பொருளாதார நெருக்கடி நிலைக்கு விரைவில் தீர்வு -நிதியமைச்சர் அலிசப்ரி நிதியமைச்சர் அலிசப்ரி


நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில்
மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாம் கட்ட பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளதாக நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சு+ழ்நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
(முசளைவயடiயெ புநழசபநைஎய) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர்கள் மத்தியில் சிறந்த புரிதல் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Image result for Ali Sabri Sri Lanka. Size: 180 x 170. Source: www.sundayobserver.lk
Minister of finance Ali Sabri 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருந்து காணொலி மூலம் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி ஊடக மாநாட்டில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி
சப்ரி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல மட்ட
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது சரத்துக்கு இணங்க குறிப்பிடப்பட்டுள்ள
பரிந்துரையின்படி இலங்கைக்கு கடன்  வழங்கக் கூடிய வாய்ப்புகள்
கிடையாதென ஏற்கனவே தீர்மானித்திருந்தபோதும், அது தொடர்பில்
தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் கடன் வழங்குவதற்கான
வாய்ப்பு மற்றும் புதிதாக பெற்றுக்கொள்ளக்கூடிய கடனை மீளச்
செலுத்துவதற்காக முறைமை தொடர்பில் சாத்தியமான இணக்கப்பாட்டுக்கு
வரமுடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்தகைய சு+ழ்நிலையில் கடன் பெற்றுக் கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், ஏப்ரல் மாதத்தில் 500மில்லியன் டொலரும் ஜூன் மாதத்தில் மேலும் 500மில்லியன் டொலரும் மற்றும் ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர்களையும் மீளச்செலுத்த வேண்டியுள்ளதாகவும், தற்போது நிலவும் சு+ழ்நிலையில் மேற்படி கடன் தவணைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள மேற்கொள்ளப்பட்ட போதும், அது
வெற்றியளிக்கவில்லை எனவும், தவிர்க்க டியாது அக்கடன்களை செலுத்த
வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்கு
பிணையாளர்கள் தேவைப்படுவதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள்
உண்மைக்குப் புறம்பானதென்றும் அதனை தாம் நிராகரிப்பதாகவும்
அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சு+ழ்நிலையை கருத்தில்
கொண்டு தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச
நிறுவனங்கள் முனைப்பாக செயல்பட்டு வருவதுடன் இலங்கையில் காலை வாரி விடுவது மற்றும் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நாட்டை மேலும் மோசமான நிலைக்கே கொண்டு செல்லும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சு+ழ்நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவர் மீது மட்டும் விரல் நீட்டுவது முறையற்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினுடான
பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன்
அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Source: vaanavil 26.04.22

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...