முஸ்லிம்களின் காணியை பொது மயானக்காணியாக திரிபுபடுத்தும் வீரகேசரியின் இனவாத முகம்virakesariகடந்த 18. 03. 2014 அன்று பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் தமிழ் நபர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய மண்முனை பற்று பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த காணி உரிமையாளர் இந்த அநீதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் தடுத்ததை அடுத்து இந்த திட்டமிட்ட இன வன்முறை தூண்டல் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.


இதேவேளை இன்று (20.03.2014) வியாழக்கிழமை வெளியான வீரகேசரி நாளிதளில் “கோவில்குளம் பொதுமயான காணியில் பிரேதத்தை அடக்கம் செய்ய முயற்சித்த வேளையில் பதற்றம்” என்ற தலைப்பில் இந்த விடயம் காண கச்சிதமாக திரிபு படுத்தப்பட்டு புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக காத்தான்குடி இன்போ காணி உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் குறித்த காணி தன்னுடைய சொந்த காணி என்றும் அது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் வீரகேசரியின் இந்த திரிபுபடுத்தல்  தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

உண்மை இவ்வாறு இருக்க இலங்கையில் நீண்ட கால வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு தேசிய நாளிதழ் இவ்வாறு சிறுமைத்தனமான இனவாத நோக்குடன் செயற்படுவது மிகவும் வேதனைக்குரியதாக மக்கள் நோக்குகின்றனர்.
அண்மைக்காலமாக இந்த நாளிதழ் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் செய்திகள் தொடர்பிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகள் தொடர்பிலும் இருட்டடிப்பு கொள்கையை பின்பற்றி வருவதாக அவதானிக்கப் படுகின்றது.

தமிழ் மக்கள் மட்டுமன்ரி கணிசமான முஸ்லிம் வாசகர் வட்டத்தையும் கொண்ட இந்த தேசிய பத்திரிகை நடத்துனர்கள் தமது சொந்த இனவாத முகங்களை ஊடகப்பணியில் பிரதிபலிக்காது அடிப்படை ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள், வீரகேசரியின் முஸ்லிம் நிருவர்கள், மற்றும் சமூக நலன் விரும்பிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

By courtesy : Kattankudi Web Community (KWC) on 20/03/2014

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...