தமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!


போரில் நேரடியாக ஈடுபட்டவர்களை விட போரைத் தூண்டிய வர்களே தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 21 வைத்திய சேவையாளர்கள் உள்ளிட்ட 68 அப்பாவி உயிர்களின் 31 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது வைத்தியசாலைப் பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே கொல்லப்பட்டது துரதிஷ்;டவசமானது. போர் நடைபெறும் பிரதேசங்களில் பெண்கள் பொதுமக்கள் குழந்தைகள் மருத்துவ நிலையங்கள் மீதும் தாக்கக்கூடாது என்பது சர்வதேச கொள்கை.

இந்த நிலையில் போர் காலத்தில் வடபகுதியில் இயங்கிவந்த இந்த வைத்தியசாலை வளாகத்தில் 21 மருத்துவ உத்தியோகத்தர்கள் உட்பட நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறவினர்கள் கொல்லப்பட்ட விதம் கொடூரமானது.


இந்தப் படுகொலைச் சம்பவம் 2 நாட்களாக நீடித்தது. காயப்பட்டவர்கள் 48 மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் இருந்தார்கள். அனைத்து உடலங்களும் இதே வளாகத்தில் எரியூட்டப்பட்டன. எம் அனைவருக்கும் இது மிகவும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிலையங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். போர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் தமது உயிரை காத்துக்கொள்ள முனைவார்கள். ஆகவே அங்கு கொலை மலிந்து காணப்படும்.

போரில் நேரடியாக ஈடுபடுகிறவர்களை விட போரை தூண்டுபவர்களே இதன் பொறுப்பாளிகள். பெரிய அசம்பாவிதங்களுக்கு காரணமாக அதை தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும்.

போர் தவிர்க்கப்பட வேண்டும். எமக்கு சமாதானம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. வைத்திய சேவை புனிதமானது. எந்த அனர்த்தத்திலும் இந்த உயரிய பணியில் இருந்து விடுபடக் கூடாது. வைத்திய சேவை எந்த சந்தர்ப்பத்திலும் தொடர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

அகிம்சை வழியில் போராடிய எமது இனத்தை அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் தமது அரசியல் பதவிகளுக்காக ஆயுதமேந்தி போராட வைத்ததன் விளைவாகவே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை எமது நாட்டில் யுத்தம் நீடித்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை நிர்க்கதி நிலைக்குள்ளாக்கியிருந்தது.

அதனடிப்படையில் தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தி போராட வைத்த தமிழரசுக்கட்சியினர் இன்றுவரை ஆயுதமேந்திய போராளிகளை வைத்து தமக்கான சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் அவ்வாறு தமிழ் மக்களை அழிவு பாதைக்க தூண்டிய தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தேசியம் என் போர்வைக்குள் இருந்து இன்றுவரை தமிழ் மக்களை அழித்தக்கொண்டிருக்கும் தரப்பினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாடாகும்.

Courtesy: Paarvaikal 
https://paarvaikall.blogspot.com/2018/10/blog-post_88.html

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...