முஸ்லிம்களைத் தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொதுக்கட்டமைப்பு !-முஸ்லிம் குரல்


முஸ்லிம்களைத்  தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொதுக்கட்டமைப்பு !

எஸ்.எம்.எம்.பசீர்

பதவிகளைத் தூக்கியெறிவோம் என்று சவால்விட்ட முஸ்லிம் அரசுக் கூட்டாளிகள் தங்களது உண்மையான முகத்தினக் காட்டியுள்ளார்கள். இவர்கள் சொல்வது போல் உடன்படிக்கையில் மாற்றங்களை  செய்ய வேண்டுமானால் ஜனாதிபதி  புலிகளுடனும்  நோர்வேத் தரப்புடனும் ஆலோசிக்க வேண்டியிருக்கும் .! இது நடைபெறாத ஒரு காரியமாகும் , சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை இதுதான்.! ஆகவே முஸ்லிம்களின் தலைவிதியை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிங்கள அரசியல் அரசுத் தலைமைகளும் நோர்வேயும் புலிகளும் சாதகமாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் 
முதலில் கைவிட வேண்டும். ! முஸ்லிகளின் தலைவிதியை முஸ்லிம்களே எழுத வேண்டும்.எவர் எதிர்த்தாலும்  நிறைவேற்றியே தீருவேன் என ஜனாதிபதி சந்திரிக்கா சூளுரைப்பது குறித்து முஸ்லிம்கள்   பிரக்ஞை கொண்டுள்ளனரா ? முஸ்லிம்கள் சந்திரிக்காவிற்கும் புலிகளுக்கும் பயந்து பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

முஸ்லிம்களுக்கு அனைத்து அநீதிகளையும்  செய்து விட்டு, வடக்கிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து கிழக்கில் பள்ளிவாசல் தொடக்கம் படுக்கையில் வைத்து முஸ்லிம்களைக் கொன்றழித்த புலிகள் இன்று முஸ்லிம்களை "சகோதரர்கள்" என்று மாய்மாலம் காட்டினால்  , எல்லாம் சரியாகிவிடுமா  ?

புலித்தலைமையின் பிராந்திய அதிகாரத்தை முஸ்லிம்கள் எப்படி ஏற்றுக் கொள்வது ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான சம்பந்தன்,  ரவிராஜ் போன்றவர்களின் ஏமாற்று வார்த்தைகளுக்கு அண்மைக்காலமாக சான்றிதழ் வழங்கும் ஹக்கீம் போன்ற பிற்போக்குத்தனமான முஸ்லிம் தலைமைகள் -ஏன் இப் பொதுக்கட்டமைப்பை எதிர்த்து முஸ்லிம் மக்களைத் திரட்டி போராட முன்வரவில்லை?

முஸ்லிம்களுக்கு முதலாவது சுனாமி 1990ல் வடக்கிலிருந்து முஸ்லிம்களை  வெளியேற்றியதும்  கிழக்கில் நூற்றுக்கணக்கானோரை புலிகள் படுகொலை செய்ததுமாகும்.இந்த முதலாவது சுனாமியைச் சந்தித்த முஸ்லிம்களுக்கு இயற்கைச் சுனாமி இரண்டாவது சுனாமிதான் ..இந்தப் பொதுக்கட்டமைப்பு   பாரிய மூன்றாவது சுனாமியாகும். இதன் பாரதூரம் போகப்போகத்தான் முஸ்லிம் மக்களால் புரிந்து கொள்ளப்படும்.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் , ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இந்தப் பொதுக்கட்டமைப்பு  உடன்பாடு கவனத்தில் கொள்ளவில்லை. .இனப்பிரச்சினைத் தீர்வில் சமபங்காளிகள் தனித்துவமான தேசிய இனம் , சுய நிர்ணய உரிமைகள் கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்கிற சகல உரிமைகளும் புலிகளிடம்  அடகு வைக்கப்பட்டுள்ளது.

நன்றி:  முஸ்லிம் குரல் -02 (ஸ்ரீ லங்கா ) 05 ஜூலை 2005 சுவடு 63No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...