அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (4)



எஸ்,எம்.எம். பஷீர்

"கனத்த இதயத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுக்கு நான் பிரியாவிடை சொல்கிறேன ;.   எனது பற்றுறுதிக்காக   நான் ஒரு   இனவாதி என்று அடையாளமிடப்பட்டிருந்தாலும் , அதிகமான பெரும்பான்மை சமூகத்தினரின் தலைவர்களும் எனது சமூகமும் கூட தன்னலமற்று பரந்த பார்வையுடன் செயற்படும் தகுதி உடையவர்களாக இல்லை என்று  நான் நம்புகிறேன்"  - எம்.எச் .எம்.அஸ்ரப் 


( “With a heavy heart I am bidding good bye to the politics of the Sri Lanka  Muslim Congress . Although I have been branded a communalist for my conviction, I believe most leaders of the majority communities and even my community are not capable of looking beyond their noses.  -M..H.M.Asroff  (17 September 2000)

சிறை மீண்ட செம்மல் 
ஆசாத் சாலி இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் கைதுக்கெதிரான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கென காத்திருக்கும் வேளையில்   ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு  தான் வழங்கிய பேட்டி தவறாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்று சுய விளக்கம் கூறும்  ஒரு சத்தியக் கடதாசியினை (Affidavit) இலங்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து , தனது  விடுதலையைப்   பெற்றுள்ளார் .

அந்த சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் அவரின் கைதோடு  சம்பந்தப்பட்டவை . நீதிமன்றின் கவனத்துக்குரியவை. ஆனால் அதற்கு முன்னரே ஜனாதிபதியிடம்  தன விளக்க நிலைப்பாட்டை  முன் வைத்து , தனது கைதுக் கெதிரான சட்டச் சவாலை எதிர் கொள்ளாமல் விட்டதன் பின்னணி என்ன ?
“I gave an interview to the Junior Vikatan magazine published in India. I state that in the manner in which the interview was published I have been misquoted.
"If anyone is misled by the interview published in the Junior Vikatan or if anyone has been disturbed, I express my regrets."
ஆசாத் சாலி "ஜூனியர் விகடன்” (Junior Vikadan)  தனது   பேட்டியை  பிரசுரித்த விதத்தில் நான்  தவறாக  எடுத்துக் காட்டப்பட்டுள்ளேன் என்றும் , ஜூனியர் விகடனில் பிரசுரிக்கப்பட்ட  தனது பேட்டியினால் யாரும் தவறாக வழிநடத்தப்பட்டால் , அல்லது யாரேனும் தொந்தரவுக்குபட்டிருந்தால் எனது  வருத்தத்தை தெரிவிக்கிறேன் " என்று  தெரிவித்துள்ளார். 
 
ஆசாத் சாலியை பேட்டி கண்ட ஜூனியர் விகடன் இதழியலாளர் , எஸ் பாலசுப்பிரமனியன் மிகத் தெளிவாகவே ஆசாத் சாலியின் பேட்டியை ஜூனியர் விகடன் திரிவுபடுத்தி வெளியிட வேண்டிய அவசியமில்லை ஆசாத் சாலி என்ன கூறினார் என்பது அவருக்கே விளங்கும்"  என்று கூறிய பின்னரும்  , ( There is no need for Vikadan to distort Asath Sally’s interview , Asth Sally should know  what he said )  ஆசாத் சாலியின் விளக்கவுரையை அந்த இதழியலுக்கு அனுப்பியுள்ளார் . அதனை அவர்களும் பிரசுரித்துள்ளனர் .  அந்த விளக்கவுரைக்  கடிதத்தில்  ஆசாத் சாலி எந்த இடத்திலும் ஜூனியர் விகடன் தனது பேட்டியை தவறாக எடுத்துக் காட்டியுள்ளது என்று கூறவில்லை அல்லது தனது கருத்த திரித்துக் கூறப்பட்டுள்ளது  என்று  கூறவில்லை . மாறாக தான் "சொல்ல நினைத்தை, சொல்லாமல் போனதை" சொல்லியுள்ளார். இவை எல்லாம் ஆசாத் சாலி "சத்தியக்" கடதாசியில் சொல்லிய  கூற்றில் சொல்லப்படவில்லை. மாறாக ஆசாத் சாலியை ஆஹா ஓஹோ  !“ என்று புகழ்ந்து தள்ளிய பலரின் (ஊடகங்களின் ) ஆதரவை ஆசாத் சாலியின் சத்தியக் கடதாசி சாகடித்துள்ளது, .

