"தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்" - 21/06/14




 "தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்" -  21/06/14

"பிரபாகரன் இறந்து நாளாகிவிட்டது ; அவரின் மனசற்ற வன்முறைகள் கடந்த கால சங்கதி. ஆனால் ஞாயிற்றுக் கிழமை வன்முறைகளைக் பார்க்கின்ற பொழுது நாடு இன்னமும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடவில்லை.அளுத்கமயிலும்  வேருவளையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிந்த கையோடு ஒரு பௌத்த பிக்குவின் மீது மிருகத்தனமான தாக்குதல் - பாதிக்கப்பட்ட வரின் படி இந்தத் தாக்குதல் பௌத்தர்கள் அல்லாதவர்களால் ,  ஆனால் பௌத்த துறவியின் மஞ்சள் அங்கி அணிந்த குழுவொன்றினால்- நடத்தப்பட்டிருக்கிறது.


வியாழக் கிழமை அதிகாலை நேரத்தில் வண. வாட்டாறகே விஜித தேரர் கடத்தப்பட்டிருக்கிறார்;.தாக்கப்பட்டிருக்கிறார்; வீதி ஒன்றிலே  வீசப்பட்டிருக்கிறார். தாக்குதலுக்கு முன்னரே அவர் கலந்து கொண்டிருந்த பல் மத நிகழ்ச்சி ஒன்றினைக்  பொது பல சேனா குழப்பியதுடன் அவரைப் பயமுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து அவர் தனது உயிருக்கு ஆபத்து  உண்டென்று ஒரு முறைப்பாட்டினை போலீசில் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து  அவர் பொதுவிடத்தில் வன்முறையுடன் நடத்தப்பட்டார் . அவரை பாதுகாக்க ஒதுக்கப்பட்ட இரண்டு போலிஸ் காவலர்கள் வியாழக் கிழமை தாக்குதலுக்கு சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் மீளப் பெறப்பட்டுள்ளனர். 

முரண்நகையாக , கைது செய்யப்பட்டுதடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பௌத்த பிக்கு ஒருவர் மீது  தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதே , ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு  தூண்டுதலாகும்.அந்த தாக்குதலுக் கெதிராக பொது பல சேனாவினால் நடத்தப்பட்ட  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

ஆனால் விஜித தேரர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் மீது புத்த மதத்தின் தற்காப்பாளர்கள் என்று சுய நியமனம் செய்து கொண்ட புத்த பல சேனாவினர் வாய் திறக்கவில்லை, ஏன் ?    

தங்களைத் தாங்களே சிங்கள பௌத்த சார்பு நலன்களுக்காக போராடும் வீர்கள் என்று உரிமை பாராட்டுகின்ற இன வன்முறைகளில் விருப்பம் கொண்ட பயித்தியக்காரர்கள் , அவர்களின் இன மத தீவிரவாதத்தை எதிர்க்கும் கருத்துவேறுபாடு கொண்ட பிக்குகளுக்கு தீங்கிழைக்கும் விசேட உரிமத்தை கொண்டிருக்கிறார்களா?.

விஜித தேரர் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் மஹியங்கன பிரதேச சபை உறுப்பினர். , ஆனால் ஆச்சரியமாக அவரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட அரசின் பிரபலஸ்தர்கள் யாரும் அக்கறை காட்டவில்லை.

விஜித தேரருக் கெதிரான வன்முறையின நியாயப்படுத்தும் வகையில் அவருக்கு மாசு கற்பிக்கும் முயற்சிகள் சில இடங்களில் செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் அவரின் அரசியல் சித்தாந்தத்துடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் பெரிதாயினும் , சிறிதாயினும் எல்லா சமூகங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உண்டு என்பதில் அவருடன் உடன்படுவார்.

அவருக்கு தீங்கிளைத்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அமைச்சரகத்துள் ஒரு பிக்கு குழுவினர்  புகுந்து அவரைத் தேடினர் , அந்த அத்துமீறி நுழைந்தவர்களை பொலிசார் விசாரணை செய்தால் வியாழக்கிழமைச்  சம்பவத்துடனான துப்பினக் பெறக் கூடியதாக இருக்கலாம்

குருநாகலையில் இரண்டு போக்குவரத்து போலீசாரைக் கடத்திச் சென்றதில் ஒரு போலீஸ்காரர்  சுடப்பட்டு அண்மையில் இறந்ததும் , அக் குற்றக் கும்பலின்  தலைவனை நேரம் தாழ்த்தாது பொலிசார் கண்டு பிடித்தனர், சந்தேக நபர் பொலிசாரின் பாதுகாப்பில் இறந்து போனார். பொலிசார்  வியாழக்கிழமை தாக்குதலுக்கு பொறுப்பானவர்களையும் அதே வேகத்துடன் கைது செய்யக்  கூடியதாக இருக்க வேண்டும் .

தனக்குத்தானே தேசாபிமானி பெயர் சூட்டிக் கொண்ட முஸ்லிம்கள் மீதான ஞாயிறு வன்முறைகளுக்கு பொறுப்பான சிலர்  முன்பு முஸ்லிம் கிராமங்களின் மீதும் பள்ளிகளின் மீதும் புலிகள் கொடுமையான தாக்குதல்களை நடத்தியதற்காக , பிரபாகரனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நியாயப்படுத்தியவர்கள், அந்த துரதிஷ்டமான பலியாட்களுக்காக கண்ணீர் வடித்தவர்கள்.

இன்று இலங்கையின் தெற்குப் பகுதிகளில் , சாமாதான காலத்தில் வடக்கு கிழக்கில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதைச் செய்தார்களோ அதையே இப்பொழுது அவர்கள் செய்கிறார்கள்

பிரபாகரன் இருந்த பொழுது "எல்லைப்புற கிராமங்கள் " என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழ்ந்த தங்களின் சகோதரர்களைப்  போல் அலுத்கமவிலும் , வேருவளையிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும்  முஸ்லிம்களும் பாதுகாப்பின்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.. 

முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு முன்னாள் பொது பல சேனா ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்த பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கலாம். , ஆனால் பொலிசார் வேறு விதத்தில் அதை நோக்கினர். கலகக்கும்பல்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தும் படிமுறை மாற்றம் பெற்றுள்ளது.  இன்னமும் , பொலிசார் அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு  கொண்டுவர அதிகம் செய்யவில்லை.  குற்றவாளிகளுடன் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து  தீர்வு கண்டுகொள்கின்றவாறு  பலியாட்கள் ஆக்கப்பட்டனர். இப்பொழுது , இந்த வெறியர்கள் உயிர்களை அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அளுத்கம /வேருவளை வன்முறைகளுக்கும் விஜித தேரர் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பான மனச் சிதைவுற்றோரின் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு இந்த தருணத்தில் கட்டளை இட்டிருக்கிறது.  குற்றம் புரிவோர் வீராப்பு பேசும் எந்த வித எதுக்களையும் பொருட்படுத்தாதுஎல்லா விதமான பயங்கரவாதத்தில் இருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும். அதுவே இன , மத அல்லது வேறு வகையிலும் சகல சமூகங்களின் உறுப்பினர்களும்சம பிரஜையாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும்  வாழ முடியக் கூடியதாக இருக்கும்."

(தி ஐலண்ட் ஆசிரியர் தலையங்கம் 21/06/14 )


தமிழாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...