நெருக்கடி காலங்களில் சதா பொய்யுரைக்கும் ஊடகங்கள்

 See the source image

 Image: insiderzim.com

 
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணம், 40 ஆண்டுக்கு மேலாக இலங்கையின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்ததே. இலங்கைக்கு 51
பில்லியன் அமெரிக்கன் டொலர் வெளிநாட்டுக் கடன் உள்ளது. ஆனால் இலங்கையின் கையிருப்பில் தற்போது 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே (இதுவரையில் உறுதியளிக்கப்பட்டுள்ள கடனுதவிகள் சேர்க்கப்படவில்லை)


இருக்கின்றன. உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கே கையிருப்பிலுள்ள அந்நியச் செலவாணி போதுமானதாக இல்லை. அப்டியிருக்கையில் வெளிநாட்டுக் கடனை மீளச்செலுத்துவது எப்படி? இதனால் நிலுவையில் உள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களின் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை
நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி மிகக் குறைந்த அளவிலிருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடுகளை விதித்தும், பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலையிலும் இலங்கை அரசு உள்ளது. இதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலைவாசியும் அதிகரித்துள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், பல்வேறு வன்முறை நடவடிக்கைகளும் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் தற்போதைய அரசாங்கத்தை பதவி
விலகக்கோரி காலிமுகத்திடலிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இலங்கை அரசுக்கெதிராக ஏதோ இலங்கை மக்கள் அனைவருமே திரண்டு போராடுவது மாதிரியும், இலங்கை அரசு இதோ கவிழ்ந்துவிடுமென்ற மாதிரியுமான செய்திகளை இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள பல தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பரப்புரை செய்த வண்ணமுள்ளன. அத்துடன் திகிலூட்டும் வகையில் பரபரப்பான பொய்களையும் கட்டவிழ்த்து விடுகின்றன.


இதற்கு உதாரணமாக கீழேயுள்ள இரண்டு செய்திகள்:
‘கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம். நேற்று
நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சு+ழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மெட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்’ என பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது.


‘இலங்கை வாழ் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஒரு
பகுதியாக(மாநிலமாக) அறிவிக்க தயாராக உள்ளோம். அத்துடன் தற்போது இருக்கும் நெருக்கடியான பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து அதன் விலைகளை உடனடியாக குறைப்போம். மேலும், இலங்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் தீர்த்து வைக்க கட்டம், கட்டமாக நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம்’ என்று தனது சொந்த ருவிட்டர் மூலம் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.


மற்றொரு செய்தி, உகாண்டாவைச் சேர்ந்த செரனிற்ரி குரூப்
(Serenity Group Ltd) நிறுவனத்தையும் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவையும் இணைத்து சமூக ஊடகங்களில் வெளிவந்தது.
அதற்கு அந்நிறுவனம் விடுத்துள்ள பகிரங்க அறிக்கையொன்றில், ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உகாண்டாவில் உள்ள தமது நிறுவனங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி, ஊடகங்களில் கட்டுரையொன்று பரவலாக பரவி வருவதாக தமது கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டதாகவும், இந்த கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள்
தவறானவை, ஆதாரமற்றவை, பொய்யானவை என்று திட்டவட்டமாகவும் உறுதியாகவும் நிராகரிக்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளது. இறுதியாக சமூகவலைத்தளங்களில் வந்த செய்தி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நோயுற்று ஆஸ்பத்திரியொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது. அதற்கு, ‘தான் சிறந்த தேக ஆராக்கியத்துடன் இருப்பதாகவும் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளை முற்றாக
நிராகரிப்பதாகவும், ஒரு நோயாளியைப் பார்ப்பதற்குக் கூட தான்
ஆஸ்பத்திரியின் பக்கம் செல்லவில்லையென்றும்’ என பிரதமர்
பத்திரிகைகளுக்கு கூறியுள்ளார்.

See the source image

Photo:gettyimage.com 


இவ்வாறு ஏராளமான கட்டுக்கதைகள் நாளாந்தம் ஊடகங்களில்
வெளிவந்தவண்ணமுள்ளன. இதனைப் பார்க்கையில் இலங்கைப் போராட்டங்கள் ஒன்றும் திடீரென்று, சில வாரங்களுக்கு முன்னர் முளைத்திருக்க வாய்ப்பில்லையென்றே தோன்றுகின்றது. இதற்கு நீண்டகாலத் தயாரிப்பும் அந்நிய சக்திகளின் பின்னணியும் மிக, மிக அவசியம். ரணில்-மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் ஆதரவை இழந்து, ஆட்சி மாற்றமென்பது தவிர்க்க முடியாதென்ற நிலைமை 2017 ஆம் ஆண்டளவில் உருவானது. அப்போதே, புதிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டிருக்கலாம். 

இதற்கு காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினர் சார்ந்த எந்தவொரு அரசாங்கமும் மேற்குலகின் கைப்பொம்மைகளாக இருக்கமாட்டார்கள் என்பதே. இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும். இதனால் அரசு உடனடியாக செய்ய வேண்டியது டொலர் பற்றாக்குறை ஏற்படக் காரணமான விடயங்களை நன்கு ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து, டொலர் கையிருப்பை அதிகரிப்பதாகும். தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீள்வது ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, ஏன் ஒரு சில வருடங்களிலோ செய்ய முடியாத ஆச்சரியமான விடயம் என்பதை இலங்கையர்கள் அனைவரும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

Source: Editorial Vaanavil April 2022  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...