பயங்கரவாதமும் பைத்தியமும் !!!

எஸ்.எம்.எம்.பஷீர்  

நான் சாகத் தயாராக இருக்கிறேன் , ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான  காரணம்தான் இல்லை”  (மகாத்மா காந்தி)
(I am prepared to die, but there is no cause for which I am prepared to kill” .  ~Mahatma Gandhi)

நோர்வேயில் சென்ற வெள்ளிக்கிழமை பயங்கரவாத செயல்புரிந்து முழு ஐரோப்பாவையும் மட்டுமல்ல உலகின் மேற்குலக பயங்கரவாதம் பற்றிய கருத்தியலுக்கு புதிய பார்வை வீச்சினை ஏற்படுத்திய பிரிவிக் ஒரு கிரீஸ்தவனில்லை ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளன் , ஒரு வலதுசாரி என்ற அடையாளப்படுததலே உலகின் பிரபல ஊடகங்களால்  இன்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு பயங்கரவாதியாக பிரிவீக் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் மனித விரோத கருத்தியல்களுடன் தன்னை அடையாளப்படுத்தி புலிப்பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் போஷனையும் செய்த நோர்வே நாட்டின் கதவுகளை அந்நாட்டு பிரஜை ஒருவனே தட்டியுள்ளான் என்பதை நோர்வே ஜீரணிக்கவே கஷ்டப்படுகிறது.  அழிவுகள் மூலம் மேற்குலகினை அவன் இரு விதத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான் .  ஒன்று மேற்குலகில் எடுத்ததற்கெல்லாம் சகட்டு மேனிக்கு  முஸ்லிம் பயங்கரவாதம் என்று பிரபல சர்வதேச உள்ளூர்  ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வரும் பல் துறைசார் விற்பன்னர்களுக்கும்  , முஸ்லிம் பயங்கரவாதம் என்று முஸ்லிம் மக்கள் மீதும் போர் முரசறையும்  பொய் ஜனநாயக  மனித உரிமை முகமூடியணிந்த மேற்குலக அரசுகளுக்கும இது பெரிய அதிர்ச்சிதான்..    நோர்வேயும் பயங்கரவாதத்தின் நேரடி விளைவை சந்தித்திருப்பதால் இலங்கையில் பயங்கரவாதம் எப்படி இருந்திருக்கும் என்பதை தமது பட்டறிவு மூலம் அறிந்து கொள்ள நேரிட்டுள்ளது.

