தேசிய நலன், எங்களது உச்சக்கட்ட முன்னுரிமை - டியு குணசேகர


கடந்த மாதம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த மூத்த இடதுசாரி டியு குணசேகர (D.E.W. Gunasekera ),  இடதுசாரி இயக்கத்துடன் நீண்ட காலச்சேவையைக் கொண்டிருந்தவர். 1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972ல் மத்திய குழுவில் நுழைந்தார். 2004ல் பொதுச் செயலாளராக ஆனார்.

இந்த நேர்காணலில்ää பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான அவரது காரணங்கள், கோவிட்-19 இனாலும் புதிய தாராளவாதத்தினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்கள், சீன- இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக்குகம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்புகள் ஆகியவை குறித்து குணசேகர கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

டியு குணசேகர

Photo: Newsfirt.lk


கேள்வி: இராஜிநாமா செய்யவதற்கு உங்களை நிர்ப்பந்தித்தது எது?

பதில்: எமது நாட்டில் ஒரு புதிய வளர்ச்சிக்கான காலகட்டத்தில் நாங்கள் நுழைந்து கொண்டிருக்கிறோம். கோவிட்-19 இற்குப் பின்னைய  காலகட்டத்தில்.உலகளாவியää பிராந்திய மற்றும் தேசிய அளவில் பல மாற்றங்கள் இருக்கும். சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) சமீபத்தில் ‘கொந்தளிப்பான மாற்றம்’ (Turbulent Change ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதிää புதிய அரசாங்கம்,புதிய பாராளுமன்றம் ஆகியவை உள்ளன. நெருக்கடியிலிருக்கும் புதிய தாராளவாதத்தின் இறுதிக்குள் நாங்கள் வருகிறோம். சகல அரசியல் கட்சிகளும் இப்போது ஒரு புதிய பொருளாதார மூலோபாயத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றன. இந்தப் புதிய முன்னேற்றங்களை இடதுசாரி இயக்கம் மதிப்பீடு செய்ய வேண்டும். நமது நாட்டில் இடதுசாரி இயக்கத்திற்கு புதிய சிந்தனைகளும் புதிய வளர்ச்சிகளும் தேவையாக உள்ளது. எனவேää ஒரு புதிய தலைமுறையிடம் தலைமை செல்ல வேண்டும்.

நான் இலங்கையில் இடதுசாரித் தலைவர்களது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். அடுத்த  பொதுச் செயலாளர் பதவிக்குää அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நபராக கலாநிதி ஜி. வீரசிங்கே (Dr. G. Weerasinghe) உள்ளாரென நான் மத்திய குழுவிற்கு முன்மொழிந்தேன். அவர் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

உண்மையில், நான் அரசியலை விட்டு விலகவில்லை. நான் மத்திய குழுவிலும் பொலிட்பீரோவிலும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறேன். ஆனால் இப்போது கலாநிதி வீரசிங்கே புதிய சிந்தனை, செயற்பாடு மற்றும் திட்டமிடல் மூலம் முன்முயற்சி எடுக்க உள்ளார். அவர் இடதுசாரித் தலைவர்களது நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

கேள்வி: இலங்கையில் நிகழும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மாற்றங்கள் பற்றிய உங்கள் பகுப்பாய்வு என்ன?

பதில்: நாங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியின் ஊடே சென்று கொண்டிருக்கிறோம். கோவிட்-19 என்பது இதன் ஓர் அம்சம், அத்துடன் உடனடிக் காரணமும் ஆகும். ஆனால், நவீன தாராளவாத பொருளாதார செயற்திட்டமே இதனை பின்னணியிலிருந்து இயக்கும் காரணம் ஆகும். இலங்கையில் நவதாராளவாதம் 40 வருடங்களாப் பயணித்து ஒரு நெருக்கடியொன்றுக்குள் சென்றுவிட்ட ஒரு புள்ளிக்கு நாங்கள் வந்தடைந்துள்ளோம்.

புதிய தாராளமயத்தை அறிமுகப்படுத்திய தரப்பு இன்று முற்றிலும் சிதைந்து பிளவுண்டுள்ளது. ஏகாதிபத்திய  ஆதரவுத் தலைவருக்கு பாராளுமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை. இது ஓர் எதிர்பாராத ,ஆனால் தவிர்க்க முடியாத புதிய தாராளவாத நெருக்கடியின் விளைவாகும்.

