ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு புலம்பெயர் புலிகளின் பல்வேறு முயற்சிகள்- டி.பி.எஸ்.ஜெயராஜ் பகுதி - 2


விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது, மூன்று வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள், சிவபரன் என்கிற 


நெடியவன் தலைமையிலான புலம்பெயltte-diasproர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்கள், சதித்திட்டம் மேற்கொண்டு, நிதி வழங்கி மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து முன்னாள் புலி உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்த தூண்டிவிட்டுள்ளார்கள் என்று. இது சுமந்திரனின் கொலை முயற்சி ஒரு நாடகம் என விளக்கி வருபவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது. அதேவேளை தீர்மானமான ஒரு சதித்திட்டத்தின் இருத்தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தயாரெடுப்புகள் என்பன தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது, சுமந்திரனின் படுகொலை முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் அளிக்கும் பெரிய சதியின் ஒரு பகுதியா அல்லது வெறுமனே சுமந்திரனை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தனியான ஒரு சதியா என்பதுதான்.

இந்த பின்னணியில் சமீபத்தைய கடந்த காலத்தைப்பற்றி சுருக்கமாக ஆய்வு செய்யவேண்டியது ஏற்புடையதும் மற்றும் முக்கியமானதும் ஆகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக மே 2009ல் தோற்கடிக்கப்பட்டது ஆகும். இதன் காரணமாக புலிகள் இயக்கம் ஒரு சாத்தியமான செயற்பாடுள்ள இயக்கமாக தீவுக்குள் செய்படுவது நிறுத்தப்பட்டது. 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதின் பின்னர் சிறையிலிருந்து விடுதலையானார்கள். எனினும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்பு சிதைவடையாமல் அப்படியே இருந்தது ஆனால் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அவை கடுமையாக பலவீனப்பட்டு இருந்தன. புலம்பெயர் புலிகள் வெளிநாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கிய போதிலும் பெரியளவு வன்முறைகளில் ஈடுபடுவதற்கான அவர்களது தகுதி கிட்டத்தட்ட ஸ்ரீலங்கா மண்ணில் முடிவுக்கு வந்துவிட்டதால், ஸ்ரீலங்காவுக்கு சிறியளவு சேதத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை

நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன்
ஸ்ரீலங்காவில் போர் முடிவடைந்து விட்டபோதிலும், நேர்ர்வேயினை தளமாக கொண்டியங்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான புலம்பெயர் புலிகள், ஸ்ரீலங்காவில் வன்முறைnediyavan1யில் ஈடுபடும் அதன் முயற்சிகளை உறுதியாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. வெளிநாட்டுப் புலிகள் ஸ்ரீலங்கா மண்ணில் உள்ள முன்னாள் புலிகளை தங்கள் முகவர்களாக அல்லது கருவிகளாகப் பயன்படுத்தி ஸ்ரீலங்காவில் வன்முறைகளைத் தூண்ட முயற்சித்து வந்தன. மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை என்கிற பழமொழிக்கு ஏற்ப, யுத்தம் முடிவடைந்து விட்டபோதிலும், புலம்பெயர் புலிகள் தொடர்ச்சியாக எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் வழங்க முயற்சித்தபடியே ஸ்ரீலங்காவில் வன்முறைகளைத் தூண்ட முயற்சி செய்தார்கள். சமீபத்தைய சுமந்திரன் கொலை முயற்சி, யுத்தத்துக்கு பின்னான வருடங்களில் வெளிநாட்டு புலிகள் வன்முறையை தூண்டிவிட்ட முதல் சம்பவம் அல்ல. அதேபோல அதுதான் கடைசி சம்பவமாகவும் இருக்கப் போவதில்லை.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் புலம்பெயர் புலிகள் ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகள் இருக்கின்றன. அவற்றில் சில மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டபாய ராஜபக்ஸ சக்திமிக்க பாதுகாப்பு செயலாளராகவும் இருந்தபோது நடைபெற்றவையாகும். முதலாவது சம்பவம் ஸ்ரீலங்காவின் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. 2012 மார்ச் 17ல், ஒரு தமிழ் இளைஞனின் தொண்டை அறுக்கப்பட்ட உடல் திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்த நபர் முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்கசியை(ஈ.பி.டி.பி) சோந்த முத்து என்கிற வேலாயுதம் ரகுநாதன் ஆவார். அவரது உடலின் அருகில் கையால் ஏழதப்பட்ட ஒரு காகிதத்தில் “துரோகிகளுக்கு மரணம்” என்கிற குறிப்பு எழுதப்பட்டு அருகில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சிறிய புலிக்கொடியின் படமும் காணப்பட்டது.

