செப்டெம்பர் பதினொன்றுக்கு கணக்கு தீர்க்கும் அமெரிக்காவும் சிதைந்துபோன தேசங்களும் !!


எஸ்.எம்.எம்.பஷீர்       

அமெரிக்க இரட்டை கோபுர  தாக்குதல்கள்   இடம்பெற்ற தினமான செப்டெம்பர் பதினொன்று 2001  , அமெரிக்காவிலும் அதன் மேற்குலக நேச அணிகளாலும் , அந்நிகழ்வுகள் இடம் பெற்ற நாள் வருடந்தோறும் நினைவு கூரப்பட்டாலும் , இம்முறை அந்நிகழ்வுகள் இடம்பெற்ற பத்தாண்டினை முக்கியத்துவம் வாய்ந்த நினைவு நாளாக நினைவு கூறப்படும் நாளில் (அதற்கு காரண கர்த்தா என குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் மரணத்துடன் ), அமெரிக்காவினதும் , அதன் நேச அணியிலுள்ள ஏனைய நாடுகளிலும் , குறிப்பாக பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் , ஜனநாயக விழுமியங்கள் தனிமனித உரிமைகள் , அடிப்படை மனித உரிமைகள் , ஆட்புல நியாயாதிக்கங்கள் என்பன எவ்வாறு மீறப்பட்டன என்பதை தொடர்ந்தும் வெளிவரும் ஆதாரங்கள் நிரூபித்து வருகின்றன . விகிலீக்ஸ் மட்டுமல்லாது , புலானாய்வு பத்திரிக்கையாளர்களின் வெளிப்படுத்தல்கள் , பாதிக்கப்பட்ட நபர்கள் சட்டத்தின் துணை மூலம் வெளிக்கொணரும் மர்மங்கள் உலகின்   ஜனநாயக ஜாம்பவான்களான நாடுகளின் நபுஞ்சகத்தனங்களை நாடிபிடுத்துக் காட்டுகின்றன.  

சட்டவாக்கமும் , ஆக்கிரமிப்பு இராணுவ அத்துமீறல்களும் இராக் ஆப்கானிஸ்தான் என்று தொடங்கி இன்று எல்லையற்று சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில், நாடுகளின் இறையாண்மையை ஆட்புல அதிகாரத்தை மீறும் வகையில் விஸ்தரிக்கப்பட்டு செல்லும் பின்னனனியில் , இந்தவிதமான ஆபத்துக்கள் குறித்து தமது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த அமெரிக்க சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் புத்தி ஜீவிகளும் தயங்கவில்லைஅமெரிக்காவின் செப்டெம்பர் பதினொன்றின் பின்னரான அயல் நாட்டு கொள்கைகள்  , உள்நாட்டு தனிமனித சுதந்திர அத்துமீறல்கள் , அரசியல் நெறிப்படுத்தல்கள் , பிரச்சாரங்கள் , அந்நிய நாட்டு பிரஜைகள் மீதான அத்துமீறல்கள்அடக்குமுறைகள் , அடாவடித்தனங்கள் (குவாண்டனாமா உட்பட்ட சிறைவாசங்கள்) என பல பரிமாணங்களை கொண்டதாக ஒரு ஆபத்தான செல் திசையில் பயணிக்க தொடங்கியபோது எங்கள்  மனச் சாட்சியை நாங்கள் மறுக்க மாட்டோம் என்ற அறிக்கை ஒன்றினை அமெரிக்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , புத்தி ஜீவிகள் சிலரும் வெளியிட்டனர். அதனை தமிழில் மொழியாக்கம் செய்து எனது முன்னுரை ஆக்கத்துடன் "அமெரிக்க மக்களும்
பயங்கரவாதத்தின் மீதான யுத்தமும்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் மாதம்   2002 ம்   ஆண்டுசுயம்” எனும் இலங்கை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுஅதனை "செப்டெம்பர் பதினொன்று" பத்தாண்டு நினைவு நாளில் மீள் பிரசுரம் செய்வது அவசியம் என்று கருதுகிறேன்

       