இதனால்தான் கோத்தபாய ராஜபக்சவுக்கு இவ்வளவு பெரிய ஆணை கிடைத்துள்ளது. பொதுவாக, எமது தேர்தல் முறையின் கீழ், மூன்றில் இரண்டு பங்கு ஆணை என்பது வெறுமனே சாத்தியமற்றது. அரசியலமைப்பு நிபுணர்கள் இதனை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதைத் தடுப்பதற்காகவே 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை அவர்கள் வகுத்தனர்.

பொருளாதாரத்தைப் புத்துயிர் பெறச் செய்வதும், மீட்டெடுப்பதுமே உடனடிப் பணியாகும். 2015 இல், எங்கள் பொருளாதார வளர்ச்சி வீதம் சுமார் 5மூ ஆக இருந்ததுää ஆனால் இன்று அது 2மூ இற்கும் குறைவாக உள்ளது. இது கோவிட்-19 இற்குப் பிறகு மிகவும் மோசமாக உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில்ää உண்மையில் வளர்ச்சி வீதத்தை நாங்கள் குறைந்தது 5மூ இற்காவது திரும்ப கொண்டுவர வேண்டும். 55 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனையும் 15 டிரில்லியன் இலங்கை ரூபாய் உள்நாட்டுக் கடனையும் கொண்டவர்களாக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு பெரியதொரு வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. எங்களிடம் ரூபாய்கள் இல்லை,டொலர்கள் இல்லை, மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் ( Foreign Direct Investment -FDI) வருவது இல்லை.

உலகம் நெருக்கடியில் உள்ளதோடு கடன் கொடுக்கவும் யாரும் இல்லை. குறைந்தபட்சம் சில உதவிகளை வழங்கக்கூடிய ஒரேயொரு நாடு சீனா மட்டுமே. இதுதான் யதார்த்தம்.

கேள்வி: ஆனால், சீனா அதன் சொந்த பிரச்சினைகளைக்

கொண்டிருக்கிறதல்லவா?

பதில்: நிச்சயமாக, இந்த பொருளாதார மந்த நிலை சீனாவையும் பாதித்துள்ளது. ஏனென்றால் அவர்கள் உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியினராக உள்ளனர். ஆனால் வர்த்தகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கையில்,உள்நாட்டு நுகர்விற்கு பண்டங்களையும் சேவைகளையும் திசை திருப்பும் தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு இருந்தது. சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புமுறைக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அமைப்பு முறைகளுக்கும் இடையிலான வேறுபாடு இதுவேயாகும்.

அனைத்து குறைபாடுகளையும் மீறி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (Chinese Communist  Paerty CPP) மதிநுட்பத்தால். உள்ளக சரிக்கட்டல்களை சீனா விரைவாகச் செய்தது,

கேள்வி: சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி பேசுகையில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதில் உங்கள் கட்சியின் பங்கு என்ன?

பதில்: சோசலிஸ நாடுகளுடனான உறவுகளை நிறுவுவதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (ஊPளுடு) மட்டுமே போராடி வந்தது. 1945 இல் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் தொடக்க விழாவிற்காக பாரிஸிற்கு எங்களது ஸ்தாபகர் கலாநிதி; எஸ்.ஏ.விக்கிரமசிங்க (Dr. G. Weerasinghe)    சென்ற போது,சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவர் தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் சீனத் தலைவர்களான சூ என் லாய் (ணூழர நுn டுயi) மற்றும் டெங் சியாவோபிங் (Deng Xiaoping ) ஆகியோர் இளைஞர்களாக பிரான்சில் படித்துக் கொண்டிருந்தனர்.