ஒரு அச்ச நிலையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் பிரதிபலித்தது. திருகோணமலை மாவட்டம் முழவதும் தீவிர தேடுதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. ஆண், பெண் என இருபாலாரையும் சேர்த்து 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப் பட்டார்கள். அநேகமாக அவர்கள் அனைவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அவர்கள் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத சில முன்னாள் புலிகளும் இந்த சுற்றி வளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கந்தையில் உள்ள பாதுகாப்பு விடுதி மற்றும் புனர்வாழ்வு மையத்துக்கு புனர்வாழ்வு பெறுவதற்காக அனுப்பப் பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்ததின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு நிறுவனத்துக்கு எச்சரிக்கை மணியை அனுப்பியது. மேலதிக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகள் மூலமாக ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்கும் முயற்சி ஒன்று உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் இடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகளின் பின்துணையுடன் மேற்கொள்ளப்படுவது பற்றிய தகவல்கள் வெளியாயின.

குமரன் என்கிற கமலநாதன் சதீஷ்குமார்
பிரான்சிலுள்ள புலி செயற்பாட்டாளரான குமரன் என்கிற கமலநாதன் சதீஷ்குமார், நவம்பர் 2011ல் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவர் தமிழ் நாட்டில் வதியும் சில முன்னாள் புலி உறுப்பினர்களை ஒன்றுசேர்த்து எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் நோக்குடன் ஒரு இரகசிய கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார். குமரன் தமிழ் நாட்டில் உள்ள பதினைந்து அங்கத்தவர்களை ஆட்சேர்ப்பு செய்து அவர்களை தலா ஐந்து பேர்கொண்ட மூன்று சிறிய குழுக்களாகப் பிரித்தார். அத்தகைய ஒரு குழுவினைச் சேர்ந்த அங்கத்தவர்கள் மார்ச் 6, 2012ல் திருகோணமலைக்கு அனுப்பப் பட்டார்கள். அதன் நோக்கம் திருகோணமலை மாவட்டத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவது. முத்து என்கிற ரகுநாதன் மார்ச் 17ல் கொல்லப்பட்டது இந்த திட்டத்தின் முதலாவது நிகழ்வு ஆகும். குமரன் என்கிற சதீ|ஷ்குமார் இன்னமும் பிரான்சில்தான் வாழ்கிறார் ஆனால் இப்போது வெளிப்படையாக செயற்படாமல் உள்ளார
.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய கடுமையான தேடுதல் வேட்டை காரணமாக எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பின் ஆரம்ப பரீட்சார்த்த திட்டம் கோணலாகிப் போனது. அந்த குழுவில் உள்ள சிலர் கைது செய்யப்பட்ட அதேவேளை ஏனையோர் இந்தியாவுக்கு திரும்பவும் தப்பியோடி விட்டார்கள். திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலின் விளைவாக பெருமளவிலானவர்கள் கைது செய்யப்பட்டது காரணமாக சமூகத்தில் அதிக எச்சரிக்கையை ஏற்படுத்தியது. ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த அதிக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அப்போது கொண்டிருந்த (இப்போதும் கொண்டுள்ளது) தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பெருந்திரளான கைதுகளுக்கு எதிரா கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டது.
ரி.என்.ஏ யின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸவை  இது தொடர்பாக சந்தித்தார்கள் கோட்டபாயா என்ன நடந்தது என்பதை விளக்கியதுடன் இந்த புத்துயிர்ப்பு முயற்சி பற்றி ரி.என்.ஏக்கு அறிவித்தார். ஸ்ரீலங்காவில் உள்ளவர்களுக்கும் மற்றும் புலம்பெயர் சக்திகளுக்கும் இடையில் இது தொடர்பாக நடைபெற்ற  தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளையும் கூட அவர்களுக்கு இயக்கி காட்டியுள்ளார். பாதுகாப்புச் செயலர் காலக்கிரமத்தில் மொத்தமாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று ரி.என்.ஏக்கு உறுதி வழங்கினார். வெளிப்படையாக திருப்தியுடன் ரி.என்.ஏ திரும்பியது. சில நாட்களிலேயே; ஒரு சிலரைத் தவிர கைது செய்யப்பட்ட அனைவரும விடுவிக்கப்பட்டார்கள்.

