மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு !


இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில்
கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்வு 1988 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்துப்பட்டது. அப்போது வடக்குää கிழக்கு மாகாண மக்களின் பேராதரவுடனும் இந்திய அரசின் பூரண அனுசரணையுடனும் நடந்து கொண்டிருந்த தனிநாட்டுக்கான ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேää மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த அதிகாரப்பகிர்வு வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த 7 மாகாணங்களின் மக்கள் கேட்காமலேயே
அவர்களுக்கும் கிடைத்தது.
மத்தியிலுள்ள அதிகாரங்களை குறைந்தபட்ச அளவிலேனும்
மாகாணங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காகவே இம்முறைமை
ஏற்படுத்தப்பட்ட போதிலும்ää மாகாண சபை ஏற்பாட்டில் கூறப்பட்டிருந்தவாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எந்தவொரு மாகாண சபைக்கும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் தேசியவாத சக்திகள் மாகாண சபைக்கு அதிகாரங்கள் போதாதெனக் கூறி வருகிறார்கள். அத்தோடு மாகாண சபை முறைமைக்கு அப்பால் அதிகாரப்பகிர்விற்கான புதியதொரு தீர்வொன்றினைக் கோரியவாறு,  வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் தீவிரமாகப் போட்டிபோட்டுப் பங்கெடுத்தும் வருகின்றனர். இவ்வாறு அதிகாரம் போதாத சபைக்கும் போட்டிபோடுவது என்பதற்கு பதவி வேட்கை
என்பது மாத்திரமே காரணமாக இருக்க முடியும்.

கிழக்கு,  வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் 08.09.2012 இலும்,  வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் 05.07.2013 இலும்ää தென் மற்றும் மேல் மாகாண
சபைகளுக்கான தேர்தல் 29.03.2014 இலும் ஊவா மாகாண சபைக்கான தேர்தல் 20.09.2014 இலும் நடந்தன. மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே. எனவே ஆட்சிக்காலம் முடிவுற்ற மேற்குறித்த 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான அறிவிப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடாத்துவதற்கான எந்த சமிக்ஞைகளும் இதுவரையில் தெரியவில்லை.

இவ்வருடம்பெப்ரவரி மாதம் 10ந் திகதி இலங்கையில் நடந்து முடிந்த உள்@ராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் படுதோல்வியைச் சந்தித்தன. (4 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்த வேண்டிய உள்@ராட்சி சபைத் தேர்தலும் ஆறரை வருடங்களின் பின்னரே இவ்வாண்டு நடைபெற்றது என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது) இதன் காரணமாகவே நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைச் சந்திப்பதற்கு அரசு தயக்கம் காட்டுகின்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உள்@ராட்சி
சபைகளுக்கான தேர்தல்களையும்ää கிழக்கு, வடமத்திய மற்றும்
சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்கு முன்னர் நடாத்தப்படுமென பிரதமர் பாராளுமன்றத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் பிரகாரம் உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்த போதிலும்,  3
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இதுவரையில் நடாத்தாமல் இருப்பதற்குää உள்@ராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே காரணமாக இருக்க முடியும் என்பதைத்தவிர , வேறொன்றாக முடியாது.

இதேவேளை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தனித்தனியாக நடாத்துவதால் அதிக செலவு ஏற்படுகின்றது என்பதைக் காரணங்காட்டிää ஒரே நாளில் தேர்தலை நடாத்துவது என்ற அறிவிப்பொன்றையும் ஏற்கனவே அரசு விடுத்துள்ளது. ஆனால் அந்த நாள்ää அனைத்து மாகாண சபைகளின் 5 வருட ஆட்சிக்காலம் முடிவுற்ற பின்னரான நாளா அல்லது அதற்கு முன்னரான நாளா என்பது பற்றி எந்தத் தெளிவையும் கொண்டிராத அறிவிப்பாகவே அந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இதனால் 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுற்ற நிலையில்,  ஒரே நாளில் தேர்தல்
நடாத்த வேண்டுமென்பதற்காக ஏனைய 3 மாகாண சபைகளையும் முற்கூட்டியே கலைக்க அரசு முன்வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவதுää தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறைத் தேர்தலை அறிமுகம் செய்வது போன்ற விடயங்கள் அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இத்திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையாலும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமுமே நிறைவேற்றப்படலாம் என்று உச்ச நீதிமன்றம்
அறிவித்துள்ளதால்,  தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடாத்த
வேண்டும்.

உலகெங்கிலும் நடைமுறையிலுள்ள தேர்தல் ஜனநாயக முறையென்பதுää காலத்துக்காலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வாக்களிக்கும் அதிகாரம். இதனை வழங்க மறுக்கும் அரசு,ஜனநாயக விரோத அரசே. தேர்தல் ஒன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே குறிப்பிட்ட காலத்தின் பின்னர் புதிய தேர்தல் ஒன்றினை அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்
என்பதே,  தேர்தல் ஜனநாயக முறையிலுள்ள பல குறைபாடுகளில்
பிரதானமான குறைபாடு. அதிகாரத்திலுள்ளவர்கள் தோற்கும்
நிலையிலுள்ள போதுää அதிகாரத்தைத் தாங்களாகவே துறக்க
முன்வரமாட்டார்கள். எனவே மக்களும் எதிர்க்கட்சிகளும்
இணைந்து அரசுக்கதிக நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும்

மூலம்: வானவில் ஜூலை 2018  

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...