பிரிவிக் ஒரு மனநிலை சரியற்றவன் , புத்தி பேதலித்தவன் என்று  கிறிஸ்தவ மத அடிப்படையில் பயங்கரவாதம் புரிந்தவனை அடையாளப்படுத்துவதில் மூடி மறைப்புக்களை செய்ய மேற்குலகின் ஊடக ஆய்வாளர்கள் , ஆரசியல் கருத்துரையாளர்கள் முயற்சிப்பதை கூட  இப்போது காணக் கூடியதாகவுள்ள நிலையில் , உண்மையில் உலகின் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட  நபர்கள்  தொடக்கம் இந்திய ஹிந்துத்துவ ஆர். எஸ்.எஸ். இயக்க , சிவசேன இயக்க சார்பாக பயங்கரவாத செயல்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட  நபர்கள் , என புலிகள் வரையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோர் மனநிலை பாதிக்க பட்டவர்கள் அல்லர் எனபதும் அவர்களில் பலர் நன்கு சிந்திக்க கூடியவர்களாக மூளச்சமநிலை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு வெளிப்படையான கசப்பான உண்மை . அந்த வகையில் பிரிவிக்கும் அதற்கு விதிவிலக்கல்ல.பிரபல எழுத்தாளர் கை வால்ட்டர் பிர்விக் தயாரித்த 2083- ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்  என்ற ஆவணம் மற்றும் காணொளியை பார்த்தபின்னர் ( "2083 – A European Declaration of Independence.") பிரிவிக் பற்றி குறிப்பிடும் பொழுது " அவனின் எண்ணப் போக்கு  அறிவுக்கு ஏற்புடையதாகவுள்ளது. அவன் நியாயமான அளவில் நன்கு தனது மனோசக்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனாகவும்  தோன்றுகிறான். நீதிநெறி உணர்வைக்கூட  காட்டி உள்ளான் . அவனின் அரசியல் வாதங்கள் ஆழமான தவறுகளை கொண்டிருப்பினும் , இன்று நீங்கள் காணும் பல்வேறு செய்தி இணையங்களில் காணப்படும் மடமையான பின்னூட்டங்களை ஒத்த கருத்துக்கள்தான் என்பதைவிட   அதிகமானதல்ல , அவ்வாறு எதேனுமிருப்பினும் , இவன் அதிகம் விஷயம் தெரிந்தவனாகவிருக்கிறான். நோர்வேயின் -ஐரோப்பிய சமூகத்தின் பல்கலாச்சாரத்துக்கு அச்சுறுத்தலான ஐரோப்பிய அழிவுக்காரனாக  நியாயமற்ற சிந்தனை அழுத்தம் கொண்டவனாக தன்னை கருதியிருப்பினும் இவன் ஒரு புத்திசாலியாகவும் சிந்தனையுள்ளவனாகவும் இருக்கிறான் என்ற எண்ணப் பதிவை ஏற்படுத்துகிறான். இந்த சாட்டுதல்கள் யாவும் அவனை ஒரு புத்தி சுவாதீனமற்றவன் என்றாக்கவில்லை "  என்று   
( His thought processes are clear and rational. He appears to reasonably well socialized, and in control of his faculties. He even displays a sense of morality. His political arguments, although deeply wrong, are no more wrong-headed than many you might find in the comments boxes on the websites of many a newspaper, and, if anything, are far more sophisticated. Breivik comes across as an intelligent, thoughtful person, albeit obsessional with what he perceives to be the eliminationist threat of multiculturalism to Norwegian - and European - society. None of these attributes make him insane,) , மேலும் கை வால்ட்டர் பிரிவிக்கின் மன நிலை சமநிலை பற்றி குறிப்பிடுகிறார். பிரிவிக்கின் செயல்கள் மூளைச் சமநிலையின்மையில் தோற்றம் பெற்றதல்ல மாறாக அவனின் அரசியல் நம்பிக்கையில் தோற்றம பெற்றதாகும். (Breivik's actions are not rooted in mental imbalance but in political belief,) என்றும் மேலும் அவர் குறிப்பிடுகிறார். எனவே கிறிஸ்தவர்களில் புத்திசுவாதீனமற்றவன் தான் இப்படியெல்லாம் செய்வான் என்ற சாட்டு செல்லாது . அவனுக்காக ஆஜரான சட்டத்தரணியும் அவனை மூளைப் பிசகு உள்ளவன் என்று கூறிய போதும் அது குறித்து இன்னமும் முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிடுகிறார்.