இரப்பர்-அரிசி உடன்படிக்கையே சீனாவுடனான எமது முதலாவது வர்த்தக உடன்படிக்கை. சீனாவுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர்,இரப்பரின் விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததினாலும்ää உலகில் அரிசிப் பற்றாக்குறை இருந்ததினாலும், பீட்டர் கெனமன் (Peiter Keuneman )  மற்றும் கலாநிதி விக்கிரமசிங்கவின் அழுத்தத்தின் விளைவாகவாகவுமே இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆதரவு ஐக்கிய தேசியக்கட்சி கம்யூனிச சீனாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர வரலாற்று நிலைமைகளால் நிர்பந்திக்கப்பட்டது. தோழர் பீட்டர் கெனமன் தான் பின்னர், சீனாவிற்கான அரசாங்கத்தின் முதல் அனைத்துக் கட்சி தூதுக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்.

கேள்வி: நீங்கள் எப்போதாவது சீனாவிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?

பதில்: நான் சீனாவிற்கு சுமார் நான்கு அல்லது ஐந்து தடவைகள் விஜயம் சென்றிருக்கிறேன். 1978 இல் டெங் சியாவோபிங் சீர்திருத்தங்களையும் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் தொடங்கியபோது, (Shenzhen)  உள்ள தற்போதைய சுதந்திர-வர்த்தக வலயப் (Free trade zoon ) பகுதிக்கு முதன்முதலில் விஜயம் செய்தவர்களில் ஒன்றாக, எங்கள் கட்சி பிரதிநிதிகள் குழு இருந்தார்கள். அந்த நேரத்தில் ஷென்செனில் அடிக்கட்டுமான வசதிகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

1987 இல் தோழர் பீட்டர் கெனமன் தலைமையில் கட்சியின் தூதுக்குழுவொன்று சீனாவுக்குச் சென்றிருந்தது. நாங்கள் அங்கே தங்கியிருந்த வேளையில், ஒரு நாள் மாலை, பொதுச் செயலாளர் ஹ_யாவோபாங் (Hu Yaobang)  எங்கள் பொலிட்பீரோவின் மூன்று பிரதிநிதிகளை அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்திக்க விரும்புவதாக எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்,இரவு 8 மணியிலிருந்து காலை 2 மணி வரை நாங்கள் கலந்துரையாடினோம்.

அந்த நேரத்தில்தான் சோவியத் யூனியனில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. கோர்பசேவ் (Gorbechev) அதிகாரத்திற்கு வந்திருந்தார். அதற்கு ஒரு வாரத்திற்கு  முன்னர் தான் அவர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். தோழர் ஹ_ யாவோபாங் எங்களிடம் கூறினார், “நான் கோர்பச்சேவைச் சந்தித்து அரசியல் சீர்திருத்தங்களில் கவனமாக இருக்குமாறு அவரை எச்சரித்தேன். உங்களது பொருளாதார சீர்திருத்தங்களை நீங்கள் செய்யலாம்,ஆனால் நீங்கள் அரசியல் மாற்றங்களை செய்தால், கட்சியின் அரசியல் அதிகாரத்தை நீங்கள் இழப்பதுடன், அதுதான் முடிவாகவும் இருக்கும்” பொருளாதார மாற்றங்கள் முற்றுப்பெறும் வரை கட்சியையும், அரசு கட்டமைப்பையும் குலைக்க வேண்டாமென சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரித்திருந்தார்கள்.

கோர்பசேவ் இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார். சோவியத் ஒன்றியம் தகர்ந்தது. 1989 இல் பெர்லின் (Berlin) சுவர் வீழ்ந்ததோடு, இந்தப்போக்கு 1991வரை நீடித்தது.

கேள்வி: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தம் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: சீர்திருத்தம் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, சோவியத் ஒன்றியத்தில் நெருக்கடியொன்றுஉருவாகி வந்தது. அது ஒரு மூடிய பொருளாதாரம். அவர்கள் உற்பத்தி செய்தவைக்கு போட்டிச் சந்தையோ அல்லது கேள்வியோ இருக்கவில்லை. இந்த அனுபவங்களிலிருந்தே சீன கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொண்டார்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது டெங் சியாவோபிங் கூறினார்,“பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதில் சோசலிச நாடுகள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் அனுபவங்களை எடுத்துக் கொண்டு,நாட்டிற்கான எமது சொந்த வேலைத்திட்டத்தை நாம் கட்டாயமாகத் தயாரிக்க வேண்டும்”

லெனின், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடைசி கட்டுரையில், குறிப்பாக சீனப் புரட்சி நடந்தால் மட்டுமே சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் பாதுகாக்கப்பட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரது நோக்கத்தை நீங்கள் விளங்கிக் கொள்ளும் போது,இது எளிதாக இருக்கும்.

