழந்தோம்.

கியாசுத்தீன் காஜி  என்றோர் இஸ்லாமியன் வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து தன் பெயரை கந்தகார் நேரு என்று மாற்றிக் கொண்டான். இந்துவாக வேடம் பூண்டான்  பூணூல் தரித்தான். அவன் பேரன் தான் ஜாஹர்லால் நேரு. ஜவஹர்லால் நேருவின் பேரன்தான் ராஜீவ் காந்தி .ராஜீவின் என்பவனின் பேச்சை நம்பி அருமைப் போராளி அப்துல்லாவை இழந்தோம் அநியாயமாய் பலி கொடுத்தோம். மவுன் பேட்டனின் மனைவியின் கள்ளக் காதலனாய் கருதப்படும் காமுகன் நேரு , சரோஜினி நாயுடுவையும் விட்டு விட்டு வைத்தவனல்ல.  அவன் பேரனாம் ராஜீவிடம் படைக் கலங்களை ஒப்படைத்து வீரப் போராளி ரகுவை இழந்தோம். தமிழ் காங்கிரஸ் தலைவன் ஜி ஜி பொன்னம்பலத்தின் காங்கிரசுக்  கட்சியையும்   தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவன் தொண்டமானையும் ஒன்று படாமல் பிரித்து வைத்த பேரினவாதப் பேய்  ஜவஹர்லால் நேருவின் பேரனாம் ராஜீவின் பேச்சை நம்பி நற்றமிழ் வீரன் நளனை பலி கொடுத்தோம்

 

சாந்தி நிகேதன் பல்கலைக் கழகத்தில் உயர்மானிய விரிவுரையாளரின் அறையில் தனியாய் இருக்கையில் பிடிபட்டு வங்கக் கவி ரவீந்திரநாத்  பெருந்தகையால் விரட்டியடிக்கப்பட்ட இந்திரா காந்தியின் மகனாம் ராஜீவின்  உறுதி மொழியை நம்பி பச்சைத் தமிழ் வீரன் பழனியையும் இழந்தோம்    

மைமூனா பேகம் எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு தனது சொந்தத் தாயின் நெருங்கிய நண்பனாம் பெரோஸ் கான் எனும் இஸ்லாமியனை இலண்டனில் நிக்காஹ் செய்த இந்திரா , இந்திராகான்  என்றால் இந்திய அரசியலில் பிழைக்க முடியாது என்பதால் காந்தியின் பெயரைத் திருடி அதனை தன் குடும்பப் பெயராக்கினாள். அந்த இந்திரா காந்தியின் மகன்தான் ராஜீவ் . அவனைத் தூயவன் என நம்பி மின்னலடி வீரன் இதயத்தை  இழந்தோம்,

இலண்டனில் திருட்டுக் கார் வாங்கி சிக்கலில் மாட்டி சஞ்சீவ் எனும் தன் பெயரை சஞ்சையாக  மாற்றித் தப்பிய அயோக்கியனின் உடன்பிறப்பு ராஜீவ்காந்தி. அவனுக்குத் தெரியுமா விடுதலை பற்றி , அவனை நம்பி வீரன் ரெஜினொல்டை பறி  கொடுத்தோம். பிரித்தானிய கேம்பரிட்ஜ் நகரில் பல்கலைக்கழக உணவகத்தில் எச்சிக் கோப்பை கழுவிப் பிழைத்தவள் ,  கேம்பரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி எனப் பொய்யுரைத்து மாட்டிக் கொண்டவள் மாபியா கொள்ளைக் கும்பலுக்கு பேர் போன நகரின் நாஜிப் படை வீரனின் மகனுமாவாள் அந்த சோனியா. , அவளைத் தன் பெயரை ரோபெர்டோ என மாற்றி கைபிடித்த கயவன் ராஜீவுக்கு தெரியுமா தமிழர் துயர். அந்த ராஜீவை நம்பி தானைப் போராளி   தவக்குமாரை இழந்தோம்.போபார்ஸ் ஊழலில் பல மில்லியன்கள்,   டொலர்கள் சுருட்டி  சுவிஸ் வங்கியில் போட்ட திருடனுக்குத் தெரியுமா தமிழரின் விடுதலை வேட்கை!. நம்பவைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகனைத் நம்பியதால் அன்பழகனை அநியாயமாய் இழந்தோம்.

தந்தை வழித் தனயனாக சுன்னத்து செய்து கொண்டு  இந்து முக மூடி பூண்ட ஒரு கயவனுக்கு தெரியுமா விடுதலை வேங்கைகளின் தியாகம் அந்த ராஜீவ் எனும் கயவனை நம்பி கரனும் மாவீரனாகினான். என்று தொடரும் இந்த வசைபாடலில் இறுதியாக அன்று எம்மை அழிக்கிறது இந்தியா இன்று எம்மை அழிக்கிறது இந்தியா  , என்றும் எம்மை அழிக்கும் இந்தியா ,இனி எந்தத் தமிழன் சொல்வான் தன்னை ஒரு இந்தியன் என்று , இந்தியாவை தன்னாடு எனச் சொல்பவன் தமிழனா  ? “


பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து  இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி (3/10/1987) அன்று  உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும்  உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில்   முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் கந்தகார் நேரு (Gangadhar Nehru ) என்பவர் ஒரு முஸ்லிம் அல்ல , அவரின்  பெயர் கியாசுத்தீன் காஜியும் அல்ல , கந்தகார் நேரு என்பவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டெல்லியில்  பிரதம போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அவரின் மகன் மோதிலால் நேரு ஒரு வழக்கறிஞர் , அவரின் மகன்தான் ஜவஹர்லால் நேரு. அது போலவே பெரோஸ் காணும் ஒரு முஸ்லிம் அல்ல .இவர் ஓர் பார்சி இனத்தை சேர்ந்தவர் .  சொரோஷத்ரியன் (Zoroastrian )னும் பழமை மிக்க இரானிய மதத்தை சார்ந்தவர் . பெரோஸ் கானின் குடும்பப் பெயரிலும் காந்தி (Gandhy) எனும் பெயரும் உள்ளடங்குகிறது. நேரு குடும்பம் மீது பழிவாங்கும் எண்ணம் கொண்ட  சீக்கிய தீவிரவாத ஆதரவாளர்கள் . தீவிர பிராமணிய கோட்பாட்டாளர்கள் , பொதுவாக முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதவாத சக்திகள் எனச் மிகச் சிலரின் இழிவுரைப் பரப்புரைகள் மீண்டும் புலிகளால் தங்களின் சுய தாக்குதலுக்கு இப்பொழுது பயன்படுத்தப் படுகிறது. இதில் என்ன முரண் நகை என்றால் சில நாட்களின் பின்னர் அதே வானொலியில் கவிஞர்  காசி ஆனந்தன்  "ஈழத்"தமிழர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது என்று அன்றே சொன்ன மாபெரும் மகத்தான தலைவர் இந்திரா என்கிறார். மேலும் அவரை அவர் தீரமுள்ள உலகத் தலைவராக அடையாளம் கண்டு போற்றுகிறார். ஒரு வேலை இந்தியாவில் இருப்பதனாலோ என்னவோ. செஞ்சோற்றுக் கடனுக்காகவும் இருக்கலாம் புலிக்கும் சித்தம் சிதைந்து போய், யார் என்ன சொல்வது எங்கே சொல்வது எப்படிச் சொல்வது என்றில்லாமல்  பிதற்றுவதாக இதனைக் கொண்டாலும் அவர்களின் முஸ்லிம்கள் மீதான இன குரோதம் மட்டும் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.!
26/10/2013

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...