பிரிவிக் கைது செய்யப்படும்வரை உலகின் பிரபல ஊடகங்கள் யாவும் முஸ்லிம் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் மும்முரம் காட்டிய சூழல் மிகவும் ஆபத்தானதாக  தோன்றியது. பிரபல பத்தி எழுத்தாளர்கள் பலர் பிரித்தானியாவிலும் வரிந்து கட்டிக் கொண்டு இது முஸ்லிம் பயங்கரவாதிகளின் வேலை என்பதை இத்தாக்குதலின் குறியீடுகள் காட்டுகின்றன என்று பல அனுமானங்களை  ஆதராங்களாக்க கதை  சோடிக்க கடின தீவிரமாக முயற்சித்தனர்.  அதில் சில பிரபல பத்தி எழுத்தாளர்கள் , காணொளி கருத்துரையாளர்கள் சிலரும் தங்களின் அனுமானங்களை விட ஆதராங்களாக சோடித்து வழங்கிய கருத்துக்கள் அவர்களின் மேதாவிலாசத்தை பின்னர் தொலைத்திருக்க வேண்டும் . ஆனால் வழக்கம் போல் அவர்கள் ஓய்ந்து விடவில்லை ஏனெனில் அவர்களின் அனுமானங்களில் பல இன்றுவரை ஊடகங்களில்  உலாவருகின்றன. இம்றி கரக்ஸ் (Imre Karacs)  என்பவர் நோர்வேயில் ஆப்கானிஸ்தானிலிருந்து 1991 ஆண்டு புகலிடம் கோரி அகதியாக அங்கீகரிக்கப்பட்ட  முஸ்லிம் நபரான நஜுமுதீன் பாராஜ் அஹ்மத்  என்பவரின் கடந்த   கால செயற்பாடுகள் , அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துக்கள் என்பன தொடர்பில் முஸ்லிம் பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய பல அனுமான சமாந்திரங்களை  இச் சம்பவத்துடன் ஒப்புவித்து தனது துறை சார் வித்துவத்தனத்தை பறை சாற்றியிருந்தார்.  மேலும் அவர் நோர்வே சிப்பாய்கள் ( சிறிதளவிலேனும்  ) ஆப்கானிஸ்தானில் இருப்பதையும் , நேட்டோ நாடுகளின் கூட்டுப்படையில் லிபியாவில் தாக்குதல் நடாத்துவதையும் என பல பல கதைகளை அவிழ்த்து விட்டிருந்தார். இந்திய நாட்டை தனது தாயகமாக கொண்ட பயங்கரவாத சர்வதேச ஆய்வாளர் ஜோசி வேறு கதை விட ;  டோம் கோஹ்லன் (Tom Coghlan) இன்னுமொரு அல் கைடா கதை சொல்ல;  இன்னுமொரு சிரேஷ்ட பழம் பெரும் அரசியல் ஆய்வாளர் பீ.பீ சீயில் இது லிபிய கடாபியின் ஐரோப்பிய மீதான எச்சரிக்கையை அடுத்து நடந்தது என்று கடாபியை கண்டுபிடிக்க; இறுதியில் நோர்வேயில் தொழுகை முடிந்து பள்ளிவாசலில் கலவரமடைந்து கொண்டு தாமதமாக வீடு வந்த வந்த எனது நண்பர் ஒருவரை அழைத்தும் சூத்திரதாரி யார் என்று தெரியாமல் ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் மீது எவ்வாறான துவேஷம் அள்ளி வீசப்படப் போகிறது என்று அங்கலாய்க்கையில்  பிரிவிக்கின் செய்தி வருகிறது.அப்பாடா என்று என்று ஓர் பெருமூச்சு , இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நோர்வே பிரதமரின் நிதானம் ஏனைய ஐரோப்பிய அரசியல் ஜாம்பவான்களுக்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால்  பிரித்தானிய பிரதமர்  மிகக் கவனமாக  கிறிஸ்தவ மதத்தையோ , பயங்கரவாதத்தையோ தவிர்த்து இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று மட்டும் கூறி அரசியல் சாமார்த்தியம்  காட்டியுள்ளார். இவர்களுக்கு கிறித்தவ பயங்கரவாதம் இந்திய அரசுக்கு ஹிந்து பயங்கரவாதம் என்ற பயங்கரவாத அடையாளப்படுத்தல்களின் மன உளைச்சல் இப்போது சகிக்க கடினமாக இருக்கிறது. 
இந்த பின்னணியில் புலிகளின் உடற்சமநிலை மனச் சமநிலை பற்றிய அவர்களின் பயிற்சி கையேட்டினை உங்களின் கைகளில் பார்வைக்கு வைக்கிறேன். ஆக மொத்தத்தில் பயங்கரம் செய்பவர்களுக்கும் ஒரு " நெறி" தேவையாகவுள்ளது போலும்!!  
புலிகள் கூட உடற் சமநிலை மூளைச்சமநிலை என்றெல்லாம் இளம் சிறார்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தே தமது " கொடை "  எனும் தற்கொலை படை அனுப்பினார்கள். நியாயமான  மூளைச்சமநிலை உடற்சமநிலை பயங்கரவாதிகளுக்கும் தேவைப்படுகிறது.!! மேற்குலகில் ஒக்கஹாமா குண்டு வெடிக்க வைத்தவனையும் புத்தி சுவாதீனம்றவன் என்றுதான் அமெரிக்கா கூறியது. ஆனால் ஆதராங்கள் அதற்கு மாறாகவிருந்தன . புலிகளின் தலைவன் பிரபாகரனின் சகபாடியாயிருந்த பின்னர் அவரிடமிருந்து விலகிய ஒரு முன்னாள் புலித்தலைவர் ஒருவர் ஒருதடவை சிறுவர்கள் மனதில் எதுமே அற்றவர்கள் , அதாவது சுத்தமான சிலேட் போன்றது அவர்களின் மனம் , அதில் நாங்கள் விரும்பியதை எழுதலாம். என்று பிரபாகரன் கூறியதாக என்னிடம் கூறினார். ஆக இந்த புலி கையேட்டினை வாசிக்கும் போது  அது நன்றாகவே புலப்படுகிறது.