மேலும்  ஆசாத் சாலி தன்னை மாநாட்டுக்கு  அழைத்த " பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  (Popular Front of India)    அமைப்பின் பின்னணி அதன் நோக்கங்கள் பற்றி தான் முன்னரே அறிந்திருக்கவில்லை ,  முதல் முறையாகவே அவர்களின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். (I had no prior knowledge of the said organisation’s background and their motives.) ஆசாத் தனது சத்தியக் கடதாசியில் அவ்வாறு  கூறியுள்ளதன் மூலம் அந்த அமைப்புப் பற்றி இப்போது ஏதோ புதிதாக அறிந்திருக்கிறார் என்று புலப்படுகிறது.  அந்த அமைப்புப பற்றி தன்னை நாலாம் மாடியில் புலனாய்வுத் துறையினர் விசாரித்த பொழுதான் ஆசாத் புரிந்து கொண்டிருப்பார் என்பதையே அவரின் கூற்று சுட்டிக் காட்டுகிறது.



படம்:  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் இலங்கை அரசுக் கெதிரான சென்னை ஆர்ப்பாட்டம் 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  (Popular Front of India)    

இந்திய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சமூக நீதிக்கான மனித உரிமைக்கான அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கும் அவ்வமைப்பு ஏற்கனவே இந்திய அரசீன் குறிப்பாக கேரளா மாநில அரசின் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைதுகளையும் தடைகளையும் தாண்டி செயற்படுகிறது. இந்த அமைப்பினை கேரளா  மாநில அரசு மட்டத்தில் அதன் நடவடிக்கைகள் சில தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் இந்த அமைப்பின் மாநாடு ஒன்றிற்கு முன்னாள் மறைந்த வீ.பீ சிங் மற்றும்  முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டு இவ்வமைப்புக்கு அங்கீகாரத்தினையும் வழங்கி இருந்தனர். 
ஆயினும் தலித் மக்கள் உட்பட்ட இவர்களின் சமூக நீதிக்கான நடவடிக்கை , பேரணிகள் , இராணுவத்தை ஒத்த அணிவகுப்பு   (இராணுவ உடையணிந்த அணிவகுப்புக்கள் ) என்பன இவர்கள் குறித்த அச்சத்தை மத்திய அரசு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளன. எனினும் அண்மைக் காலமாக புலனாய்வு தொடர்பில் இலங்கையுடன்   பரஸ்பர நெருக்கத்துடன் செயற்படும் இந்திய உளவு ஸ்தாபனம் என்ன தகவலை இவ்வமைப்பு பற்றி இலங்கை அரசுக்கு வழங்கி இருக்கும் என்பதை யாரும் இலகுவில் ஊகித்துக் கொள்ள முடியும். எனவே ஆசாத் சாலி னக்கு அவர்களின் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) நோக்கம் பின்னணி தெரியாது என்று சொல்லியுள்ளார். ஆனால் , ஆசாத் சாலி அப்படி சொல்லி தன்னை அழைத்தவர்களை அவமரியாதைப்படுத்தியிருக்கத் தேவை இல்லை. புலனாய்வுத் துறையின் கேள்விகளுக்காக  மொத்தத்தில் ஜூனியர் விகடனையும் பொபுலர் ப்ரொண்ட் ஒப் இந்தியாவையும் ஆசாத் சாலி இப்படிக் கைவிட்டிருக்கத் தேவை இல்லை" .   இந்த லட்சணத்தில் இவரை யார் தலைவராகக் காண்கிறார்கள்! . இதனை அப்பொழுதே சொல்லி உண்ணாவிரத நாடகம் ஆடி தன்னைத தானே கொல்லும் வகையில்  நடந்திருக்கத் தேவையில்லை . மேலும் இவரின் மத நம்பிக்கை குறித்த கேள்விகள் வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவிட்ட நிலையில் , இவரை வைத்து பிழைப்பு நடத்தி ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம்களை கிளர்ந்தெழச் செய்ய முயன்ற ஊடக ஜாம்பவான்கள் நிலை குலைந்து போயிருக்கிறார்கள்.   