சீனப் புரட்சி நடந்து, அதன் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றால், மிகப் பெரிய சந்தை திறக்கப்படும். அந்த பெரிய சந்தை தான் தீர்மானிக்கும் காரணியாகும். பெரியதொரு சந்தை இல்லாமல், ஒரு சிறிய மூடிய பொருளாதாரம் இருக்கவும் முடியாது, முதலாளித்துவ சுற்றிவளைப்புடன் போட்டியிடவும் முடியாது. இரண்டு உலக யுத்தங்கள் சந்தைகளைப் பிரிப்பதற்காகப் போரிட்டன. அணுச் சரிசமநிலைக்குப் பிறகு, மற்றுமொரு உலகப் போர் என்பது உலகை அழித்தொழிக்கும். அதனால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் சமாதான சகவாழ்வுக் (Peaceful coexistence )  கோட்பாட்டினை எடுத்துக் கொண்டது. அது சூ என் லாய் என்பவரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதனால்தான் சீனா தனது பொருளாதாரத்தை திறந்து விட்டும்,உலகத்துடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தும், பிற சித்தாந்தங்களையும் மதிக்கின்றது. கோட்பாடுகள் உள்ளன,ஆனால் நடைமுறையில் நீங்கள் பல்வேறு தடைகளைக் கடந்து வருகிறீர்கள்.

கேள்வி: அமெரிக்க கேள்வி: -சீன வர்த்தகப்போர் மற்றும் சீனாவைத் துண்டித்துக் கொள்வதென்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் பேச்சு பற்றிய உங்கள் பகுப்பாய்வு என்ன?

பதில்: துண்டிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இன்று, எங்களது உலகம் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது, ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது மேலும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. புதிய சூத்திரங்கள் தேடப்பட வேண்டும். ட்ரம்பின் பேச்சு அரசியல் ரீதியான ஏமாற்று வித்தைகள். நவம்பர் மாதத் தேர்தலுக்கு பின்னரே உண்மை நிலை வெளிவரும். ஏகாதிபத்தியம் அரசியல் மற்றும் பொருளாதார முனையில் பலவீனமடைந்துள்ளதே வர்த்தகப்போருக்கான எளிய காரணம்.

தொழில்நுட்ப ரீதியாக 5G (5வது தலைமுறை வலை அமைப்பு) இல் அமெரிக்காவை சீனா நெருங்கி விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ‘பிரெக்ஸிட்’ (Brexit) உடன் நிலைகுலையத் தொடங்கியுள்ளது. இராணுவ ரீதியாக, ரஷ்யா மற்றும் சீனாவின் மூலோபாய கூட்டணியை ஏகாதிபத்தியம் எதிர்கொள்கின்றது.

ஏகாதிபத்தியம் தெரிவு செய்வதற்கு மூன்று தேர்வுகள் உள்ளன: போட்டி போடுதல், ஒத்துழைத்தல், அல்லது மோதுதல். அவர்கள் சீனாவுடன் போட்டிபோட முடியாது. அவர்கள் சீனாவுடன் ஒத்துழைத்தால், நீண்டகால அடிப்படையில்,அவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் சீனாவுடன் மோதவும் முடியாது. அவர்கள் செய்யக் கூடியதெல்லாம்ää பிராந்திய ரீதியாக பதட்டங்களை உருவாக்கலாம்.

இந்த நிலைமை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு வழக்கமான அரசியல் தீர்வாக இருந்து வந்த யுத்தத்திற்கு, ஒரு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடு செல்ல முடியாதுள்ளது. இன்று நாங்கள் பலதுருவ உலகொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்கா ஒற்றைத் துருவத்தின் கீழ் ஒளிர்ந்து வந்துள்ளது.

கேள்வி: நவம்பரில் அமெரிக்க தேர்தல் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். உங்களுக்கு விருப்பமான வேட்பாளர் ஒருவர் இருக்கிறாரா?