---------

                                                         உடலியற் தகமைகள்
                                                                        ( Personality )

1.         மூளைச் சமநிலை  ( Mental Balance )
2.         உடற் சமநிலை   ( Physical Balance )

மூளைச் சமநிலையைப் பாதிக்கும் காரணிள்
I..         வயது ( Age ) :-                                                                                                                                              மனித வாழ்வில் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கள் ஏற்படும்.                                                                                                      
            (உதாரணமாக)                                                                                                                                             குழந்தைகள்-    -  இவர்களுக்கு நெருப்பு சுடும் என்பது   தெரியாது.          சிறுவர்கள்            -  பொறுப்புணர்ச்சி தெரியாத வயது (கேட்டதைக் கொடுக்க வேண்டும்)                                               இளைஞர்கள்            -     காதல் பிரச்சனைகள்                                                           திருமணமானவர்கள் - சொத்து சேர்க்க வேண்டும் என்ற கொள்கை            
வயோதிபர்கள்    -   குழந்தைகளின் போக்கு

II.         அறிவு  ( Knowledge )

சகல துறைகளிலும் அறிவைப் பெற்றுக் கொள்வதால் சமூகத்தில் எழும் எந்தப் பிரச்சனைக்கும் முகம் கொடுக்க முடியும். இதேபோன்று யுத்த வாழ்விலும் சண்டை சம்பந்தமான அறிவை வளர்க்கும் பொழுது மூளைச் சமநிலையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
            ( உதாரணம்) ஆக                                                                                                                

                        ஒரு R..P.G. யின் தாக்கு திறன் பற்றிய அறிவு எமக்குத் தெரியா விட்டால் ஒரு டாங்கி வரும் போது நாம் பயந்து ஓடிவிடுவோமானால் R.P.G  யின் தாக்கு திறன் தெரிந்தும் பயிற்சியும் பெற்றிருந்தால் மனோதிடம் வலுவாக இருப்பதுடன் டாங்கியையும் அழித்துவிடுவோம்.

III.        உயர்ந்த எண்ணம்  ( Superiority Complex )                                                                                             ஒரு மனிதனுக்கு உயர்ந்த எண்ணம் வரும் போது அவன் மனிதம் என்னும் தன்மையில் இருந்து மாறுபடுகின்றான், இதனால் மற்றவர்களை மதிப்பதில் இருந்தும் தனது பிழைகளை ஏற்றுக்கொள்வதில் இருந்தும் விலகுகிறான். இதனால் எதிர்காலத்தில் அவன் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவான்.
IV .      தாழ்ந்த எண்ணம் ( Inferiority Complex  )                                                                                      ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுகின்ற தோல்விகள் அனைத்தும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். இதைத் தாங்கக் கூடிய சக்தியை ஏற்படுத்திக் கொள்வதால் இதை முறியடிக்க முடியும்.

மூளைச் சமநிலையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

I.          வாசித்தல்  ( Reading )                                                                                                                     வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தானாகவே அறிவு வளர்வதால் மூளைச் சமநிலை பேணப்படும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
II.         கூச்சலிடாமல் கதைத்தல்  ( Loud Less Talk )                                                      
                                    சாதாரணமாக இருவர் சண்டையிடும் போது கூச்சலிட்டுக் கத்திச் சண்டையிடுவதை நாம் பார்த்துள்ளோம் இதில் யாராவது ஒருவர் அமைதியைக் கடைப்பிடித்திருந்தால் அல்லது கூச்சலிடாமல் கதைத்திருந்தால் அவ்விடத்தில் மூளைச் சமநிலை பேணப்பட்டிருக்கும். இதே போன்றுதான் போதை உட்கொள்ளும் ஒரு மனிதனுக்கு மூளைச் சமநிலை எப்போதும் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால்தான் அவன் சத்தமிட்டு உளறுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து சமநிலை பாதிக்கப்படும் ஒரு மனிதன்தான் கூச்சல் இட்டுக் கத்துவான் என்பதை அறிய முடிகிறது.