அமெரிக்க மக்களும் பயங்கரவாதத்தின் மீதான யுத்தமும்

எஸ்.எம்.எம்.பஷீர்

இன்று அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பயங்கரவாதத்திற்கெதிரான எல்லையற்ற யுத்தத்தினை  மேற்கொண்டு வருகின்ற வேளையில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக ஈராக் மீதான யுத்த முஸ்தீபுகள் குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் கைகோர்த்து செயற்பட்டு வரும் வேளையில் அமெரிக்காவினது பல்வேறுபட்ட இரகசியத் திட்டங்கள் அம்பலமாகி வருகின்றனஹேர்ட் ரூட்மன் (Herad Rudman )  என்ற பெயரில் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் வில்லியம் கொஹேன் (William Cohen) மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பாரிய அன்மிய கிழக்குப் பிரதேசம் (Greater Near East Area)  தொடர்பான அறிக்கை சென்ற வருடம் (2001)செப்டம்பரில் அம்பலத்திற்கு வந்தது. இந்த அறிக்கையில் இந்தியக் கண்டமும் அடங்குகின்றது இலங்கையிலுள்ள தமிழ்-சிங்கள போராட்டங்கள் மற்றும் இந்திய முஸ்லிம் - இந்து முரண்பாடுகள் யாவும் நீடிக்கப்படுவதன் மூலம் தங்களது கட்டுப்பாட்டினை எவ்வாறு அத்தகைய நாடுகளின் பாதுகாப்புச் சூழ்நிலையை அழிக்க பயன்படுத்தலாம் எனவும் மத்திய கிழக்கிற்கு அடுத்தாக ஆராயப்பட்டிருந்தது.

இன்று அமெரிக்கா மட்டுமல்லாது .நா. சபை மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவும் எவ்வாறு இரட்டைத்தன்மையுடன் கபடத்தனமாக மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தின் ஸ்திரத்தனமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. எவ்வாறு வளங்கள் நவீன் பல்தேசிய கம்பனிகள் மூலம் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து நியு ஸ்டேட்ஸ்மன் (New Statesman )  பிரபல அரசியல் கட்டுரையாளர் ஜோன் பல்கர் (John Pilger )  என்பவரின்உலகின் புதிய ஆட்சியாளர்கள் (New Rulers of the world)  என்ற புத்தகமொன்று அன்மையில் வெளி வந்துள்ளது  இதில் அவர் அமெரிக்காவின் அதிகாரத்திணிப்பினையும் பொம்மை ஆட்சியாளர்களை நியமிப்பதனையும் புதிய உலக ஒழுங்கு பற்றிய (New World Order ) இலக்குகளையும் அவற்றின் பின்னனியில் உள்ள பிரச்சாரங்களையும் சகல ஆதாரங்களுடனும் ஆவன ஆதாரங்கள் உட்பட் வெளியிட்டுள்ளார் இப்புத்தகம் இன்று புத்தி ஜீவிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது பயங்கரவாத்தின் மீதான யுத்தம் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றினை ஜூன் மாதம் அமெரிக்காவின் பிரபல கல்விமான்கள் ஆய்வாளர்கள் ஜூனியர் மார்டின் லுர்தர் கிங் போன்ற குடியுரிமை செயற்பாட்டளர்கள் எட்வார்ட் செயிட் (Edward Said)  நோம் சொம்ஸ்கி  (Noam Chomskey)  போன்ற பேராசிரியர்கள் உட்பட 68 பேர் கையொப்பமிட்டு எங்கள் மனட்சாட்சியை நாங்கள் மறுக்க மாட்டோம் ( We won’t deny our consciences)   என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளார்கள் . இந்த அறிக்கை நீதியின் குரலாக அமைவதால் இதனை முழுமையாக இங்கு தமிழில் தருகிறேன்.