பதில்: நவம்பர் மாதத்திற்குப் பிறகு யார்  வந்தாலும்,யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜோ பைடனின் (Jo Biden ) கீழ் பெரிய மாற்றங்களை நான் எதிர்பார்க்கவில்லை. சில அம்சங்களில், ட்ரம்ப் இன்னும் சாதகமாகவே இருக்கிறார். அவர் மட்டுமே,அமெரிக்காவில் யுத்தத்தைப் பிரகடனம் செய்யாத ஒரேயொரு ஜனாதிபதி. அவர உரத்துக் கத்துவதை மட்டுமே செய்கிறார். ஏனைய வேட்பாளர்கள் உரத்துக் கத்தவில்லை,ஆனால் போருக்கு செல்லலாம்.

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? 

பதில்: ஆசிய பிராந்தியத்தை இலங்கை தீவிரமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உலகப் பொருளாதாரத்தின் முன்னணிப்படை (Vanguard) ஆசியப் பொருளாதாரமாகும். உலகத்தின் கவனம் ஆசியப் பொருளாதாரத்தின் மீது குவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அபிவிருத்திகளின் பின்னணியில் இலங்கை அணிசேரா,சரிசமநிலையில் உள்ள கொள்கையை பின்பற்ற வேண்டும். இதனை ‘இயக்கவியல் நடுநிலைவாதம்’ (dynamic neutralism ) என்று அழைக்கலாம். சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அனைத்து நாடுகளுடனும் நட்பாக இருப்போம். ஆனால் முதலாவது முன்னுரிமை தேசிய நலன் தான். அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவேண்டும். சீனா ஒரு நண்பர், இந்தியா ஓர் உறவினர். ஆனால் நாளாந்த வாழ்க்கையில் சில நேரங்களில் உறவுகளை விட நண்பர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். சில நேரங்களில்ää உறவுகளை விட நண்பர்களையே நாங்கள் சார்ந்திருக்கிறோம்.

கேள்வி: சுதந்திரம் மற்றும் சோசலிசத்தை அடைவது என்ற இரண்டு முக்கிய குறிக்கோள்களுடன் 77 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிறுவப்பட்டது. இதுவரையிலான உங்கள் அரசியல் செயற்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குகள் நீண்ட காலத்திற்குரியனவாக இருக்கின்றன. சோசலிச மாற்றங்களைக் காண மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. அவர்கள் கருத்தாங்களையும் கோட்பாடுகளையும் மட்டுமே முன்னோடியாக வழங்கினார்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது சமூகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கானது. நூங்கள் சுதந்திரம் அடைந்தோம். முழு விடுதலைக்காக அழைப்பு விடுத்த ஒரேயொரு இயக்கம் இடதுசாரிகள் மட்டுமே. 1948 இல், எங்களுக்கு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் கிடைத்தன. நாங்கள்பின்னரே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதோடு பிரித்தானியா முடியாட்சிடமிருந்து எங்களை அப்புறப்படுத்தினோம். 1972 இல் எங்கள் நாட்டுச் சொந்தத் தலைவருடன் நாங்கள் குடியரசு ஆனோம்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணிகளில் சிலவற்றை நாங்கள் பூர்த்தி செய்தோம்.பின்னர, நாங்கள் சமூக வளர்ச்சியை அடைந்தோம். இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவைக்காக நாங்கள் போராடினோம். இடதுசாரிகள் அரசாங்கத்தில் நுழைந்த பின்னர், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்ää நிலச் சீர்திருத்தங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குதல் ஆகிய அனைத்து புரட்சிகரமான சீர்திருத்தங்களும் அமுல்படுத்தப்பட்டன.

நாங்கள் சோசலிசத்தை அடையாமல் விட்டிருக்கலாம், ஆனால் உலக அபிவிருத்தியின் பின்னணியில் இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும். 

(இந்தப் பேட்டி இலங்கையிலிருந்து வெளியாகும் ‘சண்டே ஒப்சேவர்’ (Sunday Observer ) பத்திரிகையில் 20.09.2020 அன்று வெளியானது) பேட்டி கண்டவர்: ஷ பேட்டி கண்டவர்: ஷ pரான் இலன்பெருமா (Shiran Illanperuma) தமிழில்: வானவில் 

Source: vaanavil 118 

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...