இரண்டாவது எல்.ரீ.ரீ.ஈ புத்துயிhப்பு முயற்சி, டிசம்பர் 2012ல் கண்டுபிடிக்கப் பட்டது. 2012 டிசம்பர் முதல்வாரத்தில் புனர்வாழ்வு பெற்றிராத ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் கொழும்பில் கைது செய்யப்பட்டபோது மற்றும் அதைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்ததின் விளைவாக குழப்பமான ஒரு கண்டுபிடிப்பு கிடைத்தது. தமிழ்நாடு சென்னையில் இயங்கிவரும் ஒரு எல்.ரீ.ரீ.ஈ வலையமைப்புக்கு ஐரோப்பாவில் உள்ள புலி உறுப்புகள் அளித்த நிதி பற்றிய விபரங்கள் ஆரம்பக் கட்ட விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

தமிழ்நாடு புலிகள் வலையமைப்பு இணைப்புகள்
மேலதிக விசாரணைகள் மேலும் ஆறு இளைஞர்களை யாழ்ப்பாணத்தில் கைது செய்வதற்கு வழி வகுத்தது. அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள புலிகள் வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. ஆறுபேரில் இருவர் முன்னாள் பெண் புலிகள் அவர்கள் புனர்வாழ்வு பெற்றதின் பின்னர் விடுதலையானவர்கள். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் இருவரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப் பட்டார்கள்.
கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களிடமிருந்து மேலதிக தகவல்கள் சேகரிக்கப் பட்டன. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்ததின்படி தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் மத்தியில் இருந்தltte revival-1ு ஆட்சேர்ப்பது தொடர்பான ஒரு இரகசிய பிரச்சாரம் உருவாகிக் கொண்டிருந்தது, தமிழ் ஈழத்துக்கு அனுதாபம் காட்டும் ஸ்ரீலங்கா தமிழ் இளைஞர்களுக்கு தீவிர எல்.ரீ.ரீ.ஈ சித்தாந்தம் போதிக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு இலத்திரனியல் மற்றும் வெடிபொருட் கருவிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் இறுதி நோக்கம் தீவுக்குள் ஊடுருவி முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் ஸ்ரீலங்காவின் முன்னணி பிரமுகர்கள் மீது வெடிமருந்து தாக்குதல்கள் நடத்துவது ஆகும். இந்த திட்டத்துக்கு ஐரோப்பாவில் உள்ள புலி உறுப்புகள் நிதியுதவி வழங்கின.
ஸ்ரீலங்கா அதிகாரிகள் இந்த தகவலை மெதுவாக இந்தியாவில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த தகவல் கசிந்துவிடாமல் இருப்பதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டது. கியு கிளை என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவின் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு, ஒரு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், டிசம்பர் 19, 2012 இரவில் ஒரு திடீர் சோதனையில் ஈடுபட்டது. சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பல்லாவரம் அருகில் உள்ள பம்மலில், நல்லதம்பி தெருவில் உள்ள ஒரு வீட்டினைச் சுற்றி வளைத்து காவல்துறை அணியினர் அதிரடியாக பாய்ந்தனர். அந்த வாடகை வீட்டில் குடியிருந்த நான்கு குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எஸ்.சுரேஷ்குமார், டி. உதயதாஸ், ரி.மகேஸ்வரன், மற்றும் கே.கிருஸ்ணமூர்த்தி  ஆகியோர்களாவர். அவர்கள் கைது செய்யப்பட்ட நேரமாகிய டிசம்பர் 2012ல் அவர்களது வயது முறையே 34, 39, 33, மற்றும் 29 ஆகும்.

அப்போது டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி அறிக்கையின்படி ஒரு புலனாய்வாளர் தெரிவித்தது, ஈழப்போரின்போது நடைபெற்ற ஒரு வெடிவிபத்தில் சுரேஷ்குமார் தனது கால்களை இழந்துவிட்டார் தற்போது அவர் சக்கரநாற்காலியை பயன்படுத்தியே இயங்குகிறார். அந்த மனிதர்களில் இருவர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக 2001 மற்றும் 2003ல் வந்துள்ளார்கள் மற்றவர்கள் யுத்தம் அதன் இறுதிக்கட்டத்தில் இருந்த 2009ல் வந்தவர்கள் என அந்த அதிகாரி தெரிவித்தார் எனச் சொல்லப்பட்டிருந்தது.