“எங்கள் மனட்சாட்சியை நாங்கள் மறுக்க மாட்டோம்

"அமெரிக்க அரசாங்கம் வரம்பற்ற ஒரு யுத்தத்தைப் பிரகடணப்படுத்தி முற்றிலும் புதிய அடக்குமுறை நடவடிக்கையை ஆரம்பித்த போது ஐக்கிய அமெரிக்கவிலுள்ள மக்கள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லப்படக்கூடாது  செப்டம்பர் 11ம் திகதி தொடக்கம் உருவாகியுள்ள கொள்கைகளும் மொத்த அரசியல் நெறிப்படுத்தலும் உலக மக்களுக்கு கடின ஆபத்தை ஏற்படுத்துவதாக தோன்றுவதால் இந்த அறிக்கையினைக் கையொப்பமிட்ட நாங்கள் அமெரிக்க மக்களை அவற்றினை எதிர்க்குமாறு அழைக்கின்றோம் மக்களும் தேசங்களும் தங்களுடைய சொந்த தலைவியை நிர்ணயிப்பவர்கள் என்றும் பெரிய சக்திகளின் இரானுவப் பலவந்தங்களிளிருந்தும் அமெரிக்க அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அல்லது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கின்ற எல்லா நபர்களும் தகுந்த சட்ட  செயற்பாட்டிற்கு சமமான உரிமையுடையவர்கள்நாங்கள் கேள்வியெழுப்புதல் , விமர்சித்தல் மாற்றுக் கருத்தினைக் கொண்டிருத்தல் என்பன மதிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறோம்அத்கைய உரிமைகளும் பெறுமானங்களும் எப்பொழுதும் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதுடன்  போராடப்படவும் வேண்டும்.

மனட்சாட்சியுடைய மக்கள் தங்களுடைய சொந்த அரசாங்கங்கள் செய்கின்ற செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் முதலாவதாக எங்கள் பெரிலேயே செயற்படும் அநீதியினை நாங்கள் எதிக்க வேண்டும் எனவே புஷ்ஷின் நிர்வாகத்தினால் இன்று உலகின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற யுத்தத்தினையும் ஒடுக்குதலையும் எதிர்க்குமாறு நாங்கள் அமெரிக்க மக்களை அழைக்கின்றோம் இது நீதியற்றது நெறிமுறையற்றது சட்ட முரணானது நாங்கள் உலக மக்களுடன் பொதுவான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

செப்டெம்பர் 11 ‘பயங்கரவாதசம்பவங்களை நாங்களும் அதிர்ச்சியுடன் பார்த்தோம்  நாங்களும் அப்பாவி மக்களின் சாவிற்காக துக்கப்பட்டோம்.அந்த பயங்கர படுகொலைக் காட்சிகளை நாங்கள் அதனையொத்த பக்தாத் , பனாமா நகரம் ஒரு தலைமுறைக்கு முன்னரான வியட்நாம் காட்சிகளுடன் ஞாபகப்படுத்தியவாறு அதிர்ச்சியுற்றோம் . ஏன் இத்தகைய சம்பவம்  நிகழ்ந்தது என்று துயருற்று கேள்வி எழுப்பிய இலட்சக்கணக்கான மன வேதனையுற்ற அமெரிக்க மக்களுடன் நாங்கள் இணைந்து கொண்டோம் ஆனால் உயர்மட்டத் தலைவர்கள் பலிவாங்கும் மனோபாவத்தை கட்டவிழ்த்து விட்டபோது துக்கம் அனுஷ்டித்தல் மாத்திரமே ஆரம்பித்து. ஆனால் அவர்கள் நன்மைக்கெதிராக தீமை என்ற இலகுவான வாக்கியத்தை வெளிப்படுத்தினார்கள் இது அச்சுறுத்தபட்ட குற்றம் சாட்டும் தொடர்பு சாதணங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பயங்ரச் சம்பவங்கள் ஏன் நிகழ்ந்தன  என்று கேட்டால் அது ராஜதுரோக வரம்பிற்குற்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள்அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை  ஓரே ஒரு சாத்தியமான விடையாக வெளிநாட்டில் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமும்  உள்நாட்டில் அடக்குமுறைகளும் அமைந்தன.


எங்களது பெயரால் புஷ்ஷின் நிர்வாகம் காங்கிரசின் அதிக பட்ச அங்கீகாராத்துடன் மட்டும் ஆப்கானிஸ்தானை தாக்கவில்லை. ஆனால் தனது தோழமை  நாடுகளுடன் சேர்ந்து இராணுவப்பலத்தினை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அள்ளி இறைக்கின்ற  உரிமையை தனக்குத்தானே வரிந்து தொண்டிருக்கின்றது. இரக்கமற்ற எதிர் விளைவுகளை பிலிப்பைன்சிலிருந்து  பாலஸ்தீனம் வரை நாங்கள் உணர்ந்துகொண்டோம் இன்று செப்படம்பர் 11 பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற ஈராக் மீது முழுமையான யுத்ததைதொடுப்பதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயார்படுத்தி வருகின்றது. தூன்தோன்றித்தனமாக கமான்டோக்களையும் கொலைஞர்களையும் வெடி குண்டுகளையும் தனக்கு வேண்டிய இடத்தில் இறக்குவதற்குள்ள வரம்பற்ற அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டிருக்குமாயின் எத்தகைய உலகமாக இது அமையப் போகின்றது.

