கூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது! இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர,
(கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியானடெயிலி  டெயிலி மிரர் பத்திரிகைக்கு   இலங்கை கம்யூனிஸ்ட்  கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர அண்மையில் வழங்கிய பேட்டியின் முக்கியமான  பகுதிகளை எமது வாசகர்களுக்காக கீழே
தந்திருக்கிறோம் : வானவில் )

Image result for d e w gunasekera
கேள்வி  : அமெரிக்கா மற்றும் ஆகிய இரு பெரும் பொருளாதார சக்திகளுக்கடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக யுத்தம் (வுசயனந றுயச)
இலங்கை போன் சிறிய நாடுகளை எவ்வாறு பாதிக்கும்?

பதில் ;: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு திடீரென்று மேலதிக வரிகளை விதித்த பின்ன  வர்த்தக யுத்தம் பற்றிய பயம் அதிகரித்துள்ளது.சீனாவின ; பதிலடி நடவடிக்கைக்கான அறிகுறிகள்  ஏற்கெனவே தெரிகின்றன. எம்முடனான இருதரப்பு சுதந்திர வர்த்தகம் பாதிக்கப்படலாம் என யப்பான  எச்சரித்துள்ளது. ஒரு பல்தரப்பு கட்டமைப்பை அவர்கள் 
சிபார்சு செய்துள்ளனர்  ;. உலகளாவிய உலக ஒழுங்கமைப்பின்  கீழ் பாதுகாப்புத் தன்மையோ அல்லது நேரான தன்மையோ இலேசாக செயற்படாது என்பதுடன் , அது சரிவை நோக்கிப் பயனின்றிச் செல்லும்.
றம்ப்பின்  இலக்கு சீனாவாக இருந்தால், அவர்  கவலைப்படும் விதத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் .

உலகளாவிய ரீதியில் நடைபெறும் மாற்றங்களின்  யதாரர்த்தத்தைப் பார்க்க அவர  தவறியுள்ளார் ;. அதற்கு முதல் அவர் ; தடையை எதிர் நோக்க நேரிடலாம். அவர் ; இப்பொழுது வர்த்தக யுத்தத்துக்கு பதிலாக
ஆபத்தை உணராமல் ஏவுகணை யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்  ;.


கேள்வி  : இங்கிலாந்து, கனடா,  அமெரிக்கா போன் இலங்கையின் மேற்குலக நண்பர்கள் ; (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ;) இலங்கையை ஒரு
மூலைக்குள் ; தள்ளி, .நா. மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய  தீர்மானங்களை நிறைவேற்றும்படி உலக அரங்கில் நிர்ப்பந்திப்பது ஒரு வழமையாக இருக்கின்றது. இந்தத் தீர்மானம் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டநம்பகமான உளள்நாட்டு விசாரணையை உள்ளளடக்கியுள்ளது.  இலங்கை தனது நாட்டின்  அடிப்படைச் சட்டத்தை மீறி இதனைச் செய்ய முடியுமா?

பதில் ;: இந்த முழு விடயம் பற்றியும் நான் முற்றறிலும் வித்தியாசமான பார்வையைக் கொண்டுள்ளேன் ;. 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததின்  ; பின்னான கடைசி சில நாட்களில் நான ; வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினேன் ;. மே 23ஆம் திகதி நள்ளிரவு அப்போதைய .நா. செயலாளர் நாயக ம் பான்  கி -
மூன் ; அவர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கப் போனேன் ;. அப்பொழுது நான் ; எமது மேதற்குலக நண்பர்கள்  ; அனைவரும் எங்கு நிற்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொண்டேன ;.இந்த மனோபாவம் .நா. மனித உரிமைப் பேரவையில் இருப்பதையிட்டு நான்  ஆச்சரியப்படவில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள்  மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ;(LLRC ) அறிக்கையை நாம் நேர்மையான முறையில் துரிதமாகவும் வலுவான முறையிலும் நடைமுறைப்படுத்தி இருப்போமேயானால், நாம் தாக்குதல் (ழககநளெiஎந) நிலையில் இருந்திருப்போம். அங்கேயும் நாம்
தவறியதால், எமது தவறுகளையும், பலவீனங்களையும் எமது மேற்குலக நண்பரர்கள் பயன்படுத்த இடமளித்துவிட்டோம். நாம் நிச்சயமாக நமது சட்டங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