III.        அவதானிப்பு            ( Observation )                                                                                                                                  சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் நாம் உன்னிப்பாக கவனிப்பதால் நாம் திருத்த முடியும். ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும் வெற்றிகளையும் உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் நாம் தோல்விகளில் இருந்து தப்புவதற்கும், வெற்றிகளைப் பெறுவதற்கும் வாய்பு ஏற்படுகின்றது. அத்தோடு எமக்கு ஏற்படும் மூளைச் சமநிலை பாதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

iv.        நடத்தை (   Behaviour  )                                                                                                                             
ஒரு மனிதன் நன்நடத்தை உடையவனாக வாழப்பழக வேண்டும். பாலியல் சம்பந்தமான பலவீனம் உள்ளவர்களும், குடிப்பழக்கம் உள்ளவர்களும் எளிதில்            பாதிக்கப் படுவதை  நாம் பார்த்திருக்கிறோம். இது போன்ற நடத்தைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு பணிவாக சமூகத்தில் பழகும் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதாலும் மூளைச் சமநிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
           
மூளைச் சமநிலையைப் பேணுவதற்கான பயிற்சிகள்

i.          வாசிப்புடன் எழுத வேண்டும்.
ii.         பிற ஒலிகளை புறக்கணித்தல்                                                                                                                                              நாம் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது பிற ஒலிகளால் எமது வேலைகள் குழம்புவதை அவதானித்திருக்கிறோம் இவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நாம் மேற்கொள்ளும் காரியத்தில் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தி, பயிற்சி பெறல் வேண்டும்.

iii..       பல பிரச்சனைகளை ஒரே நேரத்தில் தீர்த்துப்பார்த்தல்.

குறிப்பு :-
               பல் சிந்தனை, ஒற்றைச் சிந்தனை
               குழுத்தலைவர் - பல் சிந்தனை உள்ளவராகவும்
               போராளி    -  ஒற்றைச் சிந்தனை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

உதாரணமாக:-                                                                                                                                               
இருட்டு வேளையில் ஓ,லு என்னும் இருவரில், ஓ என்பவர் அவரது கொட்டிலில் லு என்பவரது விளக்கை எடுத்து படித்துக்கொண்டிருக்கிறார், இவ் வேளை இருட்டில் மூழ்கி இருக்கும் தனது கொட்டிலுக்கு வரும் லு ஆனவர் தனது உதவியாளரை அதட்டலுடன் அவ் விளக்கை எடுத்து வர அனுப்புகிறார், அவ் உதவியாளர் ஓ இடம் இருக்கும் விளக்கை எடுக்க எத்தனிக்கும் போது ஓ ஆனவர் பல் சிந்தனை உள்ளவராக இல்லாவிடின் அவ் விளக்கைக் கொடுக்க மறுப்பார். அதே போல் லு ஆனவரும் பல் சிந்தனை இல்லாதவராயின் இரண்டு பேருக்கும் வாக்கு வாதம் ஏற்படும். அல்லது உதவியாளர் பாதிக்கப்படுவார்
உடற்சமநிலை

iv.        பயிற்சி  (  Training )                                                                                                                                     வீரர்களுக்கு போரிடும் ஆற்றலுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்குவதால் உடற் சமநிலையைப் பேண முடியும்.

v.         சுகாதாரம்  (  Health )                                                                                                                                                வீரர்களின் மத்தியில் சுகாதாரத்தை கண்டிப்பாக குழுத் தலைவர்களே பேணவேண்டும். இது ஒரு மருத்துவருக்குரிய கடமை இல்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த சுhகதார ஒழுக்கத்தைப் பேணும்போது உடற்சமநிலை பேணப்படும்.

vi.        தோற்றப்பாடு ( Appearance )                                                                                                                                    தோற்றப்பாடு எனும்போது நேர்த்தியான நடை, உடை, பாவனை சுத்தமாக இருத்தல், வசனங்களை அர்த்த திருத்தமாகக் கதைத்தல் போன்றவை உள்ளடங்குகின்றன.

vii.       உணவு  (  Food )                                                                                                                                                                   உடல் ஆரோக்கியத்துக்கான தேவையான உணவு வகைகளை நாளாந்தம் உணவில் சேர்ப்பதால் உடற் சமநிலை பேணப்படும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...