எங்களது பெயரால் அரசாங்கம் இருவகைப்பட்ட மக்களை ஐக்கிய அமெரிக்கவினுள் உருவாக்கி இருக்கின்றது.ஒருவகையினர் அமெரிக்க சட்டமுறைமைக்குள் அடிப்படை உரிமைகளுக்கு ஆகக்குறைந்தது  வாக்குறுதி அளிக்கப்பட்டவர்கள் மற்ற வகையினர் எந்தவித உரிமையும் அற்றவர்களாக இன்று காணப்படுபவர்கள் அரசதங்கம் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை சுற்றிவலைத்து இரகசியமாகவும் கால வரையறையற்றும் தடுத்து வைத்துள்ளனர், நுற்றுக்கணக்கானோர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்இன்னும் நுற்றுக்கணுக்கானோர் சிறையிலே வாடுகின்றனர். கடந்த சகாப்பதங்களில் முதல் முறையாக குடிவரவு நடைமுறைகள் குறிப்பிட்ட தேசத்தினரை பிரித்தெடுத்து சமமற்ற முறையிலே நடத்திவருகிறது.

எங்களது பெயரில் அரசாங்கம் சமூகத்தின் மீது ஒரு இருண்ட அடக்குமுறை திரையினை இட்டிருக்கின்றது ஜனாதிபதியின் பேச்சாளர் மக்களை அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்குமாறு எச்சரிக்கின்றார்அதே நேரம் மாற்றுக்கறுத்துக் கொண்ட கலைஞர்கள் , புத்திஜீவிகள் , பேராசிரியர்கள் தங்களுடைய கருத்துதுக்கள் திரித்து கூறப்படுவதை காண்கிறார்கள்தேசாபிமானச் சட்டம் என்றழைக்கப்படும் சட்டமானது அதனை ஒத்த பல்வேறு மாநில மட்ட நடவடிக்கைளுடன் சேர்ந்து பொலிஸாருக்கு மேற்பார்வைக்குற்பட்டபரந்துபட்ட புதிய தேடுதல் நடாத்தும், கைப்பற்றும்  அதிகாரங்களையும்  அப்படியில்லாவிடில் இரகசியமாகவும் வழக்கு நடவடிக்கைகளை ரகசிய நீதிமன்றங்களில் நடாத்தும் அதிகாரத்தையும் வழங்குகின்றது.

எங்களது பெயரால் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசின் ஏனைய பகுதிகளுக்குரிய பதவிகளையும் தவறாக கையாண்டு வருகிறார்கள். இராணுவ நீதி தளர்ச்சியான சான்றுகளுடன் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மேன் முறையிட்டு உரிமையின்றி நிறைவேற்று கட்டளைகளினால் உருவாக்கப்பட்டள்ளது. ஜனாதிபயின் பேனாக் கீற்றுடன்  குழுக்கள் பயங்கரவாதிகள் என்ற பிரகனப்படுத்தப்படுகின்றனர்.

நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் தலைமுறைக்கு நீடிக்கும் யுத்தம் என்று புதிய உலக ஒழுங்கு பற்றியும் (New World Order)  பேசும் போது நாம் அவற்றினை தீவிரமாகவே எடுக்கவேண்டும்.  உலகு நோக்கிய புதிய திறந்த மேலாதிக்க கொள்கையினையும் உரிமைகளையும் மட்டுப்படுத்துகின்ற அச்சத்தினை உருவாக்க கையாளுகின்ற உள் நாட்டுக்கொள்கையினையும் நாங்கள் எதிர்க்கின்றோம்.