எமது பிரச்சினைகளுக்கு ஒரு இறுதித் தீர ;வை நாமாகவே காண வேண்டும். உலக அபிப்பிராயம் எமக்குச் சாதகமாகவே உள்ளளது. நாம் சரியான பாதையில் செயல்பட்டோமேயானால், இந்தியா, ரஸ்யா, சீனா மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை கூட எமக்கு ஆதரவாகவே இருப்பார்கள்  ;. மேற்கத்தைய சக்திகள்  ; தமது உலகளாவிய மூலோபாயத் திட்டங்களுக்கோ, அரசியல் நலன்களுக்கோ எமது தவறுகளைப்
பயன்படுத்த இடமளிக்கக்கூடாது. உலகப் பொருளாதாரம் நிச்சயமற்றதும் குழப்பங்களும் நிறைந்ததாகவுள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். அதனடிப்படையிலான எனது எண்ணப்படி, நாம்  நிச்சயமாக உலக ஒழுங்கினதும், உலக சக்திச் சமநிலையினதும் யதார் த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். 80 பில்லியனடொலர்கள் ; பொருளாதாரத்தைக் கொண்ட நாம், வேகமாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரத்தின் யதாரர்தத்தை இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தகைய உலக அரசியல் சூழ்நிலைகளில், நாம் இந்தியா, சீனா என்பன பற்றி ஒரு சமாந்தரமான கொள்கையை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் இந்திய எதிர்ப்பு, சீனஎதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தோமானால் எமக்கு எதிர்காலம் இல்லை. நாம் மேற்கத்தைய சக்திகளின ; சதி மற்றும் தந்திரங்களுக்குள் சிக்கிவிடக்கூடாது. உள் நாட்டைப் பொறுத்தவரையில், நாம் எமது சொந்த இயற்கை மற்றும் மனித வளங்களைச் சார்ந்திருக்காவிட்டால் எமக்கு விமோசனமில்லை.

எப்படியிருந்தபோதிலும், நமது இயற்கை வளங்கள்   வரையறைக்குட்பட்டவை. இன்றைய கணிப்பொறிக் காலத்தில் நாம் எமது மனித வளத்தை அறிவு, தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் என்பனவற்றால் நிச்சயமாக ஆற்றல்படுத்த  வேண்டும். அடுத்த தசாப்ததில் ஆசிய பொருளாதாரம் மற்றெல்லா பொருளாதாரத்தையும் விட வெகுதூரம் முனன்னேறி விடும். இதில் தீர்க்கமான பங்கை வகிக்கப் போவது சீனப் பொருளாதாரமே. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் இந்தியப் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருவதுடன் ;, அதை நிலைநிறுத்துவதற்கு சீனாவுடனபல்துறை கட்டமைப்பிலும் இணைந்துள்ளது. இலங்கை இவற்றின் பார்வை முறைகள ;, தந்திரோபாயம்,
பிரயோகிக்கப்படும் கொள்கைகள் என்பன பற்றி சிந்திக்க வேண்டும்.

கேள்வி  : தொடர்ந்து சச்சரவுப்பட்டு  பிளவுபட்டு நிற்கும் ஒரு தொகுதி அரசியல்வாதிகளைக் கொண்டு புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. ‘நல்லாட்சி அரசாங்கம்என்று கூறப்படும் இது சந்தோசத்துடன் 
முன்னோக்கிச் செல்லும் என நம்புகிறீர்களா?

