ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்
                                                                             எஸ்.எம்.எம்.பஷீர்
மொழி சிந்தனையை சிதைக்கலாம்
                         -ஜோர்ஜ் ஓர்வெல் -
 (Language can corrupt thought'- George Orwell)

இலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம்  வைகாசி  (மே)   மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின்  புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள்  ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் கள மேற்படுத்தப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது.   

ஆடி மாதத்தில் இனவெறியாட்டத்தை  1983 ல் சிங்கள காடையர்கள் கட்டவிழ்த்து விட்டபின்   அந்த வெறியாட்டத்துக்கு தூண்டுகோலாயிருந்த  புலிப  பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை  வருடந்தோறும் ஆடி மாதத்தில் புலிகள் ஆடிய இனவெறியாட்டம் எமது கவனத்தையும் நினைவையும் விட்டு நீங்கவில்லை. ஆடி மாதமே புலிகளின் ருத்திர தாண்டத்துக்கு கால்கோளிட்ட  மாதமாகும்  அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்


 தமிழீழம் காண்பதற்காக திரு பிரபாகரன் பெற்ற ஆயுதப்பயிற்சியினை முதல் முதலாக பரீட்சிப்பார்த்து அன்றைய யாழ் நகர பிதாவான திரு அல்பிரட் தரையப்பா அவாகளை படுகொலை செய்ததும் ஆடி மாதமே! (27.07.1975)

 
தமிழினத்தின் தானைத் தளபதி என வடமாகாண மக்களால் புகழாரம் சூட்டப்பட்ட திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் தலைநகரான கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள அவாது வீட்டில்வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட மாதம் ஆடி மாமாகும். (13.07.1989)

இலங்கையின் சர்வதேச விமான நிலையமும், விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்்ட இலங்கை மக்களகளுக்கு 4.000 கோடி ரூபா நஸ்டத்தினை உருவாக்கியதும் ஆடி மாதமேயாகும். (23.07.2001)

 
திருமலை மாவட்ட மூவின மக்களாலும்  நேசிக்கப்பட்ட முன்னாள் மூதூர் பிரதிநிதியும், திருமலை மாவட்டத் தலைவரும் (1981 --1983) 1994 ல் திருமலை மாவடஇடத்திலேயே ஆகக்கூடிய வாக்ககளைப்பெற்று தெரிவான திரு தங்கத்துரை அவர்களும், திருமலை சண்முக வித்தியாலய அதிபர், உதவி அதிபர் மேலும் நால்வரும், ஜனாப் எம்.ஈ.எச் மஹ்ரூப் (பா.உ) அவர்களும் விடுதலைப் புலிகளின் ஆயுத வன்முறைக்கு பலியாக்கப்பட்டதும் ஆடி மாதமே! (05.07.1997)

பிரபல சட்டத்தரணியான திரு நீலன் திருச்செல்வம் அவர்கள் கொழும்பில்லவத்து விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டதுட் ஆடி மாதமே! (29.07.1999)

விடுதலைப் போராட்டம் என்னும் மாயையில் பிரபாகரனால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் என காரணங்காட்டப்பட்டு
கொமுப்பின் பறநகர் பகுதியான கொட்டாவ என்னுமிடத்தில்லைத்து புலிகளின் ஆயுததாரிகளால் நஞ்சூட்டப்பட்டு வெட்டியும் சுட்டும் (8) இளைஞர்களை படு கொலைசெய்ததும் ஆடி மாதமே! (25.07.2004)

5 சம்மாந்துறை ஜாரியா பள்ளியுள் தங்கியிருந்த முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதும  ஆடி மாதமே! (23.07.1990)

69  ஹஜ் யாத்திரிகர்களை அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒனதாட்சிமடத்தில் சுட்டுக் கொன்றதும் ஆடி மாதமே! (19.07.1990) 

14 முஸ்லிம் விவசாயிகளை அக்கரைப்பற்றில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (02.07.1990)
19  பஸ் பிரயாணிகளை கிரான்குளத்தில் இறக்கி புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (15.07.1990)

7 முஸ்லிம் இரயில் பிரயாணிகளை தனித்து பிரித்து மட்டக்களப்பில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (21.07.1990)

நாம் சந்தித்த துயரங்களும்  இழப்புக்களும் நிறைந்த தசாப்தங்கள் மெதுவாக ஆனால் கனதியாக எம்மை விட்டு கழன்று போய்விட்டன. இனவாத அரசியல் பேசி , ஏசி , இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து சென்றும் முற்று  பெற்று விடவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இன்று வடக்கில் நடைபெறும்  உள்ளூராட்சி தேர்தல் களத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து நிரூபிக்க வேண்டும் என்று தாழ்மையாக புலம் பெயர் நாட்டில் இன மத விரோதத்துக் கெதிராக போதனை செய்யும் ஏசுவின் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக  செயற்படும் விதத்தில் சிங்கள பவுத்த  இனவாதம்  பேசும் தமிழ் தேசியத்தின் தந்தை  செல்வாவுக்கு பின்வந்த புலம் பெயர் நாட்டின் மத போதக தந்தை இம்மானுவேல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் கூலிப் பட்டாளங்களை நிராகரிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்


