"பிரதமர் ரணில் ஐ.தே.க. அரசுகளின் எல்லா அநியாயங்களுக்கும ; மன்னிப்புக் கோர வேண்டும்!" இரத்தினம்



1981ஆம் ஆண்டு யூன் மாதம் தற்போதைய 1981
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின்
ஆட்சியின் கீழ் அவருடைய கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள்
தென்னாசியாவில் பிரபல்யம் பெற்ற
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது
நூலகத்தை எரித்து சாம்பல்
மேடாக்கினார்கள். உலகை
அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த
பஞ்சமாபாதகச் செயலுக்கு 35 வருடங்கள்
கழித்து அண்மையில் ரணில் வருத்தம்
தெரிவித்திருக்கிறார். தனது மாமனாரின்
ஆட்சியில் உரிமை கேட்ட தமிழர்களைப்
பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட
இந்தச் செயலுக்கு வருத்தம்
தெரிவிப்பதற்கு ரணிலுக்கு ஏன் 35
வருடங்கள் தேவைப்பட்டது என்பது
ஒருபுறமிருக்க,  இப்பொழுது கூட என்ன
நோக்கத்தை மனதில் கொண்டு அவர்
வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்ற
கேள்வியும் இருக்கிறது.



தமிழர்களின் அரும்பெரும் பொக்கிசமான
இந்த நூலகத்தை ஐ.தே.க. குண்டர்கள்
எரியூட்டியபோது, அங்கு பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த, தமிழ்
சந்ததியினருக்கு அறிவூட்டிய,
பெறுமதிமிக்க சுமார் ஒரு இலட்சம்
புத்தகங்களும்,அரிய சுவடிகளும் எரிந்து
நாசமாகின. இந்த நாசகாரச் செயலை
தூரத்தே நின்று அவதானித்த கிறிஸ்தவ
மதகுரு ஒருவர் அதிர்ச்சி தாங்காமல்
உடனேயே மரணமானார் என்பதே இந்தக்
கொடுங்கோல் சம்பவத்தை உணர்ந்து
கொள்ளப் போதுமானது. இத்தகைய
அறிவுப் பொக்கிசத்தை நாசமாக்கிய
மாமனார் ஜே.ஆரின் அரசில் மருமகன்
ரணில் கல்வியமைச்சராக இருந்தார்
என்பது இன்னொரு வேடிக்கையான
செய்தி!

உரிமை கோரி நின்ற தமிழர்களை
ஏமாற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்திச்
சபை என்ற அதிகாரம் எதுவுமற்ற ஒரு
திட்டத்தை முன்வைத்துவிட்டு அதன்
தேர்தலைக்கூட யாழ்.மாவட்டத்தில்
வன்முறையுடன் நடாத்துவதற்கு
தென்னிலங்கையிலிருந்து சுமார் 300
குண்டர்களை ஜே.ஆர். அரசு
கொண்டுவந்த அந்தச் சந்தர்ப்பத்தில்தான்
யாழ் நூலகத்தை தீ வைத்துக்
கொளுத்தியது. அதுமட்டுமல்ல
இலங்கையின் ஒரேயொரு பிராந்திய
தினசரியான ‘ஈழநாடு’ பத்திரிகையின்
காரியாலயத்தையும் எரித்து சாம்பராக்கியது.
அத்துடன் யாழ் பொதுச்சந்தைää நகரக்
கடைகள்ää யாழ்ப்பாணம் நாடாளுமன்ற
உறுப்பினர் வெ.யோகேஸ்வரனின் இல்லம்
நாச்சிமார் கோவில் தேர் என்பனவும்
ஐ.தே.க. குண்டர்களால் எரியூட்டப்பட்டன.
இவ்வளவு வன்செயல்களும் ஜே.ஆர்.
அரசில் சிரேஸ்ட அமைச்சர்களாக
இருந்த காமினி திசாநாயக்கää சிறில்

மத்தியு ஆகிய இருவரினதும் நேரடி
மேற்பார்வையிலேயே நிகழ்த்தப்பட்டன.
இவ்வளவும் நடைபெற்றும் கூட ஜே.ஆர்.
அரசோ அதன் பின்னர் பதவியில் இருந்த
ஐ.தே.க. அரசுகளோ 35 வருடங்களாக
இதற்காக எவ்வித வருத்தமும்
தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல,
ஜே.ஆர். 1977இல் பதவிக்கு
வந்தவுடனேயே தமிழர்களைப் பார்த்துää
“யுத்தம் என்றால் யுத்தம்ää சமாதானம்
என்றால் சமாதானம்” என்று சவால்
விடுத்துää தமிழ் மக்களுக்கு எதிராக இன
வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டார்.
பின்னர் 1981இல் மலையகத் தமிழ்
மக்களுக்கு எதிராக இன வன்செயலைக்
கட்டவிழ்த்துவிட்டார். அதன் பின்னர் 1983
யூலையில் வரலாறு காணாத அளவில்
மீண்டுமொருமுறை தமிழ் மக்களுக்கு
எதிரான மிகப்பெரும் இன வன்செயலைக்
கட்டவிழ்த்துவிட்டார்.

