யுகடனவி (Yugadanavi ) ஒப்பந்தம் சம்பந்தமாக முரண்பட்டு நிற்கும் அமைச்சர்களின் நிலைப்பாட்டை டியு குணசேகர ஆதரிக்கிறார்!

 

ஐலன்ட் பத்திரிகையின் சமிந்திரா பெர்டினண்டோவுக்கு (Shemindra Ferdinando) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியு குணசேகர (D.W Gunesekera)  வழங்கிய செவ்வியின் சாராம்சம்:

West Coast Power (Pvt) Ltd என்ற நிறுவனத்துக்கு 40 வீதமான பங்குகளை வழங்கிச் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த முரண்பாடான அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் செய்கை சரியென முன்னாள் அமைச்சர் டியு குணசேகர கூறுகிறார். இந்த ஒப்பந்தம் 2021 செப்ரெம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

குணசேகர கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடானஅத்த (Aththa பத்திரிகையில் ஜனவரி 02 ஆம் திகதி எழுதிய ஒரு கட்டுரையில், சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூன்று அமைச்சர்களும் இந்த ஒப்பந்தம் சம்பந்தமான நீதிமன்ற வழக்கில் மனுதாரர்களாக இல்லை. பதிலுக்கு அவர்கள் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இது அமைச்சரவை நடைமுறைகளுக்கு முரண்பாடான ஒன்றல்ல என வலியுறுத்திக் கூறியுள்ளார்.

 

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை குணசேகரவுக்குப் பதிலாக டாக்டர் ஜி.வீரசிங்க தற்பொழுது வகித்து வருகிறார். கட்சியின் நீண்டகால உறுப்பினரான மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகி முதல் தடவையாக நாடாளுமன்ற அரசியலிலும் பிரவேசித்துள்ளார். இந்த நிலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று அமைச்சர்களும் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரித்து நிற்கிறது.

இந்த ஒப்பந்தம் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றிச் டியு குணசேகர செய்யப்படாததால் மூன்று அமைச்சர்களும் அதை எதிர்ப்பது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயல் ஆகாது என குணசேகர வாதிடுகிறார்.

உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமான வழக்கை ஜனவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய (துயலயவொய துயலயளரசலைய) தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு வழக்கை விசாரிக்கும். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (ளுதுடீ) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி மற்றும் வசந்தா சமரசிங்க, கொழும்பு மாவட்ட பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித், வண.எல்லே குணவன்ச தேரர் மற்றும் ஏனைரடiளுநஎயமய ளுயபெயஅயலய ஆகியோர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் கருத்துக் கூறிய குணசேகர, மூன்று அமைச்சர்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த சூழலில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவையில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக மாறுவதை பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் தடுத்திருக்க

முடியும். அரசாங்கத்தின் தோல்விகளுக்கு அது அமைச்சரவையின் ஒரு பகுதியினர் தெரிவித்த கருத்துகளை செவிமடுக்காததும் ஒரு காரணம். இது ஒரு முதல் தவறும், முதல் குற்றமும் ஆகும் எனத் தெரிவித்தார்.

நாட்டின் இறைமைக்கும் தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானதுமானதும்,

தற்போதைய பூகோள அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி  திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தக் கூடியதும், திறைசேரிக்கு சொந்தமானதுமான இந்த விடயத்தை சரியான நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், வெளிப்படைத் தன்மை அற்றும் எவ்வாறு 40 வீதமான பங்குளை இந்த ஒப்பந்தத்தின் மூலம் மற்றவர்களுக்கு வழங்க முடியும் என குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

குணசேகர மேலும் விபரிக்கையில், தற்போதைய நெருக்கடியைக் கையாள்வதில் பொதுஜன பெரமுன அரசாங்கம் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது. எதிர்மறைகள், சவால்கள் என்பவற்றை விளங்கிக் கொண்டு சரியான பொருளாதார யுக்தியை வகுத்துச் செயல்படுவதற்குப் பதிலாக, அரசாங்கத்திலுள்ள செல்வாக்கு மிகுந்த ஒரு பகுதியினர் தமது தோல்விகளுக்கு கொவிட் – 19 பெருந்தொற்று மீது பழியைப் போடுகின்றனர் எனக் கூறியதுடன், அரசாங்கம் ஒரு திருப்பு நிலையை எடுத்து புதிய மாற்று வழியைக் கண்டறியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. என்பன இந்த யுகடநவி பிரச்சினையால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து சரியாக விளங்கிக் கொள்ளும் ஆற்றல் அற்றவையாக இருக்கின்றன. ..சக்தியும், .தே.கவும் தற்போதைய நெருகடிக்கு தவறான முகாமைத்துவம் காரணம் எனக் கருதுகின்றன. ஆனால் ஜே.வி.பியோ வீண் விரயம், ஊழல், பொது நிதியைத் தவறாகக் கையாண்டு தேசிய பொருளாதாரத்தைச் சீரழித்தல் என்பனவே இன்றைய நெருக்கடிக்குக் காரணம் எனக் கருதுகின்றது என குணசேகர அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்.

 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக் குறித்தும், விலைவாசிகள் அதிகரித்துச் செல்வது பற்றியும் கருத்துத் தெரிவித்த குணசேகர, அரசாங்கம் விலைகளைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விலகியிருப்பது தவறு என்றும், அது பொது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1956 இற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெளிவு இல்லை. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மையான ஏகாதிபத்தியஎதிர்ப்பு மற்றும் தேசபக்த கொள்கைகளில் நாட்டமில்லை. 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமை தாங்கிய ஐ.தே.. அரசாங்கத்தின் கொள்கைகளே இன்றும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. எனவே, நாடு முன்நோக்கிச் செல்வதானால் அடிப்படையான மாற்றம் ஒன்று தேவை என டியு குணசேகர குறிப்பிட்டார்.

Source: Vaanavil 133 January 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...