பதில்  ;: புதிய அமைச்சரவை எப்பொழுது பதவியேற்கும் என யாருக்கும் தெரியாது. அது நடந்தாலும் கூட நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி அரசு சந்தோசமாக
முன்னேறிச் செல்லும் என நான் ;எதிர்பார்க்கவில்லை. அவர்களது முரண்பாடுகள்  ; குழப்பங்கள் ; காரணமாக அரசாங்கம் நம்பிக்கை இழக்கும் சூழலே உள்ளது. இது ஒரு தேசிய மற்றும் கூட்டு அரசாங்கம். ரணிலுக்கு மட்டுமே இதன ; பார்வை, முன்னுரிமை, தந்திரோபாயம், கொள்கைகள் பற்றித் தெரியும். இதுதான்  நாட்டின ; இரு பிரதான கட்சிகளான .தே.. –சிறீ..சு.. தலைமையிலான முதலாவது பர Pட்சார ;த்த அரசாங்கமாகும். இரண்டு பிரதான கட்சிகளும் இன்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாட்டை நிர்வகிக்கும் திறனற்று
இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களில் அவர்கள்  தமது தேசிய முன்னுரிமைகளை இனம் காணுவதில் தோல்வி கண்டுள்ளனர். நாடு கடன்  ; நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? 100 நாள ;வேலைத்திட்டத்தின ; சரியாக 50ஆவது நாள ; மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமான மோசடி நிகழ்ந்துள்ளது. அதற்குப் பிறகு மூன்று நீண்ட வருடங்களாக பிரதம மந்திரி குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக தனது சக்தியைச் செலவிட்டு
வந்திருக்கிறார்  ;. இரண்டு நாடாளுமன்ற கோப் (COPE) அறிக்கைகள்  ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை என்பனவற்றின ; மத்தியில் அவர் தொடர்ந்து மௌனமாக இருந்திருக்கிறார்  ;. நல்லாட்சி
அரசாங்கத்தின் உணர்வு அதன்  50ஆவது நாளே தூர வீசப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடியை மையமாக வைத்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதுகூட பிரதமர்  மௌனமாகவே
இருந்தார் . திரும்பிப் பார்க்கும் போது அரசியல் அமைப்பில் 19ஆவது திருத்தம் இல்லை என்றே நான்  ; உணருகின்றேன்  ;.

கேள்வி  : .தே.கவினதும் சிறீ..சு.கவினதும் கொள்கைகள ; முற்றிலும் வித்தியாசமானவையாக இருப்பதுடன ;, பெரும்பாலும் எல்லா விடயங ;களிலும் முரண்பாடானவையாகவும் இருக்கின்றன. நீங்கள்  நினைக்கிறீர்களா இந்த இரண்டு கட்சிகளும் 2020 வரை கூட்டு அரசாங்கத்தில் நீடித்திருக்கும் என்று?

பதில் ;: ஏற்கெனவே மூன்று வருடங்கள ; கடந்துவிட்டன. அவர்கள் பொருளாதார முகாமைத்துவத்தில் மோசமாகத்
தோல்வி கண்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அடுத்த ஒன்றரை வருடங்களில் அற்புதங்கள் எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை. அவர்கள்  தமது குறிக்கோள்களை விட வேற்றுமைகள் காரணமாகவே தோல்வி கண்டுள்ளனர் என நான் நினைக்கிறேன்;.

கேள்வி  : சிறீ..சு.கட்சி மேலும் பிளவடைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு சுபீட்சம், மகிழ்ச்சி மற்றும் சமூக முன ;னேற்றம் என்பனவற்றைக் கொண்டு வரும் நோக்கத்துக்காக காலஞ்சென் எஸ்.டபிள ;யு.ஆர்  ;.டி.
பண்டாரநாயக்க அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சியின ;எதிர்காலம் எப்படி அமையப் போகினன்றது?

பதில்  ;: தூரதிஸ்டவசமாக சிறீ..சு.கட்சி  ;தொடர்ச்சியான உள் சச்சரவுகளாலும், பிளவுகளாலும், கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஏகாதிபத்தியஎதிர்ப்பு ஜனநாயகப் போராட்டத்தில் சிறீ..சு.கட்சி
ஒரு வரலாற்றுர ரீதியிலான பங்களிப்பை வழங்கியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாம், சிறீ..சு.கட்சி உருவான 1950களின் காலகட்டத்திலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்தவும், முழுமைப்படுத்தவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பரந்த முன்னணியின் அவசியம் பற்றி உணர்ந்து வந்திருக்கிறோம். இன்று நாம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் புதிய சவால்களை எதிர் நோக்கியுள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நாம் முன ;னோக்கி நகர வேண்டும்சிறீ..சு.கட்சி தற்போதைய சூழ்நிலையில் தனது கடமைகளையும் பாத்திரத்தையும் விளங்கிக் கொள்ளாது
இருக்கின்றது. நான் ; நினைக்கிறேன்  அதன் தற்போதைய ஸ்தம்பித நிலைக்கு நவதாராளவாதத்தால் கொண்டு வரப்பட்ட அரசியல் கலாச்சாரமே காரணமாகும்.

மூலம் : வானவில் -மே 2008

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...