குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்
 சையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.


சையட் பசீர் :: திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச் சிந்தனைமுறையே தவறானது

பின்னூட்டம் :---

Lamba on August 20, 2009 7:57 am
 1. இந்த கூட்டத்திற்கு நானும் வந்திருந்தேன் இக்கூட்டததிற்கு வருகைநந்திருந்த பசீர் பல தடவைகள் முஸ்லீம் பிரச்சினைகள் பற்றி, முஸ்லீம்கள் ஒரு தனி இனம் அவர்களை தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்க கூடாது என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது. பசீரிடம் ஒரு கேள்வி முஸ்லீம்கள் தனி இனம் என்றால் நீங்களும் தனியாக தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஏன் ஆரம்பிக்கவில்லை அலலத இனிமேல் ஆரம்பிக் உள்ளீர்களா? அப்படியாயின் தமிழர்கள் கூட்டத்தில் வந்து இப்படியான பேச்க்களை முன்வைக்கிறீர்கள் நீங்கள் ஒரு இனமாக கூட்டத்தை கூடி கட்சியை கூடி அங்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று பேச முடியமா? தமிழர்கள் கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உரிமை உள்ளது என்று பேசுவது போன்று எங்காவது முஸ்லீம்கள் தமது தனியான முஸ்லீம் இனக் கூட்டத்தில் பேசிய வரலாறு உண்டா?
  இவை எதை எடுத்துக்காட்டுகிறது என்றால் தமிழ்பேசும் இனம் அதில் முஸ்லீம்கள் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றே கருதுகிறேன். இதேபோன்ற கருத்து ஒற்றுமையுடன் பல முஸ்லீம் நண்பர்கள் தோழர்கள் உள்ளனர்.
  கூட்டத்தில் கருத்து வைத்த நிஸ்தார் மற்றும் மொகமட் போன்றோருடன் நான் சரியாகவே உடன்படுகிறேன் சோனகர் என்ற நிலைப்பாட்டுடன் அவர்களது அந்த நிலைப்பாடே எமது தென்னிந்திய நிலைப்பாட்டுக்கு சரியானது.

 2. அஜீவன் on August 20, 2009 9:20 am
  //தமிழர்கள் கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உரிமை உள்ளது என்று பேசுவது போன்று எங்காவது முஸ்லீம்கள் தமது தனியான முஸ்லீம் இனக் கூட்டத்தில் பேசிய வரலாறு உண்டா?//
  இலங்கை – இந்திய இஸ்லாமியர் குறித்த கருத்துகள் கொண்ட ஒரு சம்பாஷனையில் பஷீருடன் இந்திய தமிழர் ஆரூர் புதியவன் விவாதம். பஷீர் தமிழ் தமக்கு மொழி ஊடகம் என்கிறார். ஆரூர் புதியவன் (ஹாஜா கனி) தமிழ்தான் தனது தாய் மொழி என்று விவாதத்தை தொடர்கிறார்….
  கேட்க:
  http://www.zshare.net/audio/61079830de7fae8d/
  http://www.radio.ajeevan.com/


   Jeyabalan T on August 20, 2009 8:20 pm
  //இக்கூட்டததிற்கு வருகைநந்திருந்த பசீர் பல தடவைகள் முஸ்லீம் பிரச்சினைகள் பற்றி முஸ்லீம்கள் ஒரு தனி இனம் அவர்களை தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்க கூடாது என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது.// லம்பா
  அப்படிப் பேசுவதில் என்ன தவறு உள்ளது. அது அவருடைய கருத்து. அக்கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தின் கீழ் முஸ்லீம்களையும் அடக்கி அவர்களது தனித்துவத்தை சிதைத்துவிட முடியாது. தமிழ் பேசுவதால் தமிழ் பேசும் மக்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் அவர்களுடைய அடையாளம் என்று வரும்போது சோனகர் என்றோ முஸ்லீம்கள் என்றோ அடையாளப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.
  //பசீரிடம் ஒரு கேள்வி முஸ்லீம்கள் தனி இனம் என்றால் நீங்களும் தனியாக தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஏன் ஆரம்பிக்கவில்லை அலலத இனிமேல் ஆரம்பிக் உள்ளீர்களா? // லம்பா
  இந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன என எனக்கு விளங்கவில்லை. தமிழர்கள் போல் இலங்கை அரசாங்கத்துடன் போராடி முள்ளிவாய்க்காலில் 20000 பேரை பணயம் வைத்தால் தான் தனியான இனம் என்று சான்றிதழ் கொடுக்கின்ற உரிமையை லம்பா எங்கிருந்து பெற்றீர்கள்?
  //அப்படியாயின் தமிழர்கள் கூட்டத்தில் வந்து இப்படியான பேச்க்களை முன்வைக்கிறீர்கள் // லம்பா
  ஜனநாயகச் சூழலில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர் அக்கூட்டத்தில் வந்து தனது கருத்தை சுதந்திரமாகச் சொல்வதில் என்ன தவறு. தமிழர் கூட்டத்தில் வந்து அல்லது தேசத்தின் கூட்டத்தில் வந்து இந்த வரையறைக்குள் தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லையே. அப்படி வரையறையை நிர்ணயிப்பது எவ்வாறு ஜனநாயகப் பண்பாகும்.
  பசீருடைய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் நேரடியாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்காக பசீர் தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை.
  முடிந்தால் பசீரை கருத்து ரீதியில் சந்தியுங்கள். உங்களுடைய கருத்தை வையுங்கள்.
  த ஜெயபாலன்.

  ---------------
  நன்றி: 

  தேசம் இணையத்தளம் 


No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...