பீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)


கேள்வி: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் செயல்படுவதாகவும், ஒருவர் சுப்பிரமணியசாமி, மற்றவர் பீ.ஜைனுல் ஆபிதீன் எனவும் இவ்விருவரும் தமிழினத் துரோகிகள் எனவும் இருவரின் படங்களுடன் ஒரு செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பர்வீன், துபை




சுப்பிரமணியசாமி கடைந்தெடுத்த கழிசடை என்ற கருத்து நாட்டு மக்களிடம் பரவலாக இருப்பதால், அவருடன் என்னை ஒப்பிட்டுக் காட்டி அவருடன் சேர்த்துவிடலாம் என்று கருதி இவ்வாறு பரப்புகின்றனர்.

இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.

சுப்ரமணியசாமி ராஜபக்சேயை ஆதரிக்கிறார் என்றால் இருவருக்கும் நெருக்கமான உறவு உண்டு. ராஜபக்சேயை சந்தித்து அளவளாவும் அளவிற்கு அந்த நெருக்கம் அமைந்துள்ளது. ராஜபக்சேயின் ஆதரவு மூலம் சுப்பிரமணியசாமிக்கு பல ஆதாயங்கள் கிடைக்கலாம். தனது உண்மையான எஜமானன் அமெரிக்காவே ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் நிலையிலும் அவர் ராஜபக்சேவிற்கு ஆதராவாக இருக்கிறார். அந்த அளவிற்கு ஏதோ ஆதாயம் இருக்கலாம்.

ஆனால் நான் ராஜபக்சேயை சந்தித்ததுமில்லை. அவரது ஆதரவாளனும் இல்லை. சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் இலங்கை அரசை நான் எதிர்ப்பதற்குத்தான் காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் இருந்து எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். அவர்களில் யாருடைய விசாவும் கேன்சல் செய்யப்பட்டு அனுப்பப்படவில்லை. ஆனால் நான் இலங்கை சென்றபோது, எனக்கு அளிக்கப்பட்ட விசாவை ரத்து செய்து, இரவோடு இரவாக இந்தியாவிற்கு என்னை அனுப்பி வைத்தனர். இதற்குப் பழிவாங்குவதற்காக இலங்கை அரசுக்கு எதிராகத்தான் நான் நடக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் நான் எடுத்திருக்கவேண்டும்.

அந்த அளவிற்கு இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு இருந்தும் புலிகளை நான் ஆதரிக்க முடியாததற்குக் காரணம் அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள்தான்.

***எனக்கு இலங்கை அரசு செய்த அநியாயத்தைவிட, பிரபாகரன் என்னுடைய சமுதாயத்திற்கு அதிகமான அநியாயம் செய்தவர் என்ற காரணத்துக்காகவே, புலிகளை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன்.

***சுப்பிரமணியசாமி தனது நண்பருக்கு ஆதரவாகக் கருத்து சொல்கிறார்.

***நான் எனது சமுதாயத்திற்கு புலிகள் செய்த கொடுமைகளையும், படுகொலைகளையும் மறக்கமுடியாமல் எதிர்த்து குரல் கொடுக்கிறேன்.

***புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்? என்றும் நமக்கு புரியவில்லை.

விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தபோது, எழுத்தாளர்கள் என்ற பெயரில் சிலர் அப்படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டு சங்பரிவாரத்தினரும் குரல் கொடுத்தனர். இவர்கள் இருவரும் ஒன்று என நாம் சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

சங்பரிவாரத்தினர் கருத்துச் சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தில் இதில் தலையிடவில்லை. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தும் படம் என்பதால், மூக்கை நுழைத்தார்கள். இந்துத்துவாவுக்கு எதிரானதாக உள்ளது என்று அப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால், அப்போது இவர்கள் கருத்து சுதந்திரம் என்று பேச மாட்டார்கள். இதுபோன்ற வித்தியாசம்தான் எனக்கும் சுப்பிரமணியசாமிக்கும் இடையே உள்ளது.

எவ்வளவு பெரிய தீயவர்களும் சில நேரங்களில் சில பிரச்சினைகளில் நல்லவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். அதனால் இருவரையும் சமமாக அறிவுள்ள மக்கள் கருதமாட்டார்கள்.

பிரபாகரனின் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டியடித்தாலும், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறித்துக் கொண்டாலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பல ஊர்களில் தொழுது கொண்டிருந்தவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தாலும், முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் தலைமையும் தங்கள் வசம்தான் இருக்கவேண்டும் என்று கூறி இந்து தமிழர்களுக்கு உள்ள அதிகாரம் முஸ்லிம் தமிழர்களுக்கு இல்லை என புலிகள் மறுத்தாலும், அவைகளை பெரிதுபடுத்தக்கூடாது என்று இங்குள்ளவர்கள் கூறுவதுதான் சுப்பிரமணியசாமியின் கொள்கைக்கு ஒப்பானது என்பதுதான் எனது பதில்.

http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/rajabakshevirku-atharava/

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல் குறித்து அறிய:

http://www.onlinepj.com/unarvuweekly/viduthalai-puligal-atharavalargalukku-araikuval/



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...