இன்று (14/06) எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்இன்று எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்
 கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.
 1951-இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் 'தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்' என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

1951-இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் ‘தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்’ என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.


 சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955-இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.

சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955-இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.


 பொலிவியக் காடுகளில் கொரில்லா போரில் சேகுவேராவுடன் இருந்த இண்டி பெரிடோ எழுதுகிறார். “மிகக் கடினமான ஒன்றைச் சுமந்துகொண்டு சே சென்று கொண்டிருந்தார். வழியில் வழுக்கி விழுந்து மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தார்” என்கிறார். என்ன நடப்பினும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெப்பம் மட்டும்தான் அவரிடம் இருந்தது என்கிறார்

பொலிவியக் காடுகளில் கொரில்லா போரில் சேகுவேராவுடன் இருந்த இண்டி பெரிடோ எழுதுகிறார். “மிகக் கடினமான ஒன்றைச் சுமந்துகொண்டு சே சென்று கொண்டிருந்தார். வழியில் வழுக்கி விழுந்து மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தார்” என்கிறார். என்ன நடப்பினும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெப்பம் மட்டும்தான் அவரிடம் இருந்தது என்கிறார்.


 தோழரே, பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினில் எந்தப் பகுதியில் இருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என எனக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்விகத்தை விட்டு வந்துவிட்டார்கள். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நானும் அப்படிக் கிளம்பமாட்டேன். நான் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். உலகில் அநீதி தலையெடுக்கும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயெனில் நான் இருவரும் தோழர்கள் - மரியோ ரோசாரியோ குவாரா என்பவருக்கு 1964-இல் சேகுவேரா எழுதிய கடிதத்தில் வார்த்தைகள்.

தோழரே, பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினில் எந்தப் பகுதியில் இருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என எனக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்விகத்தை விட்டு வந்துவிட்டார்கள். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நானும் அப்படிக் கிளம்பமாட்டேன். நான் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். உலகில் அநீதி தலையெடுக்கும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயெனில் நான் இருவரும் தோழர்கள் – மரியோ ரோசாரியோ குவாரா என்பவருக்கு 1964-இல் சேகுவேரா எழுதிய கடிதத்தில் வார்த்தைகள்.


 1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானதளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

1967 ஒக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா ஒக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானதளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு ஒக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.


சே குவேரா:

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...