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை சென்னையில்  13.03.2013 அன்றுநடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை அரசுக்கெதிராக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொல்வது  போல காட்சியமைத்து தமிழக பாணியில்  ஒரு தெருவோர நாடகம் (கூத்து) நடத்தியவ்ர்களாகும் . இவர்களும் தமிழ் நாட்ட்டில் இலங்கைக் கெதிரான ஆர்ப்பாட்டங்களும் , போராட்டங்களும் நடத்தி மகிந்தவை தண்டித்து அவரைக் கழுவேற்ற வேண்டும். ஆட்சி மாற்றம் செய்ய கவேண்டும் என்று ஆலாப் பறக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் .. அதற்கேற்பவே இப்பொழுது செயற்பட்டு வருகிறார்கள்.இவர்கள்  யாரும் கிழக்கிலே முஸ்லிம்களைப் புலிகள் தாயையும் வயிற்றிலிருந்த சிசுவையும் கூடக் கிழித்துக் கொன்றதை , பள்ளியில் தொழுத படுக்கையில்  துயின்ற பச்சிளம் பாலகர்களை கொன்றதை ,  மிக அண்மையில் நடந்த புலிகளின் மூதூரில்  இனச் சுத்திகரிப்பு செய்ததை  பற்றி எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை.  அப்பொழுது இந்த இயக்கம் இருந்திருக்கவில்லை.  மூதூர் சம்பவங்களின் சில மாதங்களின் பின்னரே இவ்வமைப்பு , (2006) உருவாக்கப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி இவர்கள் நன்கு அறிந்தவர்களாக இல்லை

ஆனால் இந்த இயக்கத்தில் உள்ள தலைவர்கள் உறுப்பினர்கள் பலர் வேறு இயக்கங்களில் இருந்திருக்கிறார்கள். தங்களைத் தமிழர்களாகக் கண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு அவர்களின் சகோதரத் தமிழ் புலிகள் செய்த கொடுமையை  சமரசம் செய்து கொண்டுள்ளார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை  மஹிந்த ராஜபக்ச புலிகளை துவம்சம் செய்த சிங்களவர். தமிழர்களை அழித்த  இனப் படுகொலையாளர்

சென்னையிலுள்ள இவ்வியக்கத்தை அறிந்த ஒரு கல்விமானுடன் நான் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விளக்கம் அளிக்கும் பயணத்தை எனது தனிப்பட்ட வகையீல் செய்ய முடியுமா என்று கேட்ட பொழுது , அவர் ஒரு கதையைச் சொன்னார். அதுதான் தலித் சமூகத்தின் தமிழ் நாட்டு ஏக போகத் தலைவனாகத் தன்னைக் கட்டிக் கொள்ளும் திருமாவளவனைச் சந்தித்த ஒரு இலங்கை முஸ்லிம் பத்திரிக்கையாளர் , அவரிடம் வட மாகான  முஸ்லிம்களை விரட்டிய புலிகள் பற்றியும் , அவர்களின் அந்த செயல் குறித்து தனது அதிருப்தியையும் தெரிவித்து தனது பேட்டியை தொடங்க திருமாவளவன் புலிகளைக் குறை கூறியதற்காக ஆத்திரமுற்று  தன்னைப் பேட்டி காண வந்த பத்திரிக்கையாளரின் ஒலிப்பதிவு கருவியினை தள்ளி வீழ்த்தி  ,ஏசி அனுப்பியதைக் குறிப்பீட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் நாகரீகம் பற்றி குறிப்பிட்டார்.

இந்த பின்னணியில் அஸ்ரப் மரணிக்க முன்னர் தமிழ்நாட்டு "விடியல்"இதழுக்கு வழங்கிய பேட்டியில்  தமிழகத்து முஸ்லிம்களை தங்களின் பிரச்சினைகளை தாங்களே பார்த்துக் கொள்வோம் (இறைவன் உதவியால்)  என்று தமிழகத்து உணர்வு மயப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தெளிவான செய்தியைச் சொல்லியிருந்தார். 

இலங்கைத் தமிழரோட போராட்டத்தில் தமிழகத் தமிழர் ஆதரவு முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு தமிழக முஸ்லிம்களின் ஆதரவும் கணிசமானதொரு தாக்கத்தை உண்டுபண்ண முடியும். இது பற்றி ஏன் எவ்வித நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை?

