2020 ஆம் ஆண்டை முடக்கியுள்ள கோவிட் 19

  இந்த வருடத்தின் முதல் ஆறு மாதகாலமும் கோவிட்-19 , வைரஸ் காரணமாக முடங்கிக் கிடந்தது உலகம். மீண்டும் மெதுவாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறதென ஆறுதலடைந்து கொண்டிருக்கையில்ää மறுபடியும் உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொரோனா

வைரஸிற்கு இதுவரையில் 216 நாடுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் 11 இலட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் கடந்த இரண்டரை மாத காலத்தில் மட்டும் 21 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகவும் 4 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதாவது தொற்றின் அதிகரிப்பு வீதம் பன்மடங்கு அதிகரித்த வண்ணமுள்ளது.


அதேவேளையில்ää உலகில் இதுவரையில் 29 மில்லியன் பேர் கொரோனா நோயிலிருந்து குணமாகியுள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியே. எனினும்ää அனைத்துப் பரிசோதனைகளிலும் குணமடைந்து விட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் பலருக்கு. பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரங்களின்படி நாளொன்றுக்கு அண்ணளவாக 4 இலட்சம் பேருக்கு தொற்று இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படுவதாகவும்ää ஆறாயிரம் பேரளவில் மரணத்தைத் தழுவுவதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கையில் ஒப்பீட்டளவில் கொரோனாத் தொற்றின் தாக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டு வந்தது. அதற்குக் காரணம்,தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 இற்கான இலங்கை அரசின் எதிர்வினைக்கு தனது பாராட்டுதலையும் தெரவித்துள்ளது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பகுதியிலுள்ள தனியார்ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பதாகää ஒக்ரோபர் 3ந் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்துää கடந்த 10 நாட்களில்ää இரண்டாயிரம் பேர் வரையில் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது. இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 5200 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில் தொற்றுக்கு உள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தினைத் தாண்டியும், பலியாகியானவர்களின் எண்ணிக்கை 1.1 இலட்சத்திற்கு மேற்பட்டதாகவும் உள்ளன. தொற்றாளர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கைகளில் முறையே 82 இலட்சம்ää 2.2 இலட்சம் எனää உலகில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்திலும்ää இரண்டாமிடத்தில் இந்தியாவும் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முடக்க நடவடிக்கைகளினால்ää உலகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதாரம் 5.2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உள்நாட்டுத் தேவைää வழங்கல்,வர்த்தகம், நிதி என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால்,வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் சரிவடையும். 

எப்போது பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்று தெரியாமல் இருந்த நிலையில்ää கோவிட்-19 உலகின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற தொழில் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன. சந்தைப் பொருளாதாரம் பிரதானமாகிää அது உலகமயமாக்கப்பட்ட பின்ää இதுபோன்ற நெருக்கடிகள் சர்வசாதாரணமானவை என்றே முதலாளித்துவம் கருதுகிறது.

வழக்கமாக நெருக்கடி காலம் என்று வந்தாலே அதில் அரசியலும் சந்தையும் தனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கும். அதனால் அவை ஒருபோதும் நெருக்கடியால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. தொற்று நோய்களை முற்றாக ஒழிக்க முடியும்ää ஆனால் கோவிட்- 19 என்பது விரைவில்ää ஏதாவது காலவரையறுக்குள் ஒழிக்கப்பட முடியாது என்றே மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைரஸ் பரவலிற்கு எதிராக எப்படி செயற்படுவது என்பதற்கு முன்னதாக, நாங்கள் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியே சிந்திக்க வேண்டும். அதாவது மிகப்பாரியளவிலான தொற்று பரவுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் பலருக்கு தொற்று ஏற்படுவது என்பது விரைவான பரவலுக்கு இட்டுச்செல்லக் கூடியது என்பதே மிக மோசமாக நடக்கக் கூடியது. 

ஒரு மருத்துவர் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வைத்தியம் பார்க்க முடியும். ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நோயுற்றிருக்கும் போது ஒரே மருத்துவரால் அனைவருக்கும் வைத்தியம் பார்க்க முடியாது. சுகாதாரப் பராமரிப்பு முறையின் அளவுத்திறனுக்கு அதிகமாக நோயுற்றவர்களின் எண்ணிக்கை இருக்கும் போதுää பராமரிப்பு எதுவுமின்றி அதிமானோர் கைவிடப்படுவார்கள். இந்த நிலை உருவாகும் போது சிகிச்சையளிக்கப்படாமலேயே ஏராளாமானோர்

இறந்துவிடுவார்கள். மேலும் சுகாதார ஊழியர்களும் தொற்றுக்கு ஆளாகுவார்கள். கட்டாயமாக பராமரிப்பு தேவைப்படும் நேரத்தில்,சுகாதாரப் பராமரிப்பு முறையின் அளவுத்திறன் வீழ்ச்சியடைந்து,நோயாளிகள் பராமரிப்பின்றி இறக்க நேரிடும். இந்தமாதிரியான வேளைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமல்லää அனைத்து நோயாளிகளுக்குமான ஆபத்து, மிக அதிகமாக இருக்கும். புற்றுநோய் அல்லது இதய நோய்கள் போன்ற மரணத்திற்கான பொதுவான காரணங்களால் அவதியுறும் நோயாளிகளுக்கு வழக்கமாக கிடைக்கக்கூடிய சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுக முடியாமல் போகலாம். கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தில் மருத்துவரிடம் செல்லுவதை பலபேர் தள்ளிப்போடலாம். இதனால் தங்களின் நோயை உரிய நேரத்தில் கண்டறிவதை தவற விடுகிறார்கள்.

உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்றைய சூழலை திட்டமிட்டு எதிர்கொள்ளவில்லை எனில் எதிர்காலம் மோசமாவதை தடுக்க முடியாது. 

vaanavil : Journey 118.

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...