கடந்த மாதங்களின் நிகழ்வுகளில் ஏவுகணையின் விசை ஒத்ததான அழிவும்  உள்ளது. அவை எவற்றிற்காக என்று பார்க்கப்பட வேண்டியுள்ளதுடன் எதிர்க்கப்படவும் வேண்டும்  வரலாற்றில் அநேக சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்ப்பதற்கு மிகவும் காலம் கடந்து விட்டது என்பது வரைக்கும் மக்கள் காத்திருக்கிறார்கள். .

ஜனாதிபதி புஷ் (Bush) " நீங்கள் ஒன்று எங்களுடன் அல்லது எங்களுக்கு எதிரானவர்களுடன் என்ற பிரகனப்படுத்தியுள்ளார் . இதுவே எங்களது பதிலும் நாங்கள்  எல்லா அமெரிக்க மக்களுக்காகவும் பேசுவதை அனுமதிக்க மறுக்கின்றோம் எங்களது கேள்வியெழுப்பும் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்  பொய்யான பாதுகாப்பு வாக்குறுதிகளுக்கு பகிரங்கமாக எங்கள் மனச்சாட்சிகளை நாங்கள் கையளிக்கமாட்டோம் இந்த யுத்ததிற்கு தரப்பினராக இருப்பதற்கு நாங்கள் மறுப்பதுடன் எங்களது பெயரால் அல்லது எங்களது நலன்களுக்காக இந்த யுத்தங்கள் தொடுக்கபட்டுள்ளன என்ற ஊக்கத்தை ஏற்படுத்துவதையும் நாங்கள் மறுதலிக்கின்றோம். இந்த கொள்கைகளால் உலகெங்கும் துயறுரும் மக்களுக்கு எங்கள் கரங்களை நீட்டுகின்றோம் எங்களது ஐக்கியத்தினை நாங்கள் சொல்லும் செயலிலும்  காட்டுகின்றோம்.

இந்த சவாலினை எதிர்கொள்ளுமாறு இந்த அறிக்கையில் கையப்பமிடும் நாங்கள் எல்லா அமெரிக்க மக்களையும் அழைக்கின்றோம். இப்போது இப்போது கேள்விக்குற்படுத்தலும் ஆட்சேபனையும் போதாது. திட்டவட்டமாக இந்த பாரிய அழிவு சத்தியினை நிறுத்துமாறு அதிகம் அதிகமாக இத்தகைய நடடிக்கைகள் தேவையென்பதை நாங்கள் உணர்ந்து எங்களது அங்கீகாரத்தையும் ஆதரவையும் வழங்குகின்றோம்இஸ்ரேலிய ரிசேர்வ் படையினர்  தங்களது தனிப்பட்ட இடர்பாடுகளையும் பொருட்படுத்தாது, எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று பிரகடனம் செய்து மேற்கு கரை காஸா குடியிருப்புக்களில் சேவையாற்ற மறுத்தலில் இருந்து நாங்கள் மன ஊக்கம் அடைகின்றோம்.

ஐக்கிய அமெரிக்கவின் கடந்த காலங்களிருந்து மனச் சாட்சி , எதிர்ப்பினை காட்டுதல்  என்பவற்றிற்கு பல உதாரணங்களை காணலாம். அடிமைத்தனத்திற்குநிலத்திற்கு கீழான புகையிரதப் பாதைக்கு எதிராக கிளர்தெழுந்து போரடியவர்கள், அரசாங்க கட்டளைகளை  நிராகரித்து வியட்நாம் யுத்ததிற்கு இனங்காதவர்கள் அதற்கான சட்டவரையினை எதிர்த்தவர்கள் அத்தகைய எதிர்ப்பாடல்களுடன் தங்களுடைய ஆதரவைக்காட்டி நின்றவர்கள் எங்களது மௌனத்தையும், செயற்படாதிருக்கின்ற தவறிணையும் பார்த்துகொண்டிருகின்ற உலகத்தினை நாங்கள் நம்பிக்கையிழக்க அனுமதிக்க கூடாதுபதிலாக உலகம் எங்கள் தீர்மானத்தை செவிமடுக்கட்டும். ஒடுக்குமுறை யுத்த அமைப்புக்களை  நாங்கள் எதிர்ப்போம். அவற்றினை நிறுத்துவதற்கு சாத்தியமான ஒவ்வொன்றையும் செய்வதற்கு மற்றவர்களுடன் அணிதிரள்வோம்.”

நன்றி: சுயம்” (அக்டோபர் மாதம்   2002 )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...