 வழக்கம் போலவே தமிழ் தேசியவாதிகள் தங்களின் "பாரம்பரிய " மொழியில் மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிரார்கள். அந்த மொழி என்றும் ஒரே மொழியாகத்தான் இருக்கிறது , அதில் இதுவரை பேசப்பட்ட சொற்கள் யாவும் ஒன்றே , அந்த மொழியில் பேசினால்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆகவே இனவாத மொழியில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட்டு இன்று சாதாரண உள்ளூராட்சி தேர்தலும் பெரும் முள்ளிவாய்க்கால் போராட்டமாக தந்தை இம்மானுவேல் உடபட பலரால் சித்தரிக்கப்படுகிறது. .        

1983 ஆடி மாதம் தமிழரை அழித்த சிங்கள அரசு அதே தினத்தில் இந்த தேர்தலை நடத்துவதை வேறு புதிய உபாய  இன அழிப்பாக அர்த்தப்படுத்தும் விதத்தில் தர்க்க விளக்கமளித்து   முல்லிவாய்க்காளை முன்னிறுத்திய போராட்ட அரசியலுக்கு இந்த தேர்தலை  அடையாளப்படுத்துகிறார்கள்.   
இந்த பின்னணியில் சற்று பின்னோக்கி பார்த்தால் தமிழ் தேசியவாதிகளின் முஸ்லிம் இனவாதம் தீவிர தமிழ் தேசிய வாதத்துடன் சமாந்தரமாக முளைவிட்ட காலமும் நம் மனத்திரையில் நிழலாடுகிறது.

"மேலுக்கும் தட்டை கீழுக்கும் தட்டை"  

படம்: முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத்

சிறிமாவோ பண்டாரநாயகாவின் அரசாங்கத்தில் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராகவிருந்த போது அவர் 1973 ல்  தரப்படுத்தலை கொண்டுவந்தார் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் மாணவர் சங்கங்களினால் ( மாணவர் பேரவை உட்பட ) பாரியளவில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர்  புலிகளின் ஆதரவாளராகவிருந்த , இப்போதெல்லாம் அடிக்கடி முஸ்லிம் தமிழ் உறவு பற்றி பேசும்  தமிழரசு கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினரும் துணைத்தலைவருமான  மாவை சேனாதிராஜா. இப்பேரணியில் அவர் முன்னணியில் நிற்க அவரது (சேனாதிபதியின் படையினர் ) பேரணியில்  என்ன கோஷமிட்டார்கள் என்று வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால்  யாழ் மேட்டுக்குடி கல்வி சமூகமும் ; தமிழ் கல்வியாளர்கள் வழக்கறிஞர்களை கொண்ட  அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக் கெதிரான இனவாதத்தினை  கொண்டிருந்தார்கள்  என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

படம்: மசூர் மொவ்லானா, சேகு இஸ்ஸதீன் மாவை சேனாதிராஜா 

அந்த பேரணியில் சேனாதிபதி உட்பட கலந்து கொண்ட இளைஞர்கள் "உம்மா படிச்சது அஞ்சாம் வகுப்பு , வாப்பா படிச்சது எட்டாம் வகுப்பு, நாங்கள் படிச்சது ஏ எல் ( அதாவது பல்கலைக் கழக தெரிவுக்கான  க. பொ . த. உயர்தரம்  ) என்று தங்களிடேயே வாழும் முஸ்லிம்களின் மனநிலை பற்றி கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாமல் , திமிருடன் சத்தமிட்ட கோசங்களில் ஒன்றுதான் அது. அந்த பேரணியில் கூவிய இன்னுமொரு  சுலோகம் "பதியுதீனுக்கு மேலுக்கும் தட்டை கீழுக்கும் தட்டை " ( அதாவது தலை மொட்டை , அதுபோல் கீழேயும்  .... தட்டை-  இச்சுலோகத்தில் சமய அடிப்படையில் செய்யப்படும்  விருத்தசேஷனத்தை  தங்களின் வக்கிரமான எதுகை மோனையுடன் வெளிப்படுத்தினர்  ) விவஷ்தையறற முறையில் ஒரு தனி மனிதனையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தையும் கேவலப்படுத்தும் விதத்தில் தங்களை கல்விச் சமூகம் என பெருமை பாராட்டும் யாழ் மேட்டுக்குடி சமூகம் தங்களை படவர்த்தன்மாக முஸ்லிம் இனவாதிகளாக காட்டிய பேரணி அது.