எம்.எச் .எம்.அஸ்ரப் : இன்ஷா  அல்லாஹ் நாங்கள் அதுபற்றி சிந்தித்துக் கொண்டுதானிருக்கிறோம். முன்பே இதுபற்றி யோசித்தோம். தமிழகம் வந்தபோது சில சகோதராகளும் வேண்டினார்கள். என்னைப் பொறுத்தவரை எவ்வித வெளிநாட்டு உதவியும் இல்லாமல் அல்லாஹ்வின் உதவியை மட்டுமே நாங்கள் நம்பியிருக்கிறோம்.
(விடியல்- 2000)

உள்ளரங்கமாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்டு ஆயுதப் போராட்ட எச்சரிக்கை விடுத்த ஆசாத் சாலி , சற்று தலையத் திருப்பிப் பார்த்தால் புலிகளிடமிருந்து , ஆயுதப் போராட்ட அழிவுக் கலாச்சாரத்திலிருந்து முஸ்லிம்  இளைஞர்கள்,   அஸ்ரபால் எப்படிக் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை மஹிந்த ராஜபக்சவின் (அஸ்ரபின் மறைவையொட்டிய ) இரங்கல் அறிக்கையின் மூலம் கண்டு கொள்ளலாம்.
“As far as the youth is concerned Minister saw the danger of the LTTE trying to attract these unemployed youth, Notwithstanding the criticism from various quarters, Minister Ashroff found them employment mainly in Colombo Port, what the critics failed to understand was that if the LTTE attracted these youths the results would be catastrophic and the war would be at our very doorstep. (Mahintha Rajapaksa )”    
இளைஞர்களைப் பொறுத்தவரை  ,  வேலையற்ற இளைஞர்களை எல்.ரீ.ரீ ஈ கவர முயற்சிக்கும் ஆபத்தை அமைச்சர் கண்டார். பல பகுதிகளிலிருந்தும் விமர்சனங்கள்  வந்த போதும் அமைச்சர் அஸ்ரப் பிரதானமாக கொழும்பு துறைமுகத்தில் அவர்களுக்கு வேலைகள்  வழங்கினார். எல்.ரீ ரீ ஈ இந்த இளைஞர்களை ஈர்த்திருந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருந்திருப்பதுடன் யுத்தம் எமது வாசற் படிகளுக்கே வந்திருக்கும் என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள்.” 
தமிழ் நாட்டிற்கு  போவதும் அங்கு நிகழ்சிகளில் கலந்து கொள்வதும் இப்போது அரசுடன் இருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கு மிகச் சங்கடமான காரியம் . அங்குள்ள தமிழ் இன  வெறியர்களின் ஆர்ப்பட்டங்களுகும் தாக்குதல்களுக்கும் கூட அவர்கள்  முகங் கொடுக்க வேண்டி இருக்கும். அந்த நிலையில் இப்போது ஆசாத் சாலியின் கைதுக்கு பிரதானமான காரணமாய் அமைந்த ஜூனியர் விகடனுக்கு முஸ்லிம்களுக்கும் இன்னுமொரு சம்பந்தம் உண்டு.
 
 சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து கலாநிதி பதியுதீன் தலைமையில்  சென்ற முஸ்லிம் அரசியல் குழுவினர் கிட்டுவுடன் ஒரு "புரிந்துணர்வு" ஒப்பந்தம் ஒன்றைப் பண்ணினர் . அப்பொழுது  "ஜூனியர் விகடன்" அந்நிகழ்வு பற்றி எழுதியது. புலிகளுடன்  ஒப்பந்தம்  பண்ண வந்தமைக்காக  ஈ.பீ ஆர் .எல் எப் , ஈ என் தீ எல் எப். போன்ற ஏனைய தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் குழுவினருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன்   , அவர்களில் ஒருவர் முஸ்லிம் குழுவினரிடம்  தங்களின் ஆயுத வல்லமை பற்றிப் குறிப்பிட்டு  எச்சரித்தார் . அப்பொழுது முஸ்லிம் குழுவினரில் ஒருவர்  ஒரு வாய்ச் சவடாலுக்கு "தம்பிமாரே !   ஆயுதத்தை வைத்து எங்களை பயமுறுத்த  முனைந்தால் உங்களுக்கு சொல்லுகிறோம் எங்களுக்கு வேண்டியளவு ஆயுதத்தைப் வெளிநாட்டிலிருந்து பெற முடியும் ...... " என்று குறிப்பிட்டனர். இவர்களின் ஆயு தம் தரித்தல் கதை வேறு ஆசாத் சாலியின் ஆயு தம் தரித்தல் கதை.வேறு. !!