எல்.ரீ.ரீ.ஈயின் இலத்திரனியல் நிபுணர் சுரேஷ்குமார்
அந்த செய்தி அறிக்கை மேலும் தெரிவித்தது - ஒரு இலத்திரனியல் நிபுணரான சுரேஷ்குமார் எல்.ரீ.ரீ.ஈ யின் வெடிபொருட்கருவிகள் தயாரிக்கும் ஒரு பிரிவிற்கு தலைமை தாங்கியுள்ளார். “அவர் மின்னணுச் சுற்றுக்களைத் தயாரிப்பதில் நிபுணர்” என அந்த அதிகாரி சொன்னார். “நாங்கள் இரண்டு மடிக்கணணிகள், குற்றம் தொடர்பான ஆவணங்கள், கம்பிகள், கேபிள்கள், மின்னியல் சுற்று அட்டைகள், பனல்கள் என்பனவற்றை அந்த வீட்டில் இருந்து கண்டெடுத்தோம்”. புலனாய்வாளர்கள் சொன்னது, கிருஸ்ணமூர்த்தி அந்த சுற்றுவட்டாரப் பகுதிக்கு தண்ணீர் கேன்கள் விநியோகித்து வந்துள்ளார், அவர் அங்குள்ள ஸ்ரீலங்கா தமிழர்களுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களை சுரேஷ்குமாரிடம்  அழைத்து வந்துள்ளார். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் அவர்களுக்கு முன் ஆயத்தமில்லா வெடிபொருட் கருவிகள் மற்றும் பல்வேறுவகை குண்டுகளுக்கான மின்னணுச் சுற்றுகள் என்பனவற்றை தயாரிப்பதற்கு பயிற்சி அளித்துள்ளார். விசாரணையின்போது கைது செய்யப்பட்டவர்கள் இதை தெரிவித்தார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தாம்பரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்கள்.ஸ்ரீலங்கா பாதுகாப்பு புலனாய்வாளர்கள், ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயினை புத்துயிர்ப்பிக்கும் இரண்டு வெவ்வேறு முயற்சிகளில் தமிழ் நாட்டுத் தொடர்பு இருப்பதற்கான விபரங்களைக் கண்டு பிடித்துள்ளார்கள், இதில் ரோ என அழைக்கப்படும் இந்திய வெளிவிவகார புலனாய்வு முகவர்களின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கெட்ட நோக்கங்களும் இருக்குமோ என சந்தேகிக்கப் படுகிறது. எல்.ரீ.ரீ.ஈ யின் இந்த புத்துயிர்ப்பு முயற்சிகளில் ரோவும் ஒரு பங்கினைக் கொண்டிருக்குமோ என உணரப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அச்சுறுத்தல்கள் மிகை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான புலிகளுக்கு ரோ வின் ஆசீhவாதத்துடன் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்காவில் பத்திரிகைச் செய்திகள் வெளியிடப்பட்டன. அவை கடுமையாக மறுக்கப்படவும் செய்தன. ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளிடையே தொடர்ச்சியாக இடம்பெறும் இடையீடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பிரச்சினைகளில் ரோ தொடர்பான பீதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
2014ல் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சிltte revival
பின்னர் வந்தது, சுந்தரலிங்கம் கஜதீபன் என்கிற தெய்வீகன், அப்பன் என்கிற நவரட்னம் நவனீதன் மற்றும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்கிற கோபி ஆகிய மூவர் அடங்கிய குழு தலைமையிலான 2014 எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சி. இது மே 2009ன் பின்னர் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர்ப்பு அளிப்பதற்கு நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரமான முயற்சியாகும். காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளின் செறிவான முயற்சியினால் இதுவும் முறியடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் உள்ள ஒரு முக்கியமான உண்மை, அரச புலனாய்வு, இராணுவ புலனாய்வு, மற்றும் காவல்துறை ரி.ஐ.டி என்பனவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராடவேண்டி உள்ளதுதான். இதுவும் மற்றும் ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்காக புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான வேறு விடயங்களும் அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக ஆராயப்படும்

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...