இந்த திமிரும் இனவாதமும் இன்னமும் தமிழ் தேசியவாதிகளிடம் விட்டுப்போகவில்லை . அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலண்டன் கிளை பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்தி இலண்டனில் நம்நாடு என்ற பத்திரிக்கையின் நிர்வாக பொறுப்பாளராக செயற்பட்ட  மேலும் பல சிற்றேடுகளையும்  நடத்தி தீவிர தமிழ் இனவாதம் பேசிய ஐ தி சம்பந்தன்  , வட மாகான முஸ்லிம்களை பவித்திரமாக பிரபாகரன் அனுப்பிவைத்தார் என்று பிலாக்கணம் பாடியவர் . இவர் ( ஐ தி சம்பந்தன்)  வீரகேசரியில் அண்மையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடும் நாட்டை ஆட்சி செய்த சிங்களவனும் படித்தவனில்லை  என்று இளக்காரம் இதனை சுட்டிக்காட்டுகிறது.  
தமிழர்கள் மீது நல்லெண்ணம்  கொண்டிருந்த ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது  7 ஆம் வகுப்பு படித்த டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையிலான ஐ.தே. கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். இதற்குத் தமிழ்த் தலைவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை இன்மையும் ஒருகாரணம். அத்துடன் பிரித்தாளும் தந்திரமும் சேர்ந்து கொண்டது” ( வீரகேசரி 6-02-2011)
 அதே நம்நாடு பத்திரிக்கையில் கவுரவ  ஆலோசகராக    பணியாற்றியர் பேராசிரியர் கோபன் மகாதேவா என்பவர். அவரும் தம் பங்கிற்கு பதயுதீன் முஸ்லிம்களில் படிப்பு குறைந்தவர்களுக்கும் ஆசிரியர் நியமங்களை அள்ளி அள்ளி வழங்கினார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்று அகந்தையில் முன்வைத்தவர் .
ஆனால் மாறாக யாழ் தலித் சமூகம் அறுபதாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பதியுதீன் மஹ்மூத் ஒரு சாதாரண பிரஜையாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருந்தபோது அவரை வரவேற்று கவுரவித்த வரலாறும் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தது . ( இந்த வரலாறு தெரியாமல் ரவுப் ஹகீம் போன்றோர் தரப்படுத்தல் மற்றும் அவரின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்பாடுகளை சில வருடங்களுக்கு முன்பு பகிரங்க கூட்டமொன்றில் விமர்சித்ததையும் என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ) எம். சி . சுப்பிரமணியம்   (பின்னர் ஸ்ரீமா அரசில் நியமன நாடாளுமன்ற அங்கத்தவராக  நியமிக்கப்பட்டவர்) அழைப்பிற்கிணங்க பதயுதீன் தலித் மக்களின் மாநாட்டில் கலந்துகொண்ட நிகழ்வென்பது தமிழ் தேசிய இனவாத சக்திகளின் எதிரிடை நிகழ்சியாக யாழ் மக்களின் பிறிதொரு மனோபாவத்தை- மாண்பினை -சமப்படுத்தும் நிகழ்சியாக சுட்டி நிற்கிறது.    

இரண்டு எழுத்தில் இயங்கிவந்த இணையற்ற செயல் வீரன் என்ற பெயரில் எம்.சி நினைவுக் குழு வெளியிட்ட நூலில் தலித் மக்களின் வாழ்வில் எம்.சி சுப்பிரமணியம் ஆற்றிய வரலாற்று பாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எம்.சி சுப்பிரமணியம் மற்றுமல்ல அவரின் தோழர்களும் தலித் மக்களின் சார்பில் தமிழ் தேசிய குறுகிய இனவாத அரசியலுக்கு அப்பால் சென்று தேசிய அரசியல் தொடர்பாடல்களையும்  ஏற்படுத்தி அந்த பயணத்தில் மறைந்த முன்னாள் சுதந்திர கட்சியின் அரசில் கல்வியமைச்சராகவிருந்த கலாநிதி பதியுதீன் மற்றும் ஸ்ரீ லங்கா  சுததந்திர  கட்சி தலைவர்களுடனும் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களுடனும்  மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை கொண்டிருந்தனர்.  நாம் பின்னால் கண்ட தமிழ் தேசிய வெறியூட்டப்பட்ட சமூகத்திலிருந்து மாறுபட்ட ஜனநாயக சூழலில் நிலவிய சுயாதீனமான பல்கட்சி அரசியல் நிலைமை அன்று அதற்கான நடைமுறை வாய்ப்பினை வழங்கியிருந்தது.  

எம்.சி சுப்பிரமணியம் வீ. பொன்னம்பலம் ஆகியோர் பதியுதீன் அவர்கள் அமைச்சராக இல்லாத போதும் 1970  ஆண்டு பொது தேர்தல்களுக்கு முன்பு இஸ்லாமிய சோஷலிச முன்னணியின் கூட்டம் யாழ் ஜின்னா மண்டபத்தில் அண்மையில் காலம் சென்ற மஜீத் தலைமையில் நடைபெற்ற போது கலந்துகொண்டனர். அது பற்றி பின்னர் பார்ப்போம்.

No comments:

Post a Comment

US military basing to expand in Australia, directed against China -by Mike Head

  This week’s announcement of a new Australia-UK-US (AUKUS) military alliance, with the US and UK to supply Australia with nuclear-powered s...