 தலையும் தண்டவாளமும் 

அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை   நண்பனுமில்லை என்று சொல்வார்கள் . அது மாத்திரமல்ல அரசியலில் ஈடுபடுவோருக்கு அதிகம் விட்டுப் போவது சுரனைதான் , ஆசாத் சாலி , ரணிலுக்கும் , பொன்சேக்காவிற்கும் , ஏன் ஹக்கீமுக்கும்  மகிந்தவிற்கும் கூட தனது வாய் வல்லமையைக்  காட்டியவர். அவர்கள்   இன்று  எதோ ஒரு விதத்தில் ஆசாத்தின்   விடுதலைக்கு பின்னணியில் இருக்கிறார்கள். ஆசாத் சாலி சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தாவிற்கு தனது விசுவாசத்தை அபரிதமாக காட்டியவர் . அவரின் விசுவாசம் அவரின்  மத அடிப்படை நம்பிக்கைகளுக்கும் அப்பால் சென்றுவிட்டது என்று  சொல்லப்படுகிறது. பொன்சேக்கா   ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் தான் தனது தலையை தண்டவாளத்தில் வைப்பேன் என்று இவர் கொழும்பு கொலன்னாவப் பகுதியில் இடம்பெற்ற  மஹிந்த ஆதரவு ஜனநாதிபதி பிரசாரக் கூட்டமொன்றில் பிதற்றியதாக சொல்கிறார்கள்.
அவ்வாறான  அபத்தமான கூற்றை விட்டு விட்டுப் பார்த்தால் , ஆசாத் பகிரங்க அரசியல் கூட்டத்தில் அப்படிக் கூறியிருந்தால்  ஆசாத்  மஹிந்த வெற்றியினால் தனது தலையைக் காப்பாற்றிக் கொண்டார் போலும்.!!. சரி இப்போதும் மஹிந்தைக்கு சத்தியக் கடதாசி  கொடுத்து மீண்டும் தன்னை (தலையைக்) காப்பாற்றிக் கொண்டார் போலும்!!
திமு.க வின்   தொடக்ககால   போராட்டங்களில்  ஒன்றான “டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்பது .  அதற்காக டால்மியாபுரத்தில்  கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து போராடினார்  என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரின் தலை தப்பியது தம்பிரான் புன்னியமல்ல என்றும்  சொல்லப்படுகிறது. அது வெறும் ஆரசியல் தகிடுதித்தம் , ஆனால் இன்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் ஆசாத் சாலி எனும் ஒரு  "தலைவனை " :மஹிந்த ஆட்சிக்கு வந்ததால் பெற்றிருக்கிறார்கள் !    மீண்டும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் தரப்பில்  ஒரு முஸ்லிம் "போராளியை " பெற்றிருக்கிறார்கள். பொன்சேக்கா  பதவிக்கு வந்திருந்தால் ;,   இவையெல்லாம்  நடைபெற்றிருக்காது. ஒருவேளை ஆசாத் சாலி தனது இன்னுயிரை "தற்கொ(லை)டை " செய்து  கொண்டிருந்தால் , அதற்காக  அவருக்கு  தனிப்பட்ட வகையில் மஹிந்த நன்றிக் கடன்பட வேண்டி நேரிட்டிருக்கலாம்  !!.

பிற்குறிப்பு:

என்னைத  தொடர்ந்தும் எழுதும்படி ஊக்குவிக்கும் ; , மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் , நேரிலும் , எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்ளும் ;.  அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் எனது வலைத்தளத்திற்கு  அடிக்கடி விஜயம் புரியும் அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள். மிக முக்கியமாக எனது ஆக்கங்களைக்  பிரசுரிக்க  கோரும் இணையங்கள் எனது ஆக்கங்களை எனது பெயர் விபரங்களுடன் , மூல பிரசுர இணையத்தளத்தினைக் குறிப்பிட்டு பிரசுரிக்க எனது  அனுமதி தேவையில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன் . 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...