இவை மட்டுமின்றி, இனப் பிரச்சினைக்கு
அரசியல் தீர்வு காண்பதற்குப் பதிலாக
அவசரகாலச் சட்டம், பயங்கரவாத
தடைச் சட்டம் என்பனவற்றைப்
பிறப்பித்துää தமிழ் மக்களுக்கு எதிராக
யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டு
ஆட்சியில் இருந்த 17 வருடங்களில்
பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக்
கொன்று குவித்தனர் ஐ.தே.க.
ஆட்சியாளர்கள். இந்த நடவடிக்கைகளின்
போதெல்லாம் தற்போதைய பிரதமர் ரணில்
ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசுகளில் ஒரு
முக்கியமான அமைச்சராக இருந்து தமிழர்
விரோத நடவடிக்கைகளை ஆதரித்துக்
கொண்டுதான் இருந்தார். இப்படியான
ஒருவருக்கு 35 வருடங்கள் கழித்து
யாழ்.நூலக எரிப்பு சம்பந்தமாக ஏன் திடீர்
ஞானோதயம் வந்தது என்பது சிந்திக்க
வேண்டிய விடயம்.

ரணில் விக்கிரமசிங்கவின் தமிழர் விரோத
வரலாறும் சமானியமானது அல்ல. தனது
மாமனார் ஜே.ஆர். எப்படி
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1957இல்
முன்வைக்கப்பட்ட “பண்டா – செல்வா
உடன்படிக்கை”யை எதிர்த்து கண்டித்து
யாத்திரை மேற்கொண்டு அதைக்
கிழித்தெறிய வைத்தாரோ அதேபோல
2000 ஆண்டில் சந்திரிக குமாரதுங்க
தலைமையிலான அரசால்
முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தையும

நாடாளுமன்றத்தில் தனது உறுப்பினர்கள்
மூலமாக தீவைத்து எரித்து அதைக்
கைவிடப் பண்ணியவர்தான் இந்த ரணில்.
இன்றும்கூட தமிழர்களின் நண்பர் போல
நடித்துக்கொண்டு இனப் பிரச்சினைக்கு
அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு
வழங்குவதை எதிர்த்து ஒற்றையாட்சியை
வலியுறுத்தி நிற்கிறது ரணிலின் ஐ.தே.க.
எனவே ஐ.தே.க. அரசுகள் தமிழ்
மக்களுக்கு எதிராகச் செய்த
அநியாயங்களுக்கு காலம் கடந்தாவது
உண்மையாக மனம் வருந்தி வருத்தம்
தெரிவிப்பதாக இருந்தால் ரணில் நூலக
எரிப்புக்கு மட்டும் வருத்தம் தெரிவித்தால்
போதாது. அந்த அரசுகள் செய்த
அனைத்து அநியாயங்களுக்கும் தமிழ்
மக்களிடம் மன்னிப்புக் கேட்பதே சரியான
செயலாக இருக்கும்.

அப்படிச்செய்யாதுவிடின், நூலக எரிப்புக்கு
மட்டும் அவர் வருத்தம் தெரிவித்தது, உள்
நோக்கம் கொண்டது என்றே கருதப்படும்.
அதேநேரத்தில் தொடர்ச்சியாகத் தமிழ்
மக்களுக்கு தலைமைதாங்கி வந்த
தலைமைகளும் இன்று தலைமை
தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்
உதைத்த காலை நக்குவது போல
ஐ.தே.க. தலைமையுடன் எப்பொழுதும்
கூட்டுச் சேர்ந்தே செயல்பட்டு
வந்திருக்கிறது வருகிறது என்பதையும்
தமிழ் மக்கள் இச்சந்தர்ப்பத்தில்
சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
இன்றும்கூட கூட்டமைப்பு
சந்தர்ப்பவசத்தால் கிடைத்த எதிர்க்கட்சி
அந்தஸ்தை வைத்துக்கொண்டுää
மறுபக்கத்தில் ஐ.தே.க. தலைமையிலான
அரசின் பங்காளி போலவே செயல்படுகிறது.
ஐ.தே.கவும் தமிழ் தலைமையும் சாடியும்
மூடியுமாகவே இருக்கின்றன.

மூலம்: வானவில் இதழ் 73- 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...